க்விஸ் மாஸ்டரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி யுமான டெரிக் ஓ ப்ரியன், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அதிலே ஒரு புகைப்படத்தைக் காண்பித்துள்ளார்.
பாஜக வின் ராஜ்நாத்சிங், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ்காரத்திற்கு லட்டு ஊட்டுவது போன்ற அந்த படத்தைக் காண்பித்து "பார்த்தீர்களா? பாஜக விற்கும் சிபிஎம் கட்சிக்கும் உள்ள உறவை" என்று பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு என்பார்கள். ஆனால் டெரிக்கின் புளுகோ எட்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை.
ராஜ்நாத்சிங் மோடிக்கு லட்டு கொடுத்த படத்தை மனிதன் பிரகாஷ் காரத் என்று மோசடி செய்து விட்டான்.
இப்போது டெரிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோழர் பிரகாஷ் காரத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார். மம்தா என்ன அராஜகம் செய்தாலும் கண்டு கொள்ளாத, கையாலாகத தேர்தல் ஆணையம் க்விஸ் மாஸ்டரை என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.
பாஜகவால் சகித்துக் கொள்ள முடியாத இன்னொரு விஷயமும் இதில் உள்ளது.
வழக்கமாக மோடிக்காக, போட்டோஷாப் செய்வது பாஜகவின் வழக்கம். ஆனால் மோடியின் படத்தையே தூக்கி விட்டு ஒரு போட்டோஷாப் வேலை நடந்துள்ளது.
Waw....what a creativity..
ReplyDeleteMofing against bjp. ...never
மம்தா கூட்டம் கம்முனிஸ்ட்களுக்கு எதிராக இப்படி செய்வது தவறு.
ReplyDeleteஅதே சமயம் , ஜெ விடம் இரண்டு கம்முனிஸ்ட் கட்சிகளும் கேவல வாழ்வு நடத்தின. எவ்வளவோ அராஜகம் நடந்த போதும் வாய் மூடி கிடந்தனர். இதையே ஜெ கட்சியினர் செய்திருந்தால் பெருமையாக கொள்வார் கம்முனிஸ்ட்.(முக்கியமாக தா.பா)