Tuesday, October 4, 2016

மோடியின் துல்லியமான தாக்குதல் – தமிழகத்தின் மீது





காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றும் அந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் மத்தியரசு சொல்லியுள்ளது ஒன்றும் அதிர்ச்சியளிக்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவர்களுக்கு என்றுமே விருப்பம் கிடையாது. உச்ச நீதிமன்றம்தான் அதற்குத் தடையாக இருக்கிறது என்று தமிழக பாஜக ஆட்கள் மட்டும்தான் கதை கட்டிக் கொண்டிருந்தார்கள்.

இப்பிரச்சினையில் தலையிட முடியாது என்று மோடி கைவிரித்ததே, தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட முடியாது என்பதால்தான். இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

ஏற்கனவே பெங்களூருவில் கலவரம் செய்து ஆதாயக் கணக்கை தொடங்கி விட்டார்கள். இந்த முடிவின் மூலம் கர்னாடகக் காவலர்கள் என்று இன்னொரு பிம்பத்தையும் பெற்று விட்டார்கள். அப்படியே அந்த வெறியை இன்னும் தக்க வைக்க வேறு ஏதாவது கூட செய்வார்கள்.

ஹொகனேக்கலில் பரிசலில் பயணம் செய்துதானே யெடியூரப்பா முதல்வரானார்! இப்படியெல்லாம் செய்தால்தானே மீண்டும் கர்னாடகாவில் ஆட்சியைப் பிடிக்க முடியும்?

எப்படியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. தமிழகத்து பாஜகவினர் வொர்த் வெறுமனே பிரியாணி திருடுவதும் செல்போன் திருடுவதும்தான் என்பது மோடிக்கும் தெரியுமல்லவா?

சரி, தமிழகத்தின் மீது மோடி நிகழ்த்திய இந்த துல்லியமான தாக்குதலை யாரெல்லாம் பாராட்டப் போகிறார்கள்?

3 comments:

  1. இந்த மோடி (மஸ்தானை) பற்றி இரண்டு வருஷத்திற்கு முன்பே நடுநிலையாளர்களுக்கு தெரியும் தமிழனை முதுகில் குத்துவார் என்று அவர்கள் யாரும் இப்போது அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் சில சொம்பு தூக்கிகள் மோடி நல்லவரு வல்லவரு சூப்பர்மேனு என்று எல்லாம் நம்பியவர்கள் தான் தலை சுத்தி உக்காந்திருக்கிறார்கள். ஐயோ பாவம். இந்த ஆளை நம்பாதிக்கடா என்று சொன்னால் கேட்டாத்தானே ! இன்னும் இந்த ஆளை நம்பிக்கொண்டு ஒரு கூட்டம் உள்ளது அதை நினைத்தால் தான் வேதனையாக உள்ளது. தமிழா விழித்துக்கொள். தொங்கியது போதும் விழி விழி !!

    மகாராசன்

    ReplyDelete
  2. இதுக்கு முன்னாடி மத்திய அரசில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?

    நதிகள் மாநில பிரச்சனை ...அதில் மத்திய அரசு தலையிட முடியாது ...தலையிடவும் கூடாது.....

    தமிழகத்தில் அரசு நடத்தி வரும் சாராய சாம்ராஜ்ஜியத்தில் எவ்வாறு மத்திய அரசு தலையிட முடியாதோ அதேமாதிரி காவிரி பிரச்சனையிலும் தலையிட முடியாது.

    கழக அரசுகள் தமிழகத்தை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்க வில்லை. தாங்கள் சாப்பிட்டது போக சில்லறையை இலவசங்களாக இறைத்து குட்டிச்சுவராக்கி விட்டன.

    வேட்டிக்குள்ளேயெ ஓணாண வச்சுக்கிட்டு, வேலிய பழி சொல்கிறார்கள்.

    ReplyDelete
  3. தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை மோதி அவர்கள் மறந்துவிட்டாரா ?
    கர்நாடகத்தில் அடுத்து ஆட்சி பிஜேபி அமைக்க காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டை
    காவு கொடுத்துவிட்டார். தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு செல்லாக்காசு என்பதால்
    அப்படி செய்கிறார் என்றாலும் அவர் ஒரு நாட்டின் பிரதமர் என்பதை மறந்துவிட்டார் .
    விதவிதமான உடைகளை அணிந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து
    காலத்தை கழிக்கும் இவரை எப்படி 2019 வரை சகித்துக்கொள்வது.?

    ReplyDelete