Tuesday, October 25, 2016

உங்கள் சாமர்த்தியம் வருமா மோடி?




முத்தலாக் மூலம் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதை அனுமதிக்க முடியுமா என்று முதலைக் கண்ணீர் வடித்துள்ள மோடி அவர்களே?

முஸ்லீம் ஆண்களை கொன்று குவித்து, அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளி அதன் மூலம்தானே அந்தப் பெண்களின் வாழ்வை சீரழிக்க வேண்டும்? அதைச் செய்ய நீங்கள் இருக்கையில் எதற்கு முத்தலாக் என்றுதானே கேட்கிறீர்கள்?

நீங்கள் என்ன தலாக் சொல்லியோ இல்லை விவாகரத்து வாங்கியோ, உங்கள் மனைவியின் வாழ்வை சீரழித்தீர்கள்?

அப்படியே தள்ளி வைத்து விட்டு, திருமணம் ஆகாத பிரம்மச்சாரி என்று நடித்தீர்களே, உங்கள் சாமர்த்தியமான பாணியை கடைபிடிக்காமல் எதற்கு முத்தலாக் என்றுதானே கேட்கிறீர்கள்?

உங்களை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்வை முதலில் சரி செய்யுங்கள். பிறகு ஊருக்கு உபதேசம் செய்ய புறப்படுங்கள்.

முத்தலாக் முறை முஸ்லீம் பெண்களுக்கு எதிரானதுதான். அது குறித்த கவலையும் அதை மாற்ற வேண்டும் என்ற அக்கறையும் எங்களுக்கு உண்டு. 

ஆனால் அது பற்றியெல்லாம் பேசும் அருகதைதான் உங்களுக்கு கிடையாது. 

ஆனாலும் என் நன்றி மோடி. என்னை ஒரு சிறுகதை எழுத்தாளனாக உருவாக்கியது  நீங்கள்தான். 

9 comments:

  1. தலாக் இஸ்லாமிய தர்மம் அதாவது அறம்.

    கிளி போல ஒரு மனைவி இருந்தாலும் குரங்குபோல் ஒரு வைப்பாட்டி---பெரிய மனிதர்கள் கௌரவம்.
    மாற்றான் மனைவிக்கு வாழ்வளிப்பது ஒரு புரட்சி.
    மாற்றான் கணவனை வைத்து சிலை வைப்பதி புரட்சி மார்க்கம்.
    மனைவி துணைவியாகி துணைவியின் மனைவி என்பது ஒரு ரகம்.

    ஆண்மை இல்லாதவனுக்கு திருமண செய்வித்து அவளிடம் இன்பம் காண்பது ஒருவகை.

    அறுபது வயதுக்குமேல் ௨௯ஐ திருமணம் செய்வது சீர்திருத்த பகுத்தறிவு.

    இப்படி பார்த்தால் இராமாயண காலத்தில் இன்று வரை ஆட்சி செய்வோர் அனைவருமே

    தனிப்பட்ட வாழ்க்கையில் தரமானவர்களா ? என்பது கடினம்.மனசாட்சி இல்லா விஷயங்கள்,

    ReplyDelete
  2. செம செருப்படி... வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. செம செருப்படி.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பிரமச்சாரி என வேடமிட்டு, பின் வேட்பாளர் படிவத்தில் ஏற்கனவே திருமண விபரத்தைக் குறிப்பிட்டு இரட்டை வேடமிட்ட மோடியின் ஊருக்கு உபதேசம் தொடர்பாக வரைந்த கார்ட்டூன், உங்கள் பார்வைக்காக...

    https://www.facebook.com/sardhaart/

    ReplyDelete
  5. மனைவியோடு வாழ்வதா வேண்டாமா என்பது அவரது சொந்த விருப்பம். அதைப் பற்றி பேசும் அருகதை உனக்கு கிடையாது

    ReplyDelete
  6. யப்பா, அனானி, மனைவியோடு வாழ்வதா, தள்ளி வைப்பதா என்பதெல்லாம் அவரு சொந்த விஷயம்தான். தனக்கு கல்யாணமே ஆகலைன்னு ஏன்யா மறைச்சாரு? சரி, தள்ளி வைச்சாருள்ள, முறைப்படி டைவர்ஸ் வாங்கி இருக்க வேண்டியதுதானே? தலாக் சொல்லாமலே அந்தம்மா கழுத்தை அறுக்கிறாரே! இந்த மனுஷந்தான் பிரதமரா இருக்க அருகதை இல்லாதவர்

    ReplyDelete
  7. //இந்த மனுஷந்தான் பிரதமரா இருக்க அருகதை இல்லாதவர்// Who is asking certificate from you? you are not a certifying authority.

    ReplyDelete
    Replies
    1. As a tax paying citizen, I will say million times that Modi is NOT FIT to be a PM. It is a tragedy that this criminal with cheap mentality is supported by some idiotic persons. If I should not say, Who can tell? Obama or Mallayya? Cowards hiding their face alone don't have the authority to question me.

      Delete
  8. சொம்பு நைந்து போச்சே அனானி!

    ReplyDelete