பதினைந்து வருடங்களுக்கு முன்பு கோட்டயத்திற்கு அக்கோட்டச்சங்கத் தலைவர்
தோழர் எம்.வி,குரியன் அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவிற்குச்
சென்றிருந்தேன். மறுநாள் நெல்லைக் கோட்டச் சங்கத்தின் சங்க அலுவலக திறப்பு விழா.
கோட்டயம் நிகழ்ச்சி முடிந்ததும் நெல்லை எப்படிச் செல்வது என்று யோசித்த போது
திருவனந்தபுரம் கோட்டத்தின் பொதுச்செயலாளர் தோழர் ராஜூ, தன்னோடு திருவனந்தபுரம்
வந்து இரவு கெஸ்ட் ஹவுசில் தங்கிக் கொள்ளுங்கள், மறுநாள் நாங்கள் காரில்தான்
நெல்லை போகப் போகிறோம். இடம் உள்ளது வாருங்கள் என்று அழைக்க, அனைவரும் கோட்டயம்
ரயில் நிலையம் சென்றோம்.
கோட்டயம் ரயில் நிலையத்தில் பார்த்த காட்சிதான் இந்த பதிவிற்கான தூண்டுதல்.
ஒரு டிப்டாப் இளைஞர் தனியாக பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். யாருடனோ
அவர் மிகக் கோபமாக சட்ட பாயிண்டுகளைச் சொல்லி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
ஆக்ரோஷமான அவரது உரையாடலுக்கு ஏற்ப கையை வேறு அசைத்துக் கொண்டிருந்தார். ஆனால்
அவரோடு எதிரில் நின்று உரையாட யாருமில்லை.
அவரைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் வித்தியாசமாக பார்த்துக் கொண்டே
சென்றார்கள். ஒரு வயதான தம்பதி “பிராந்தோ” என்று பைத்தியக்காரப்பட்டம் வேறு கட்டி
விட்டார்கள். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்த
போதுதான் அவர் காதிலே இருந்த இயர்போனை பார்க்க முடிந்தது. மனிதர் செல்போனில்
யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார். செல்போனே அவ்வளவாக பரவாத காலம் அது. அதில்
இயர்போனில் பேசுவது என்பது மிகவும் அரிது. பாவம் அதனால் அந்த மனிதர் “பிராந்தன்”
ஆகி விட்டார்.
இந்த சம்பவத்தை நினைவுபடுத்தியது இன்று நடந்த சம்பவம்.
இன்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்
கொண்டிருந்தேன். திடீரென “லூசா நீ, தொலைச்சிடுவேன்” என்று ஒரு குரல். திமுகவை
விமர்சித்தால் தலை தங்காது என்று மிரட்டிய அனானி உடன்பிறப்புதான் நேரில் வந்து
விட்டாரோ என்று பார்த்தால் பக்கத்தில் பைக்கில் கடந்து போன ஒரு மனிதர் காதில் இயர்போன்
தொங்க, செல்போனில் யாரோடோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
செல்போன்கள் அதிகரிக்க “பிராந்தன்கள்” எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதோ
என்று சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டேன்.
வாகனத்தில் செல்கையில் தனியாய் சிரித்தால் என்னையும் யாராவது “பிராந்தன்”
என்று நினைத்து விட்டால் என்ற அச்சம்தான் . . .
பிராந்தன் என்ற ஒரு புதிய சொல் அறிந்தேன். நன்றி.
ReplyDeleteசார், அது மலையாளச் சொல்
Deleteபிராந்து என்பதுதானே மலையாளச் சொல்?
Deleteஅன்விகுதி தமிழர் சேர்க்கையா என்று அறிய விரும்புகிறேன்.
(இல்லன்னா நா பிராந்தன் ஆயிடுவேன்)
பிராந்து என்பது மலையாளச் சொல். அதை பிராந்தனாக மாற்றியது அடியேன் கைங்கர்யம்
Deleteபைக் ஓடுவதற்கு அவசியமான ஹெல்மெட் அவருக்கு இல்லை, ஆனா செல்போனில் சண்டை வேறு,அவர் நூறுவீதம் பிராந்தன் :) தான்.
ReplyDeleteஅந்த படத்தில் இருந்தவர் யாரோ, எவரோ? கூகிளில் கிடைத்த பைக் ஓட்டிக்கொண்டே செல்போன் பேசுபவர் படம். இந்த பதிவின் கருத்துக்கு தொடர்பு இருந்தும் நேரடியாக தொடர்பில்லாததால் அகற்றி விட்டேன்
Delete