Friday, April 22, 2016

தடை வரும் முன்பாகவே





தேர்தல் நெருக்கத்தில் இந்த நூல் பற்றி எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் சொத்து குவிப்பு வழக்கு பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் யாரும் பேசக்கூடாது என்று ஜெயலலிதா வழக்கு போட்டுள்ளதாக ஒரு செய்தி உலவுவதால் இந்த நூலைப்பற்றி இப்போதே பகிர்ந்து கொள்கிறேன். அப்படி தடை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஐயப்படுபவர்களுக்கு ஒரு விஷயத்தை கடைசியில் நினைவு படுத்துகிறேன்.


நூல்            : ஜெயலலிதா வழக்கு – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை
ஆசிரியர்       : வெ.ஜீவகுமார்.
வெளியீடு      : பாரதி புத்தகாலயம்
                  சென்னை 18
விலை         : ரூபாய் 40.00

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டபோது தமிழகத்தில் நடந்த “கடவுளை மனிதன் தண்டிப்பதா, காவிரியை எடுத்துக் கொள்” உள்ளிட்ட ஏராளமான கூத்துக்களை பதிவு செய்கிற இந்நூல், ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம், திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய காலம், அரசியலில் மேலே வந்தது ஆகியவற்றை சொல்கிறது. அதன் மூலம் முதல்வர் ஆகும் முன் அவர் அப்படியொன்றும் மிகப் பெரிய கோடீஸ்வரியாக இல்லை என்பதையும் ஆசிரியர் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளின் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளதால் அம்மையார் எப்படியெல்லாம் கொள்ளையடித்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது.

சொத்து குவிப்பு வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடித்தார்கள் என்பதையும் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்திலும் ஜவ்வாய் இழுத்த கதை விபரமாக சொல்லப்படுகிறது.

குன்ஹா  அளித்த தீர்ப்பின் விபரங்களும் அதற்குப் பின்பு பவானிசிங் எப்படியெல்லாம் வழக்கை நீர்த்துப் போக வைத்தார் என்பதையும் குமாரசாமி அன்பழகன் தரப்பு வக்கீல்களை நடத்திய விதத்தையும், அவருக்கு பிணை கொடுக்க உச்சநீதி மன்றம் எடுத்துக் கொண்ட அக்கறையையும் சுப்ரமணியசாமியின் இரட்டை நிலையையும் படிக்கையில் சாமானிய மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்து போகும்.

பக்கிரி போல ஆடை அணிந்த ஒரு ஏழை  மனிதனுக்கும்   மிடுக்கான உடை அணிந்த பானை வயிறு கொண்ட பணக்காரனுக்கும்  ஒரு வழக்கில் சரி சமமான ஆதாரங்கள் இருந்தால் நீதிபதி பணக்கார மனிதனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு எழுதுவார் என்று சொன்னதற்காக தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடிற்கு ஐம்பது ரூபாய் அபராதமும் பத்து நாள் சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டதை நினைவு கொள்கிற ஆசிரியர், நீதி யார் பக்கம் உள்ளது என்ற கேள்வி இன்றும் பொருந்துகிறது என்பதைச் சொல்லி

“ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதி அமரும் போது அவரும் விசாரணைக்கு உள்ளாகிறார். அவர் செயல்பாட்டில் தவறு ஏற்பட்டால் சார்பற்ற நிலையிலிருந்து அவர் பிறழ்கிறார் என்று அவர் மீதும் ஒரு கண் வைக்கப்பட வேண்டும்” என்று நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியதை நினைவு படுத்தி

“அரசாங்கங்களையும் அரசாங்கத்தை கண்காணிக்கும் நீதிமன்றங்களையும் சேர்த்து மக்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்”

என்று நூலை நிறைவு செய்கிறார்.

நீதிமன்ற விசாரணைகளின் போது உடனிருந்த உணர்வை இந்த நூல் அளிக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகளின் பட்டியலும் பதினைந்து பக்கங்களுக்கு கொடுக்கப்பட்ட சொத்து விபரங்களும் மலைக்க வைக்கிறது. வழக்கு தொடர்பாக வெளிவந்த பல கேலிச்சித்திரங்கள் கூடுதல் சுவாரஸ்யம் அளிக்கிறது.

இந்த நூலை மலிவுப்பதிப்பாக வெளியிட்டு தமிழகமெங்குமோ அல்லது குறைந்தபட்சம் ஆர்.கே.நகர் தொகுதியிலாவது மக்களிடம் வினியோகித்தால் அது அம்மையாரை தோற்கடிக்க உதவிகரமாக இருக்கும்.

முக்கியக் குறிப்பு ஒன்று : குமாரசாமி, மகேந்திர பூபதி போன்ற நீதிபதிகள் உள்ள நாட்டில் தடை கிடைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

முக்கியக் குறிப்பு இரண்டு : இந்த நூலின் ஆசிரியர் தோழர் வெ.ஜீவகுமார் ஒரு வழக்கறிஞர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினரான தோழர் வெ.ஜீவகுமார், திருவையாறு சட்ட மன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.


அவருக்கு வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். திருவையாறு தொகுதி வாக்காளர்கள் சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து தோழர் வெ.ஜீவகுமாரை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவருடைய இன்னொரு நூல் மிக முக்கியமானது. அதைப்பற்றி நாளை எழுதுகிறேன்.






5 comments:

  1. Anne, do you know about investigation against Kunha & partners??

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஏதாவது இருந்தால், உமக்கு வலைப்பக்கம் ஏதாவது இருந்தால் அதில் வெளியிடும். பெயரைச் சொல்ல முடியாத உமக்கெல்லாம் அவரைப் பற்றி எழுத அருகதை உண்டோ? ஜெயலலிதா பற்றிய பதிவு இது. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் மிஸ்டர் கோழை அனானி

      Delete
    2. அடித்து சொல்கிறேன்,இந்த அனானி பன்னாடை,காவிரிமைந்தன்
      என்ற வலைப்பக்கத்தை ரெகுலராக படிக்கும் அடிமை.அங்கே ஒரு
      பெரிய கூட்டமே அம்மையாரின் காலை நக்கி பிழைக்கும்
      கூட்டமாக திரிகிறது.

      Delete
  2. dedicating this videos for you..
    https://mathimaran.wordpress.com/2016/04/20/i-1230/

    ReplyDelete
    Replies
    1. அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் அனானி அவர்களே, இந்த வீடியோவை எனக்கு சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் என்னவோ?

      அயோத்தி ராமனைப் பற்றி சொல்லப்பட்டது எனது பெயர் ராமன் என்பதால் என்னை பாதிக்கும் என்று நினைத்தால் உமது எண்ணம் சிறுபிள்ளைத்தனமானது. எனக்கும் அந்த ராமனுக்கும் பெயரைத் தவிர வேறு தொடர்பு கிடையாது.

      இடதுசாரிகளைப் பற்றி அவர் பேசியது அவரது வழக்கமான காழ்ப்புணர்வின் வெளிப்பாடு. மனு தர்மத்தை கம்யூனிஸ்டுகள் எதிர்க்கவில்லை என்பது அபத்தமான குற்றச்சாட்டு. மார்க்சிஸ்டுகளையும் வலதுசாரிகளையும் இடதுசாரிகளையும் ஒரே தட்டில்வைத்து பார்க்கிற அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன். மஞ்சள் கண்ணாடி அணிந்தவர்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலையாகவே தெரியும்.

      இப்படி அனானியாக வந்து பகடி செய்வது அசிங்கமாக தெரியவில்லையா? உங்களுக்கு வாலியை மறைந்து கொன்ற ராமன் விருதை சமர்ப்பிக்கிறேன்.
      Better learn manners

      Delete