வைகோ கலைஞர் பற்றி பேசியது என்பது எவ்விதத்திலும் சரியானது அல்ல.
அநாகரீகமான, கண்டனத்துக்குரிய ஒன்று. வைகோவுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை
உருவாக்கிய மற்ற தலைவர்கள் அனைவருமே இதனை ஏற்க முடியாது என்று தங்களின் அதிருப்தியை
வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அரசியல் தேர்தல் கூட்டணிக் கலாச்சாரத்தில்
வேறு எந்த கூட்டணியிலும் பார்க்க முடியாத ஆரோக்கியமான விஷயம் இது. வைகோவும் தனது
தவறை ஒப்புக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு விட்டார்.
ஆனால் உடன்பிறப்புக்களோ, மிகவும் கேவலமான முறையில் இன்னும் வைகோவை
வசைபாடிக் கொண்டே இருக்கிறார்கள். வைகோ அநாகரீகமாக பேசினார் என்று இவர்கள் அதை விட
ஆபாசமாக பேசுகிறார்கள்.
அநாகரீகமான, ஆபாசமான பேச்சுக்களை கண்டிக்கிற அருகதை திமுக
உடன்பிறப்புக்களுக்கு உண்டா?
தமிழகத்தில் ஆபாசப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர் கலைஞர்தானே! அவர்
இந்திரா காந்தியை பேசாத பேச்சா? ஆபாசப் பேச்சுக்கு அரிச்சுவடி எழுதியவர்களே
தீப்பொறி ஆறுமுகமும் வெற்றி கொண்டானும்தானே!
இணைய வெளியில் ஆபாசமாக எழுதுபவர்களிலும் முதலிடம் திமுக உடன்பிறப்புக்களைத்
தவிர வேறு யாருக்குத் தர முடியும்!
மக்கள் நலக் கூட்டணி அமைந்ததிலிருந்து தரம் தாழ்ந்து எழுதிக் கொண்டிருந்த
நரிகள் தேமுதிக எனும் பழம் கிடைக்காத ஏமாற்றத்தில் செவ்வாய்
கிரகத்திலிருந்தெல்லாம் வார்த்தைகளை வாங்கி எழுதியதை மறந்து விட முடியுமா?
அரசியலில் நாகரீகம் வேண்டும் என்று சொல்லும் உரிமை எங்களுக்கு உண்டு. ஆனால்
நாகரீகம் என்றால் என்னவென்றே அர்த்தம் தெரியாத உடன்பிறப்புக்களுக்கு அந்த அருகதை
கொஞ்சமும் கிடையாது.
பின் குறிப்பு: இவர்களின் லாவணிகளுக்கு பதில் சொல்லியே தேமுதிக-மக்கள்
நலக்கூட்டணியின் நேரம் விரயமாகி ஜெயலலிதாவிற்கு எதிராக அதன் கவனம் திரும்பாமல்
பார்த்துக் கொள்ளும் வேலையை செய்வதன் மூலம் ஜெயலலிதாவின் பி டீம் திமுகதான் என்று
எனக்கு ஐயம் வருகிறது.
சாதி வெறி பிடித்த வைகோவிற்கும் ராமதாஸ்க்கும் என்ன வித்தியாசம்.
ReplyDeleteஎல்லா கட்சியிலும் கீழ் நிலை பேச்சாளர் தவறாக பேச வாய்ப்புண்டு.
தலைவர்களே இப்படி பேசினால் எப்படி. ஒப்புக்கு ஒரு மன்னிப்பு என்று சொல்லி விட்டால் போதுமா. இப்படி ஒரு இழிவாக நடக்கும் ஒருவருக்கு ஆதரவாக சொல்லலாமா? வேதனை.. உங்களுக்கும் சாதி பாசமோ?
தோழர் ஜி.ஆர் என்ன ஜாதி என்ற ஆராய்ச்சிதான் தீவிரமாக நடந்து வருகிறது என்று பார்த்தால் என்னிடமும் ஜாதி ஆராய்ச்சி செய்து விட்டீர்களா? ராமதாஸ் இதுவரை தனது இழிசெயல் எதற்காவது மன்னிப்பு கேட்டுள்ளாரா என்ற விபரத்தை தெரிவியுங்களேன்
ReplyDeleteமருத்துவம் படித்தும் கண் முன்னே பல உயிர் இழப்புகள் ஏற்பட்டும் சாதியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் ராமதாஸ் போன்றோர் மனித இனத்தின் அவலம். கல்வி அவரின் அறிவு கண் திறக்க பயன் படவில்லை. இப்படி சாதி என்ற கண்டு பிடிக்க இயலாத ஒன்றை கொண்டு எளிய மக்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் திருடும் தவறான செயலை செய்து வரும் அவர் எப்படி தனது இழி செயல்களுக்கு மன்னிப்பு கேட்பார்?
ReplyDeleteஎளிய மக்கள் சார்பாக நீங்கள் பேசி/இயங்கி வருவது தெரியும். இருப்பினும் வைகோ மிக வன்மையாக கண்டிக்க தகுந்தவரே. அவர் உள்ளம் எவ்வளவு சாதி வெறி கொண்டு உள்ளது என்பதை அனைவரும் காண முடிந்தது. இதில் கலைஞர் ஒரு அடையாளமே. இப்படி கள்ளத்தனமாக சாதி வெறி கொண்ட வைகோவிற்கும் ராமதாஸ்க்கும் என்ன வித்தியாசம்.
வைகோ எப்போதும் மக்கள் நலன் பார்க்காமல் தன் நலன் பார்த்து தேர்தலுக்கு தேர்தல் யார் வரக்கூடாது என்ற கூட்டத்தில் வேலை செய்து பெரும் பணம் பார்க்கிறார் என்று நினைக்கிறேன். இன்னும் சொன்னால் விரியும்.
தவறான முடிவுகளை எடுக்கும் நல்லவர் என்பதுபோல்
ReplyDeleteவைகோ பற்றி ஒரு சித்திரம் வலிந்து உருவாக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் குறிஞ்சாக்குளத்தில் தலித் இன மக்கள்
தங்களுக்கென்று காந்தாரி அம்மன் கோவிலை கட்டமுயன்றதற்காக,
1992 மார்ச் 16 -ல் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக்
கொலை செய்யப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். முதல் குற்றவாளி வைகோ
அவர்களின் தம்பி ரவிச்சந்திரன். இரண்டாம் குற்றவாளி வைகோ
அவர்களின் மாமா சங்குவெட்டி மோகன்தாசு நாயுடு.
அடுத்து தமிழ்நாட்டை புதிதாக பிடித்திருக்கும் பீடை சீமான்
எனும் புதிய ஜந்து. விளம்பர வெறியன் மோடி தன்னுடைய
வெற்று வசீகர பேச்சால் ஆட்சியை பிடித்தது போல்
தானும் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறது.
3000 வருடங்களாக இந்த மண்ணில் நடக்கும் ஆரிய-தமிழர்
போராட்டத்தை,திசை திருப்பி,,,2009 க்கு பிறகு
திராவிடர்-தமிழர் போராட்டமாக மாற்றுகிறார்,,,
"பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" என 2000 ஆண்டுகளுக்கு
முன்பு இருந்தே வரும் பார்ப்பனிய எதிர்ப்பு பண்பாட்டுப்
போரை மக்கள் மூளையில் இருந்து மறக்கடித்து,,,,
வெறும் மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு,,,
"பாப்பான் தமிழன் தான் பேசுகிறான்,,ஆக அவன் சுத்தத் தமிழன் தான்"
என்று கூறி பண்பாட்டு அரசியலையே தனது பதவி அரிப்புக்கு
விற்பனை செய்ய இன்று துணிந்துள்ளார்,,,
எப்படி ஆர்எஸ்எஸ்,,, பார்ப்பனியத்தின் மீது திரும்பிய
எதிர்ப்பை லாவகமாக இஸ்லாமியர் மீது திருப்பியதோ,,
அதே போல பார்ப்பனியத்திற்கு சிம்ம சொப்பனமாக
இருக்கும் தமிழ்நாட்டில்,,,எதிரி பார்ப்பான் அல்ல,,,
மாற்று மொழியினர் என்பதும்
உருது பேசும் இஸ்லாமியர்களை வந்தேறி என்பதும்,,,,
பார்ப்பானை மண்ணின் மக்கள் என்பதும்,,,,
சீமானின் இந்த மறைமுக பார்ப்பனிய ஆதரவு கருத்தை
வேரோடு தகர்க்க வேண்டிய கடமை மனிதத்தை நேசிக்கும்
அனைவரும் செய்ய வேண்டி வேலை.
ஜெயலலிதாவின் ஆட்சியில் உள்ளதை ஏதாவது நீங்க சொல்ல போக, அவரின் கொள்கை பரப்பு தலைவர் today.and.me
ReplyDeleteபணம் பெற்று கொண்டு எழுதுகிறீர்கள் என்பார், கவனமா இருங்க!
ஐய்யய்யோ, உங்கள் பின்னூட்டத்தை படிக்கும் முன்னரே இன்றைய பதிவை எழுதி விட்டேனே. விமர்சனம் மீது ஒரு சிறு விமர்சனம் வைத்ததற்கே அவர்கள் ஒரு க்ரூப்பாக கிளம்பி வசை பாடி தீர்த்து விட்டார்கள். இப்போ என் நிலை என்ன ஆகப் போகிறதோ? பயமாகத்தான் இருக்கிறது
Deleteஅப்படி பணம் பெற்று எழுதும் கூட்டத்தில் முதல் ஆட்களே இவர்கள் தான். அவல ஆட்சி நடத்தி வரும் ஜெ மீது அவ்வளவு பாசம். ஜெவின் ஆட்சி கேடுகளை சொல்ல இவர்களால் முடியுமா. நியாயம் பற்றி எழுத வந்து விட்டார்கள்.. ஜெ செய்துள்ள அவல ஆட்சி உலகில் எங்காவது நடந்திருந்தாலும் மக்கள் கொதித்து எழுந்து இருப்பார்கள். அந்த அவல ஆட்சி பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்து கொள்வது இந்த மாதிரி பணம் வாங்கி கொண்டு எழுதி பேசி வரும் பதிவர்களும் ஊடகங்களும்.
Deleteயாரை சொல்கிறீர்கள் நண்பரே ?
Deleteஅதிமுகவின் இணைய அடிமை காவிரி மைந்தனின் அல்லக்கையையா?
//யாரை சொல்கிறீர்கள் நண்பரே ?//
Delete:)
நண்பர் கரிகாலன், மேலே சொன்ன நண்பர் எப்படி நம்புகிறாரோ தெரியவில்லை. ஆனா ஒருவர் இரு வேடங்கள் போடுவார்,ஆனால் இரண்டிலும் அவர் அடிமை அல்லக்கை தான்.
வைகோவின் ஜாதி வெறி, சீமானின் இனவெறி இவற்றை வைத்து கொண்டு ஒரு ஜாதி மீது மட்டும் துவேஷத்தை உருவாக்குவதும், அதன் மூலம் இஸ்லாமிய மத அடிப்படைவாததிற்க்கு நாட்டில் செங்கம்பள வரவேற்பை உருவாக்கலாம் என்ற முயற்சிகள் மக்களால் நிராகரிக்கபட வேண்டியவை.
ReplyDeleteவைகோ ஜாதி வெறி உள்ள மனிதராக தெரியவில்லை. மாறாக மிகவும் உணர்ச்சி வசப்படுபவர். அந்த அறிக்கையில் கூட உப்பிக்கள் குமுறுவதைப் போல நேரடியாக சாதி துவேஷம் செய்யவில்லை என்றாலும் அந்த வார்த்தைகள் கண்டிக்கத்தக்கவையே. ஆயினும் தான் சொல்ல வந்த்து அதுவல்ல ஆனாலும் அந்த பொருள் படும்படி தனது அறிக்கை இருந்து விட்டதே என்பதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் குணம் எத்தனை அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது?
Deleteவைகோ வார்த்தை தவறிச் சொன்னதை உடனே மன்னிப்புக் கேட்டு, சரி செய்துவிட்டார். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே போன்றுதான் அவர் நடவடிக்கை இருந்தது. கருணானிதிக்கு இல்லாத வெறியா? எத்தனை முறை இந்துக்களையும் அவர்கள் பண்டிகைகளையும் இழிவாகப் பேசியுள்ளார்? அதன்மூலம், பாஜக தமிழகத்தில் வளர்வதற்கு அடித்தளமிட்டுள்ளார்? அவர் காலத்துக்கு அப்புறமாவது திமுக திருந்துகிறதா என்று பார்க்கலாம்.
ReplyDelete