Sunday, April 17, 2016

டாஸ்மாக் வாசலில்



இரு கழகங்கள் அளித்த பரிசு.

கடந்த ஞாயிறு அன்று நடந்த சம்பவம் இது.

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக மாமண்டூர் சென்று கொண்டிருந்தோம்.

ஏதாவது ஒரு இடத்தில் சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டு செல்வோம் என காஞ்சியிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் ஒரு பூட்டிக் கிடந்த கட்டிடம் வாசலில் காரை நிறுத்தினோம்.

காரை நிறுத்திய இரண்டு நிமிடங்களுக்குள்ளாக அங்கே ஏழெட்டு ஆட்கள் வந்து விட்டார்கள். ஒரு வயதான நபர் கொஞ்சம் தள்ளாட்டத்துடன் வந்து “என்ன சார் இன்னிக்கு கடை கிடையாதா?” என்று கேட்டவுடன்தான்  அந்த பூட்டிக் கிடந்த கட்டிடம் “டாஸ்மாக்” என்று புரிந்தது.

இதற்கு மேல் இங்கிருந்தால் சரிப்படாது என்று உடனடியாக புறப்பட்டு விட்டோம்.

புறப்படும் முன்பாக அந்த இடத்தை சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

தமிழகம் கழகங்களின் ஆட்சியில் எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதை இப்படங்கள் சிம்பாலிக்காக உணர்த்துகிறது.






 


தமிழக மக்களை டாஸ்மாக் குடிமகன்களாக மாற்றியதுதான் தமிழகத்திற்கு இரு கழகங்கள் அளித்துள்ள பரிசு.

இந்த லட்சணத்தில் ஒருவர் படிப்படியாகவும் இன்னொருவர் ஒரேயடியாகவும் மது விலக்கை கொண்டு வரப் போகிறார்களாம்.

காலக் கொடுமை.


7 comments:

  1. தோழர்! கேக்குறன்னு தப்ப நினைச்சுகாதீங்க, நீங்க பிரச்சாரம் செய்யுற கூட்டணியோட வருங்கால முதல்வர், ரொம்பவுமே தள்ளாட்டமாக வருகின்றார். அவர் பேசுவது கூட புரிந்துகொள்ள முடியவில்லை (உடற்குறையோ வயதோ கிடையாது). பிறகு மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தினை மீட்பார் என்று நம்புகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. கல்கியில் எழுத்தாளர் ஞானி எழுதியுள்ளதை படிக்கவும்

      Delete
    2. link kodukkavum
      -old school buddy

      Delete
  2. ஏதாவது ஒரு குதிரையில் சவாரி செய்தே பழக்கப்பட்ட இடதுசாரிகள் மக்கள் நலக்கூட்டணி அமைத்தவரை அவர்கள் அளவில் ஒரு மாற்றம் தெரிந்தது தான்.ஆனால் விஜயகாந்த் என்கிற, கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க கூடிய ஒரு மனிதனை முதல்வர் வேட்பாளராக ஏற்று வழிமொழிகின்ற நிலை மிகவும் அவமானகரமானது.மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்ற விஜயகாந்திற்கு ஞானியின் நற்சான்று கிடைத்தது உங்களுக்கெல்லாம் பெரிய விஷயமாக தெரிவது வேடிக்கையாக தெரியவில்லையா? நான் திரும்பவும் சொல்கிறேன்.விஜயகாந்த் கட்சி 30-40 தொகுதிகளில் வெற்றிபெறுமானால், திமுகவிற்கும் அந்தளவிற்கு பற்றாக்குறை ஏற்படுமானால் அவர்களிருவரும் நல்ல ஒரு ‘ஆரம்பத்திற்கு’ தயாராகிவிடுவர். மறுபடியும் ஒரு ’சுய விமர்சனம்’ செய்து கொள்ளுகின்ற வழமையான நிகழ்வை நடத்தி முடிப்பீர்கள்.இதெல்லாம் இடது சாரிகள் அரசியலில் சகஜமுங்க!!

    ReplyDelete
  3. ஏதாவது ஒரு குதிரையில் சவாரி செய்தே பழக்கப்பட்ட இடதுசாரிகள் மக்கள் நலக்கூட்டணி அமைத்தவரை அவர்கள் அளவில் ஒரு மாற்றம் தெரிந்தது தான்.ஆனால் விஜயகாந்த் என்கிற, கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க கூடிய ஒரு மனிதனை முதல்வர் வேட்பாளராக ஏற்று வழிமொழிகின்ற நிலை மிகவும் அவமானகரமானது.மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்ற விஜயகாந்திற்கு ஞானியின் நற்சான்று கிடைத்தது உங்களுக்கெல்லாம் பெரிய விஷயமாக தெரிவது வேடிக்கையாக தெரியவில்லையா? நான் திரும்பவும் சொல்கிறேன்.விஜயகாந்த் கட்சி 30-40 தொகுதிகளில் வெற்றிபெறுமானால், திமுகவிற்கும் அந்தளவிற்கு பற்றாக்குறை ஏற்படுமானால் அவர்களிருவரும் நல்ல ஒரு ‘ஆரம்பத்திற்கு’ தயாராகிவிடுவர். மறுபடியும் ஒரு ’சுய விமர்சனம்’ செய்து கொள்ளுகின்ற வழமையான நிகழ்வை நடத்தி முடிப்பீர்கள்.இதெல்லாம் இடது சாரிகள் அரசியலில் சகஜமுங்க!!

    ReplyDelete
  4. படிப்படியாக மது விலக்கை கொண்டு வரவிருக்கும் ஜெயலலிதா கட்சி ஆக குறைந்தது இந்த வருட ஆரம்பத்திலாவது ஏன் கொண்டுவரவில்லை?

    ReplyDelete
  5. IF A HUNG ASSEMBLY ARISES MNK AND VIJAYAKANTH SHOULD NOT SUPPORT BOTH DMK AND AIADMK .
    LET THE PRESIDENT RULE COME IN TN

    ReplyDelete