Tuesday, April 12, 2016

நீங்க பாஸா இல்லை லூஸா, மிஸ்டர் மோடி




“அந்த டெய்லரும் அதையேதான் சொன்னான். நீங்க எனக்கு பாஸா இல்லை லூஸா”

காவலன் படத்து வடிவேல் வசனம் இது.

கொல்கத்தா விபத்து கடவுள் கொடுத்த செய்தி என்று மோடி சொல்கையில் எனக்கு இந்த வசனம்தான் நினைவுக்கு வந்தது.

பல பேருடைய உயிரை பலி வாங்கிய அந்த மேம்பால ஒப்பந்தக்காரரும் அந்த விபத்து கடவுளின் செயல் என்றுதான் சொன்னான். நீங்கள் அதை கடவுள் கொடுத்த செய்தி என்று சொல்கிறீர்கள்.

மம்தாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே உங்கள் கடவுள் இத்தனை உயிர்களை பலி வாங்கினார் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?

கடவுளை இழிவு படுத்துவது கடவுளின் பெயரால் அரசியல் செய்பவர்கள்தான், நாத்திகர்கள் அல்ல. 

No comments:

Post a Comment