வேலூரில் இன்று நூற்றி எட்டு டிகிரி வெயில் என்று சொன்னார்கள். ஆனாலும் இந்த வெயிலில் வெளியே இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய அவசியம்.
அலைச்சல் முடிந்து வீடு திரும்பிய பின்பு என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள இளையராஜாவைத் தவிர வேறு உடனடி நிவாரணம் என்ன உண்டு!
நான் இளைப்பாறிய இரண்டு இசைக் கோர்வைகளை நீங்களும் ரசிக்க இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் புத்துணர்ச்சியோடு இருக்கும் இந்த அற்புதமான இசை.
இந்த திரைப்படத்தின் ஜீவன் இறுதிக்காட்சி என்றால் அக்காட்சிக்கு தன் இசை மூலம் ராஜா, ஜீவன் கொடுத்துள்ளதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
ராஜா, ராஜாதான்
மிக்க நன்றி. இதே இசையை Berklee Strings Orchestra சிகாகோவில் நிகழ்த்தியதையும் நீங்கள் கண்டிருக்கலாம். இல்லையெனில் கண்ணுற்று இன்னும் கொஞ்சம் கூடுதலாக இளைப்பாறுங்கள்.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=c0OpIPrAfDA
நிச்சயம் ராஜா, ராஜாதான். அண்மையில் துறையூரிலிருந்து கோவையை நோக்கி ஒரு தனியார் பேரூந்தில் பயணித்தேன். என் பயணத்தை இனிதாக்கியவர் இளையராஜாதான். 100% பேரூந்தில் ஒலித்த பாடல்கள் இளையராஜா 80 களில் இசையமைத்த திரைப்பாடல்கள்தான். இறங்கும்போது ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தேன். இப்போ வரும் பாடல்களையெல்லாம் பார்த்தால், ராஜாவின் இசையை அடுத்தடுத்த தலைமுறைகளும் ரசிக்கப்போவது உறுதியாகத் தெரிகிறது.
ReplyDeleteஅருமையான ராஜபார்வையும், காதலுக்கு மரியாதையும் !
ReplyDelete