Tuesday, March 15, 2022

பணமில்லாதது கூட கடுப்பில்லை. ஆனால்

 


நான் சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கிக்கு எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் ஒரு ஏ.டி.எம் இயந்திரம் உண்டு. செல்லா நோட்டு விவகாரத்துக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை செயல்படவில்லை. அதற்குப் பின்பம் பெரிய முன்னேற்றம் கிடையாது. பத்து முறை பணம் எடுக்கப் போனால் ஒரு முறைதான் பணம் எடுக்க முடியும்.

 எப்போது பணம் எடுக்கப் போனாலும் முதலில் அங்கே முயற்சி செய்து விட்டு அங்கே பணம் எடுக்க முடியாதபோது வேறு வங்கியின் ஏடிஎம் மில் இருந்து பணம் எடுப்பேன்.

 நாம் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வருவதற்கு முன்பாக இன்னொரு குறுஞ்செய்தி வரும்.

 அது என்ன?

 எப்போதும் நடப்பது போல நேற்று முன் தினமும் நடந்தது. ஆனால் இம்முறை பதிவு செய்தேன்.

 


மேலே உள்ளது பணம் தர இயலவில்லை என்று ஏடிஎம் திரையில் வந்த செய்தி.

 கீழே உள்ளது வங்கியிடமிருந்து வந்த குறுஞ்செய்தி.

 


“நீங்கள் வேறு வங்கியின் ஏடிஎம் மில் பணம் எடுப்பதாக தெரிகிறது. கட்டணங்களைத் தவிர்க்க  ஐ.ஓ.பி ஏடிஎம் களில் மட்டுமே பணமெடுங்கள்”

 ஐ.ஓ.பி ஏடிஎம் மில் பணம் இல்லாதது கூட கடுப்பாக இல்லை. அங்கே பணம் இல்லாத காரணத்தால் வேறு வங்கி ஏடிஎம் மில் பணம் எடுக்கும் போது அதீத கடமை உணர்ச்சியில் குறுஞ்செய்தி அனுப்புகிறார்களே, அதுதான் மிகுந்த கடுப்பைத் தருகிறது.

No comments:

Post a Comment