Friday, April 1, 2016

கொல்கத்தா மரணங்கள் கடவுளின் செயலா?





கடவுள் பக்தியை மூலதனமாகக் கொண்டு வெறி அரசியல் செய்து கொண்டிருக்கும் காவிக் கூட்டத்தினரே, பதில் சொல்லுங்கள். அவர்களைத்தான் இந்த கேள்வியைக் கேட்க முடியும். “நம்பிக்கை” என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அரசியல் நடத்தும் பரிவாரம் அவர்கள்தானே!

கொல்கத்தா மேம்பால விபத்துக்கு காரணமான ஒப்பந்தக்காரர், இந்த விபத்து கடவுளின் செயல் என்று சொல்லியுள்ளார்.

இப்படி மனித உயிர்களை பலி வாங்குவதுதான் கடவுளின் செயலா? அப்படியென்றால் கடவுள் யார் பக்கம் இருக்கிறார்? நீங்கள் முன்னிறுத்துவது இந்த கடவுளைத்தானா? இது கடவுளின் செயல் என்பது ஒப்பந்தக்காரரின் நம்பிக்கை என்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் அல்லவா? கடவுளின் செயல் குறித்து விசாரணை, வழக்கு, தண்டனை என எதுவும் செய்ய மாட்டீர்கள் அல்லவா?

உங்களுக்கான நியாயம் அந்த கேடு கெட்ட ஒப்பந்தக்காரருக்கும் பொருந்தும் அல்லவா?

நீங்கள் வகுத்துக் கொடுத்த “நம்பிக்கை” வழியை பயன்படுத்தி இன்னும் எத்தனை பேர் புறப்படப் போகிறார்களோ?

பின் குறிப்பு : உண்மையான பக்தர்கள், அந்த ஒப்பந்தக்காரர் சொன்னது அயோக்கியத்தனம் என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
 


3 comments:

  1. கடவுள் தத்துவம் நாட்டை காடாக்கி வருகிறது. கடவுள் பெயரை சொல்லி பல கோடி மக்களை எயிது பிழைத்து வரும் மக்கள், புது புது மார்க்கத்தில் புளுகி வருகின்றனர். அவர்களின் ஆட்கள் பலரே இந்த ஆகம தத்துவமெல்லாம் புளுகு தான் ஒரு நம்பிக்கை மட்டுமே என்று சொல்லி உள்ளனர்.(சுஜாதா..வா.ரா.. ). இருந்தும் தங்கள் சுக போக வாழ்க்கைகாக இப்படி கடவுளை காட்டி இழி பிழைப்பு பிழைக்கின்றனர்.

    ReplyDelete
  2. கடவுளின் சொல் என்று கூறுவது ஏற்கமுடியாதது.

    ReplyDelete
  3. உண்மையான பக்தர்கள் அந்த ஒப்பந்தக்காரர் சொன்னது அயோக்கியத்தனம் என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    நேர்வழியில் நடக்கும் நல்ல பக்தர்கள் பாவங்க ஏற்கெனவே நல்லாகவே குழம்பிபோய் இருக்கிறார்கள்.
    பொதுவாக நாட்டின் உள்ள கடவுள் நம்பிக்கை வழிபடி கொல்கத்தா மேம்பாலத்தை கட்டிய ஒப்பந்தக்காரர், தான் கொள்ளையடித்த பொது பணத்தில் ஒரு பெரிய பகுதியை கடவுளுக்கு காணிக்கையாக வழங்கியும், கடவுளை மேலும் பல தடவைகள் பிரார்த்தனை செய்து வந்திருந்தா இந்த விபத்தை தடுத்திருக்கலாம்.

    ReplyDelete