Tuesday, April 26, 2016

சிரிப்பு மூட்டும் சீமான் வரலாறு

வாட்ஸப்பில் வந்தது.
செய்தி சூப்பர். அதற்கான படமோ  சூப்பரோ சூப்பர்

செபசுடீன் சைமன் அவர்களின் 
"" பயோடேட்டாவும் பச்சோந்தி தனமும்""

1, பிறந்தது 1970 சொந்தஊர் சிவகங்கை இன்னும் உறுதிபடுத்தபடவில்லை

2, தனது 15வயது வரை பெரியார் கொள்கையால் ஈர்க்கபட்டதாக சொல்லி கொள்வார் நம்பவேண்டாம்

3, 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எதுக்காக விளக்கம் தேவை

4,1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைந்தார்... ஆனால் அந்த கட்சி மேடைகளில் பெரியார் தத்துவம் பேசியதால் அடித்து விரட்டப்பட்டார்.....

5,பிறகு பொழப்பு தேடி சென்னை வந்தார் (வந்தேறி) சினிமா இயக்க மணிவண்ணன் பாரதிராஜா விடம் உதவியாளராக சேர்ந்தார்....

6, எப்படியோ 1997 ம் வருடம் பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி எடுத்தார் பிறகு வீரநடை இனியவளே படம் தோல்வியாக காணாமல் போனார் ( தெலுங்கு படத்தில் உதவி இயக்குநரானார்)

7,1999 முதல் 2006 வரை யாரும் புதுக்கதை சொல்ல வரவில்லை வந்திருந்தால் திருடி படம் எடுத்திருப்பார் பிறகு தம்பி படம் எடுக்க இலங்கை சென்றார்.....(அது ஒரு புதிய் கதை)

8, அப்போது தான் முதல் முதலாக ஈழத்தமிழர் வேதனையை அறிகிறார் போலும்....

9, தலைவர் பிரபாகரனின் காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டுகிறார்....
(ராஜ்கிரண் பேட்டியை பார்த்தால் உண்மை விளங்கும் )

10, இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றியவர் ( முக்கிய குறிப்பு அப்போது விஜயகாந்த் தமிழர்)

11, பிரபாகரன் உயிருடன் இருந்த வரை தமிழ் அமைப்பாக இருந்த கட்சி மறைவு( நான் நம்பவில்லை) பிறகு ஈழமக்களுக்கு குவியும் ஆதரவையும் உதவிகளையும் தனதாக்க அரசியல் கட்சியாக்கினார். சிபா ஆதித்தனார் ஆத்மா கூட மண்ணிக்காது....

12, நாடாளுமன்ற தேர்தல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
தற்போது தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும்( 2014 ஜெயலலிதா தமிழர்)

13, பெரியார் என் தந்தை தற்போது பெரியார் வந்தேறி வடுகரு

14, பெரியார் கொள்கைதான் நாம்தமிழர் அமைப்பின் முன்னோடி ஆனால் திராவிடம் ஒழிக முப்பாட்டன் முருகன் ( சிரிக்காமல் படிக்கவும்)

15, தற்போது நான் மட்டும் தான் தமிழன் யாரெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாலும் தமிழர் பட்டியலில் இடம்பெறலாம் ( காரிதுப்பகூடாது)

16 நாம் தமிழர் கட்சி தேர்தல் செலவுக்கு கூட மக்களிடம் தான் கையேந்துகிறது ஆனால் அண்ணனுக்கு மட்டும் விலை உயர்ந்த கார் வாங்க காசு?!???

17, தமிழ்நாட்டுக்கு நான்கு தலைநகரம் உருவாக்கப்படும் ( அண்ணே இன்னும் தூக்கத்துல இருக்காரு)

18, தனது மாமனார் காளிமுத்து படம் தலைவர்கள் புகைப்படத்துடன் இணைத்து தமிழராக்கினார்( ஏன் எதுக்குனு கேட்க கூடாது

19, தன் கட்சிக்கு யாரு ஆதரவு தந்தாலும் அனைவரும் தமிழர்கள் இல்லைனா வந்தேறிகள்

20 யாரெல்லாம் தமிழர்கள் என தெரிய அண்ணனை அணுகவும் ஏன்னா அண்ணகிட்டதான் தமிழன் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை உள்ளது

21, சோழர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் வணங்கிய சிவன் வந்தேறி

22, முருகன் முப்பாட்டன் சிவன் வந்தேறி பார்வதி முப்பாத்தாள்

100% நகைச்சுவை ...
தொகுப்பு - கூகுள் மற்றும் பத்திரிகை செய்திகள்
பின் குறிப்பு 
சீமான் மார்க்சிஸ்ட் கட்சியில் எப்போதும் இருந்ததில்லை. வேறு கம்யூனிஸ்ட் கட்சி எதிலாவது இருந்தாரா என்று தெரியாது. தமுஎச மேடைகளில் ஏற்றியதன் தண்டனையாக தோழர் அருணனை வசை பாடினார் இந்த  அறிவாளி.

19 comments:

 1. காய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும். இந்த உளறல்களுக்கு எல்லாம் சீமான் ஏற்கனவே பதிலளித்து விட்டார். பெரியார் கூடத் தான் காங்கிரசில் இருந்தார். மனிதனின் வாழ்விலும், சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை.

  ReplyDelete
  Replies
  1. காய்த்த மரம் அல்ல இது பட்ட மரம்.
   இராமேஸ்வரம் கோயிலை இடிக்க வேண்டும் என்று
   சொன்ன பிறகும் உங்களை போன்ற RSS அபிமானிகள்
   சீமானுக்கு வக்காலத்து வாங்குவது ஆச்சர்யம்தான்.

   Delete
  2. காய்த்த மரம் - சீமானை விட உங்கள் பின்னூட்டம் இன்னும் காமெடி

   Delete
 2. இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது போங்க. தந்தி டிவி பேட்டியில் அவர் கொள்கை விளக்கம் தந்த அழகு இருக்கிறதே காணக்கண் கோடி வேண்டும். வீட்டில் சொல்லி விட்டு பாருங்க இல்லன்ன தனியா சிரிக்கிறதா சந்தேகப்பட போறாங்க.

  அரிசியை இறக்குமதி செய்வதை கண்டிக்கிற அதே வேகத்தில் கார் தொழிற்சாலை எல்லாவற்றையும் விரட்டியடித்து விட்டு ஜப்பானில் இருந்து காரை இறக்குமதி செய்து கொள்ளுகின்ற (ஏனென்றால் அவர் வைத்திருப்பது ஜப்பான் கார்)அதிரடி பொருளாதாரம், நிலங்களை கையகப்படுத்தி அந்த விவசாயிகளுக்கே அரசாங்க வேலை தருகின்ற செயல் திட்டம், வெள்ளை வெள்ளையாக இருக்கின்ற கலப்பின கோழிப்பண்ணைகளை ஒழித்து விட்டு (அந்த கோழிகள் தண்ணி அதிகம் குடிக்கிறதாம்)அவரே நாட்டுக் கோழிகளை தருகின்ற திட்டம்,அந்த கோழிபண்ணை முதலாளிகள் விரும்பினால் (வேறு வழி) பெரிய மனதுடன் நாட்டு கோழிகள் வளர்க்க அனுமதி .......இப்படி ஏராளமான சரவெடிகள்.தேர்தல் அறிக்கையில் பாண்டேவுக்கு பிடிக்காத (பதில் சொல்ல முடியாதளவிற்கு கிடிக்கி பிடி போட்டால் வேறென்ன செய்வதாம்)இரண்டு திட்டங்கள் உடனடி வாபஸ்!! சிரிங்க தோழர் நல்லா மனம் விட்டு சிரிங்க!!

  ReplyDelete
  Replies
  1. மானுடன் பாண்டேயை விட கில்லாடியா இருப்பர் போலிருக்கே ? பாண்டேவின் கேள்விகளுக்கு சீமான் பதிலளிக்கும்போது பாண்டே யே பேசாமலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். தலையிருக்க வால் இந்த ஆட்டம் ஆடுது.

   Delete
 3. :)
  இவர் ஆட்சிக்கு வந்ததும் எதற்கும் இவரிடம் நாங்க தமிழர்கள்தான் என்று ஒரு நிரந்தர ஏற்புசான்றிதழ் வாங்கி வைத்து கொள்ளது நல்லது.

  ReplyDelete
 4. 78 ஆண்டுக்கால தமிழ்ச்சினிமாவின் கிஞ்சித்தும் ரசனை இல்லாத, தரம் தாழ்ந்த, இன்னும் trendy ஆ சொல்லணும்னா மொக்கைப் படங்களைப் பட்டியலிட்டால், சீமான் அவர்களின் அத்தனைப் படங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துவிடும்.

  தன் ஆக்கங்களில் ஆகச் சிறந்ததாக அவரேக் கருதும் "தம்பி" படத்தில் கூட தன் சுயச் சாதிப்பற்றைக் காட்ட அந்தச் சாதித் தலைவரின் படத்துடனே படம் ஆரம்பிக்கும். ராஜபக்க்ஷே இனக் கதாநாயகியுடன்.

  தன்னை முன்னிலைப் படுத்த ஏதேகினும் செய்தே ஆக வேண்டியக் கட்டாயத்தில்
  திடீர்ப் போராளியாக அவதாரம் எடுக்கிறார். அரிதாரம் பூசும் கலைத்துறையிலிருந்து அரிதாரம் பூசாமல் முழு நேர நடிகனாக களம் இறங்குகிறார். அன்று புடைக்க ஆரம்பித்த அண்ணனின் நரம்புகள் இன்றும் தளர்வடையாமல் இருக்கின்றன.

  இவரது பயணம் "சேகுவாரா" மேலாடையுடன் (T-Shirt) துவங்குகிறது. சேகுவாராவை, அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதி முந்திரி தோப்புகளில் ரகசியக் கூட்டம் நடத்தும் தமிழத்தேசியப் போராளி என்று நினைத்தாரோ என்னவோ.

  கொஞ்சம் நாட்களிலேயே, சட்டையை லாவகமாக கழற்றிவிட்டு, கருஞ்சட்டை அணிய ஆரம்பித்தார். அதையும் கழற்றிவிட்டு பச்சை சட்டை அணிந்து பவனி வருகிறார். நரம்பு மட்டும் இன்னும்ம்ம்……

  பிரபாகரனைக் கொண்டு வந்து இங்குத் தூக்கிலிடவேண்டும் என்று முழங்கியத் தலைவிக்காகப் பிரச்சாரம் செய்த அண்ணனின் chameleonic தன்மையைப் புகழச் சொற்களின்றித் தடுமாறித்தான் போகின்றேன். இலை மலர்ந்து ஈழமும் மலர்ந்ததை நாம் கண் கூடாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.

  பிரபாகரனை இவர் சந்தித்தது ஒரே ஒரு முறை, அதுவும் 15 நிமிடங்கள்...அதை வைத்து அண்ணன் எழுதிய நீண்ட, நெடிய திரைக்கதையைப் படமாக எடுத்திருந்தால் நல்ல படமாவது கிடைத்திருக்கும்.

  "என் வாழ்வில் திருமணம் என்று ஒன்று நடந்தால், தமிழ் ஈழப் பெண்ணைத்தான் மணப்பேன்" என்று மைக் உடைய உரக்கக் கத்தியவர், கட்சி மாறிகளின் பிதாமகன், ராபின் ஹூட் ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்ற காளிமுத்து அவர்களின் செல்ல மகள் எப்படி/எப்போது ஈழப் பெண்ணானார் என்பது அண்ணனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

  “If I were” என்ற hypothetical phrase அண்ணனுக்காகவே இருக்கிறது. அதனால் தான் அள்ளி விடுகிறார் அறிக்கைகளை. "அனைத்து மேம்பாலங்களையும் உடைத்து சுரங்கப் பாதைகளாக மாற்றுவேன்" சமீபத்திய “If I were” கூற்று.... கூத்துன்னு சொன்னாக்கூட பொருத்தமாகத்தான் இருக்கிறது.
  "முருகேசா....நடக்கவே முடியலையாம்..." என்ற வசனம்தான் ஞாபகத்தில் வந்துத் தொலைக்கின்றது.
  ஒன்று மட்டும் அண்ணனுக்கு நன்றாக வருகிறது. எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கத்துடன் ஹை டெசிபலில் பேசுவது. என்ன இருந்தாலும் அண்ணன் 15 ஆண்டுகளாக கலைத் துறையில் இருந்தவர் அல்லவா!!!

  அவர் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியவர் அல்ல. தீவிர என்ன...அவர் எதிர்க்கப்படவேண்டியவரே அல்ல...
  பின்??? புறந்தள்ளப் படவேண்டியவர்!

  ReplyDelete
 5. வழக்கம்போல் வடுகர்கள் எல்லாம் சீமானை வசைபாடத் தொடங்கி விட்டனர் போல் தெரிகிறது. :-)

  ReplyDelete
  Replies
  1. வெயில் அதிகமாகி விட்டது. பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆமாம் வியாசன் என்பது தமிழ்ப் பெயரா? ஆரிய காவியமான மகாபாரதத்தை படைத்தது யார்? அவர் எங்கிருந்து வந்தார்?

   Delete
 6. ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும் , இதை சொன்னால் திருட்டு திராவிடனுக்கு கோபம் வருது.. காலம் பூராவும் இந்த வடுகனையே நக்கிதான் பொழைக்க வேண்டுமா? உலகத்தில் நடக்காத விஷயம்.. இந்த தமிழ் நாட்டில் நடக்குது. தமிழ் நாட்டை தமினக்கு ஆள தகுதி இல்லை , அது அதை தெலுன்ங்கனோ இல்லை மற்ற இனத்துக்காரன் ஆள முடியும். தமிழ் எப்போதும் அடிமை.. மற்ற இனத்துக்காரன் தமிழ் நாட்டை காரி துப்புறான்.

  ReplyDelete
  Replies
  1. வெயில். கடுமையான வெயில். கொஞ்சம் ஓய்வெடுங்கள் சார்.

   Delete
  2. இவனுக இப்படித்தான் சீமானின் எழுச்சியை தடுத்து வளர்ச்சியை முடக்க முனைகிறார்கள்..
   ஏன் இதைப்போல கருணானிதி,ஜெயலலிதா அத்தோடு மற்றவர்களை பற்றியும் ஆராயலாமே அப்போது தெரியும் சீமான் 1000 மடங்கு உசத்தியென்று

   Delete
  3. இவனுக இப்படித்தான் சீமானின் எழுச்சியை தடுத்து வளர்ச்சியை முடக்க முனைகிறார்கள்..
   ஏன் இதைப்போல கருணானிதி,ஜெயலலிதா அத்தோடு மற்றவர்களை பற்றியும் ஆராயலாமே அப்போது தெரியும் சீமான் 1000 மடங்கு உசத்தியென்று

   Delete
  4. இவர்கள் அண்ணணிண் கூடவே பிறந்து வளர்ந்தவர்கள் போல கதை விடுகிறார்கள் பரவாயில்லை இன்னும் நிறைய யோசியிங்கள் சொம்பு நக்கிகளே.....

   Delete
 7. அண்ணன் சீமான் அவர்களின் ஒரு நாள்:
  8:00 மணி : சுடச்சுடப் பருத்திப் பால் , உதவியாளர் கொண்டு வந்து அண்ணனுக்கு தருகிறார்.
  9:00 மணி: நல்ல தரமான காலை உணவு. பொங்கல், வடையுடன்.
  10:00 மணி: பூனைப் படைகள் புடை சூழ அண்ணன் பரப்புரைக்கு கிளம்புகிறார். முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் கட்சியினர் வாகனங்கள்.
  இடையில் சில இடங்களில் அண்ணன் வாக்குக் கேட்கிறார். பூனைப் படை பலத்த பாதுகாப்பு கொடுக்கிறது.
  1:00 மணி: ஆம்பூர் பிரியாணி, நாட்டுக்கோழி குழம்புடன் விருந்து. தலைவாழை இலையில். அண்ணன் வெளுத்து வாங்குகிறார்.
  இடையில் உதவியாளர்களுக்கு முக்கியமான சமூகப்பணி நிறைவேற்ற ஆணையிடுகிறார். "பிரியாணியும் நாட்டுக்கோழி குழம்பும் ரொம்ப நல்லா இருக்கு, இரவுக்கும் மறக்காமல் எடுத்து வையுங்கள்"
  2:00 மணி: உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா...நல்ல தூக்கம்
  3:00 மணி: இன்றைய பரப்புரைக் குறித்து கட்சியினருடன் ஆலோசனை. (அண்ணனுக்கு என்ன பேசவேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள்)
  4:00 மணி: சிற்றுண்டி முடித்துவிட்டு மாலை பரப்புரை கூட்டத்திற்கு அண்ணன் செல்கிறார்.
  5:00 மணி: அண்ணனின் வீர உரை.....ஆவேசப் பேச்சு...."திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஓட்டுபோட்டால் உங்கள் கையில் குஷ்டம் வரும்"
  மக்கள்: இவங்க ரெண்டு பேருக்கும் ஓட்டுபோடச் சொன்ன உனக்கு என்ன வரும்தான் எங்களுக்கு கவலையா இருக்கு...!
  8:00 மணி: மறக்காம...எடுத்து வச்சுட்டீங்களா....என்று கேட்டு வாங்கி ஆம்பூர் பிரியாணியும் கோழிக் குழம்பும் விரும்பி சாப்பிடுகிறார்.
  10:00 மணி: சாப்பிட்டக் களைப்பில் அண்ணன் உறங்குகிறார்.

  என்ன வாழ்க்கைடா சாமி! சும்மா இருக்கும்போதே....!

  ReplyDelete
  Replies
  1. இதையெல்லாம் பாத்தா எப்படி அவருக்கு இதற்க்கெல்லாம் பணம் கிடைக்கிறது? இனவாதத்தை வைத்து தமிழகத்தில் கூத்தாட சீமானுக்கு வெளியே இருந்து யாரோ டாலர்கள் வழங்குகிறார்கள்.

   Delete
 8. இதே போல கருணானிதி,ஸ்டாலின்,ஜெயலலிதா மற்றும் இதர அரசியல்வாதிகளையும் அவர்கள் வரலாற்றையும் ஆராய்ந்தால் சீமான் 1000 மடங்கு மேலானவர் என்பதை உணரலாம்.
  கொடுத்த வாக்குறுதிகளையும் சொன்ன வார்த்தைகளையும் காப்பற்றியவர் யாராவது தமிழகத்தில் உண்டா?

  ReplyDelete
 9. லண்டன் நகர மேயராக பாகிஸ்தான் வம்சாவளி ஒருவர் லேபர் கட்சியில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் சீமான் தூய தமிழ்மரபணு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்!

  ReplyDelete
 10. மக்கள் இந்த தேர்தலில் தங்களையே அறியாமல் செய்த மிக நல்ல செயல்கள் இனவாதி சீமானுக்கு, ஜாதிவெறிகட்சி பாட்டாளி மக்கள் கட்சிக்கு, வைகோவுக்கு கொடுத்த பதில்.
  தீமையான அதிமுகாவை மக்கள் ஆதரிக்கும் போது கருணாஸ்சின் ஜாதிவெறிகட்சி முக்குலத்தோர் புலிபடை(?)யையும் ஆதரித்துள்ளனர்.

  ReplyDelete