நேற்று தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதியை முன்னிட்டு கடப்பாவில் உள்ள
வெங்கடாசலபதி கோயிலுக்கு இஸ்லாமியர்கள் வந்த காட்சிதான் மேலேயுள்ள புகைப்படங்கள்.
ஒரு இஸ்லாமியப் பெண்மணியை வெங்கடாசலபதி திருமணம் செய்துள்ளதால் அவர்கள் அவரை
மருமகனாக கருதுவதாக அங்கே ஒரு வழக்கம் உள்ளதாம்.
சபரிமலை யாத்திரையில் வாவர் சமாதிக்குச் செல்லும் வழக்கம் உள்ளது. நாகூர்
தர்காவிற்கும் வேளாங்கண்ணிக்கும் செல்கிற இந்துக்கள் ஏராளம்.
இதுதான் இந்தியாவின் மத நல்லிணக்கம். இதை சிதைக்கத்தான் காவிக் கூட்டம்
முயல்கிறது.
கடவுளே வேறு மதத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது, மாற்று மதத்தினரை
காவிகள் எதிரிகள் கருதுவது நியாயமா?
No comments:
Post a Comment