Saturday, April 16, 2016

இது அந்தக் குடும்பக்கதை அல்ல

முகநூலில் தோழர் சொர்ணகுமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான கதையை இங்கே பதிவு செய்துள்ளேன். 

கதையை விட பின் குறிப்பு மிகவும் சுவாரஸ்யம்
 
ஒரு ஊரில் ஒரு வயதான அரசர் இருந்தார். அவருக்கு பல மனைவிகள். அவர்கள் மூலம் அவருக்கு நான்கு மகன்கள். அதில் இரண்டு மகன்களுக்கு மட்டும் ஆகவே ஆகாது!

இந்த அரசர் என்ன செய்தார்? தனக்கு மிகவும் பிடித்த ஒரு மகனை தன் கூடவே வைத்து கொண்டார்.

இன்னொரு மகனை நாட்டின் தெற்கு பக்கம் அனுப்பி அங்கே உள்ள "வரவு செலவுகளை" கவனிக்க செய்தார்! தெற்கே சென்ற அந்த மகன், தன் புஜபல பராக்கிரமத்தால் பல அடக்கு முறை   செய்து, மிகுந்த பொருள் ஈட்டி அதில் நன்றாக வாழ்ந்து வந்தார்!

தலைநகரில் இருந்த மகன், செல்லப் பிள்ளையாக இருந்ததால், மன்னரின் கூடவே இருந்து ராஜ தந்திரம் முழுக்க கற்றுக் கொண்டு அனைத்து  அதிகாரத்தையும் கைப்பற்றி கொண்டே வந்தார்!

மன்னர் கூட இருந்து ஜால்ரா அடித்த கூட்டம், அடுத்த மன்னர் இவர்தான் என்று யூகித்து இவருக்கு ஜால்ரா அடித்து இவர் தலைமை ஏற்க தயார் ஆனது!

இதை தெரிந்து கொண்ட தெற்கே இருந்த இளவரசன், அவ்வப்போது தலை நகர் வந்து, மன்னரிடம் நீதி கேட்டு முறையிடுவார்! 

மன்னரும் அவ்வப்போது ஏதாவது புதிய பொறுப்பு, மேலும் நிதி சேர்த்து கொள்ள வாய்ப்பு என்று ஏதாவது  செய்து கொடுத்து, சமாதானம் செய்து அனுப்புவார்!

ஆனாலும் இரண்டு இளவரசரிடையே பகை உணர்ச்சி மூண்டு கொண்டே வந்த நிலையில், மன்னருக்கு வயது முதிர்ந்து இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்தார்! தனக்கு அடுத்து பட்டத்திற்கு, தன் கூடவே இருக்கும் மகன் தான் வருவார் என்று அறிவிக்க முடிவு செய்தார்!

இது தெரிந்து, தெற்கு இளவரன் கொதித்து எழுந்தார். தன் தந்தை யுடன் சண்டை போட்டார். சண்டை முற்றியதில்,  "நீ என் மகனே இல்லை! போ வெளியே!" என்று அந்த இளவரசரை விரட்டி அவரிடம் இருந்த பொறுப்புகளை பறித்து விட்டார்!

இதற்கெல்லாம் காரணமாக இருந்த செல்லமகன், எதுவும் பேசாமல், ஆனால் உள்ளுக்குள் சந்தோஷபட்டு கொண்டு, மேலும் தனக்கு வலு சேர்க்க மக்கள் ஆதரவை திரட்ட தொடங்கினார்!  எந்த லெவலுக்கு போனார் தெரியுமா? 

தங்கள் பரம்பரைக்கே பிடிக்காத பெரும்பான்மையாக இருந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுடன் கூட உறவு வைத்து கொள்ள ஆரம்பித்தார்! அந்த மத அறிஞர்களுடன் கூடி விவாதம் செய்தார்.அவர்களையும் தன் கைக்குள் போட்டு கொண்டால் பிற்பாடு நம்மை ஆதரிப்பார்கள் என்று கணக்கு போட்டார்! 

இப்போது தான் கதையின் கிளைமாக்ஸ்...!!!!!!

எந்த மகன் ஒன்றும் ஆக மாட்டான் என்று தெற்கே அனுப்பி வைக்கப் பட்டாரோ, அவர் வீறு கொண்டு எழுந்தார்! யார் யாருடன் கூட்டு சேர்ந்தாலும்  பரவாயில்லை என்று முடிவு எடுத்து , நேரடியாக வீரத்தை காட்ட முடிவெடுத்தார்!

தலைநகர் மீது படையெடுத்து, தந்தையின் செல்ல மகனை கொன்று விட்டார்! தன் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார்! அதுவரை, மன்னருக்கும், அவர் செல்ல மகனுக்கும் ஜால்ரா அடித்த கூட்டம், இப்போது இவர் வசம் வந்து ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது!

நாட்டை கைப்பற்றி பல்லாண்டு காலம் மன்னராக இருந்தார்!

அவ்வளவுதான் கதை...

‪#‎பின்குறிப்பு‬

1) இந்த கதையில் வரும் மன்னர் - ஷாஜகான்.
செல்ல மகன்- தாரா ஷூகோ, Dara Shikoh
தெற்கே அனுப்பப்பட்ட வேண்டாத மகன்- ஒளரங்கசீப்.

இந்த கதையை நிகழ்காலத்திற்கு பொருத்தி வேறு யாரையும் நீங்கள் கற்பனை செய்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

4 comments:

 1. தாரா - மூத்த மகன். தன் கடைசி காலத்தில் தன்னை மீறிச் செல்லக்கூடாது என்று சாஃப்ட் 'நேச்சர் உள்ள படித்த கல்விமானான தாராவை ஷாஜகான் அளவுக்கு மீறி ஆதரித்தார். தாரா சுஃபி இஸ்லாமைப் பின்பற்றினார்.

  ஆனால் ஔரங்கசீப்தான் திறமைசாலி. தான் அரியணைக்கு வரும்காலத்தில், தாரா இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானவர் என்று பரப்பி, தாராவுக்கு ஆதரவு கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.

  தந்தையைச் சிறையில் அடைத்தார். அவரை மிக மோசமான முறையில் வெற்றிகொண்டார். தாராவைப் பல போர்களுக்குப் பின்பு, பல காலங்களுக்குப் பின்பு, ஆஃப்கானிய அரசன் ஒருவன் எட்டப்பனாய்ச் செயல்பட்டதன்மூலம், திரும்ப தில்லிக்குக் கொண்டுவந்தார். அடையாளம் காண இயலாத அளவு தாரா வாழ்க்கையின் அவ்வளவு வாட்டத்திற்கு வந்துவிட்டார். பின் ஔரங்கசீப்பினால் கொல்லப்பட்டார்.

  இதை இப்போதைய குடும்பத்துடன் ஒப்பிட இயலாது.

  ஆனால், நான் எப்போதும் ஔரங்கசீப்பை, கருணாவுக்கு ஒப்பிடுவேன். ஔரங்கசீப் 90 வயதுவரை மிகுந்த கன்ட்'ரோலுடன் யாரையும் நெருங்கவிடாமல் அரசாட்சி செய்தார். அவருடைய வாரிசுகளை அவர் வளர விடவில்லை. அதுவும்தவிர மிகுந்த கண்டிப்புடன் கடைசி காலம் வரை லகானைத் தன் கையிலேயே வைத்திருந்ததனால், அவர் மகன் பட்டத்துக்கு வரும்போது 65-70 வயது ஆகியிருந்தார். சோபிக்க இயலவில்லை. ஔரங்கசீப்பின் 50 ஆண்டுகால ஆட்சி, அடுத்து வந்தவரை சோபிக்க இயலாமல் ஆக்கிற்று. அதன்பின்பு, முகலாய வம்சம் அழிவுப்பாதையை நோக்கிச் சென்றுவிட்டது. எப்போதும் ஒருவர் அளவுக்கு மீறி, ரொம்பகாலம் அதிகாரத்தில் இருந்தால், அவருக்கு அடுத்ததாக வரும் தலைமுறை சோபிக்க இயலாது.

  ReplyDelete
 2. பொருத்திப் பார்ப்பது இருக்கட்டும்...உண்மைக்கதையென்றால் மிக ஆச்சரியம்.. வரலாறு திரும்புகிறது

  ReplyDelete
 3. நிகழ்காலத்திற்கு நாங்கள் பொருத்திப் பார்க்கிறோமோ இல்லையோ நீங்கள் கதையில் கூறிய மன்னரை, அவருடைய உறுதியைப் பாராட்டத்தானே வேண்டும், அவருடைய நாற்காலி ஆசைக்காக.

  ReplyDelete
 4. THE STORY MATCHES WHAT IS HAPPENING NOW. THE PARTY HAS AMASSED HUGE WEALTH WHEN PLUMP
  MINISTRY BERTHS WERE ALLOTTED TO IT BY THE WEAK CONGRESS PARTY. NOW THEY EYE TAMILNADU ELECTIONS
  TO CONSOLIDATE AND PROTECT THAT ILL GOTTEN WEALTH. BUT MNK SHOULD NOT SUPPORT THAT PARTY
  IF THAT KIND OF SITUATION ARISES. I HOPE THE LEFT PARTIES DOESNOT ALIGN WITH THEM. BECAUSE
  IF THEY CAME BACK TO POWER THEY WILL EVEN SELL TAMILNADU FOR THEIR BENEFITS.

  ReplyDelete