Thursday, March 3, 2022

இந்த வருடம் செம வேட்டை

 



 நேற்று சென்னை புத்தக விழாவுக்கு சென்றிருந்தேன். வேறு ஒரு முக்கியமான வேலையை முடித்து விட்டு (அது முடியவில்லை என்பது வேறு விஷயம்)  நந்தனம் மைதானம் சென்ற போது மணி மதியம் 1.30. அருசுவை அரசு நடராஜன் கேட்டரிங் சர்வீஸ் என்று சொல்லி இருந்ததால் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொள்ளலாம் என்று போய் விட்டேன். ஏமாற்றவில்லை. அறுபது ரூபாய்க்கு சூடான சாம்பார் சாதம் நன்றாகவே இருந்தது. அளவும் திருப்திகரமாக இருந்தது. பிஸிபேளாபாத் என்று பெயர் வைத்திருந்தால் திருப்தி இல்லை என்று சொல்லியிருப்பேன். 




 நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பாரதி,காந்தி,வ,உ.சி சிலைகள் முன்பு புகைப்புடம் எடுத்துக் கொண்ட பின்பு அரங்கிற்குள் நுழைந்தேன். இருபத்தி எட்டு புத்தகங்களின் பட்டியல் கைவசம் ஸ்டால் எண் வரிசையோடு (எக்ஸலில் தயார் செய்தது) கைவசம் இருந்தது. ஆகவே அந்த வரிசைப்படியும் அதைத் தாண்டியும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிதானமாக இருந்து பிடித்தமான நூல்களை வாங்கிக் கொண்டு வேலூர் திரும்பினேன்.

 என் பட்டியலில் இருந்த நூல்களில் நான்கை மட்டுமே வாங்கவில்லை. மூன்று நூல்கள் தீர்ந்து போயிருந்தது. விலை ரொம்ப அதிகம் என்று தோன்றியதால் வாங்கவில்லை.

 பட்டியல் கீழே உள்ளது. இவற்றில் உள்ள நூல்களில் எதையேனும் யாராவது வாங்க விரும்பினால் உதவிகரமாக இருக்கும் என்பதால் ஸ்டால் எண்ணோடு பட்டியலை தயாரித்துள்ளேன்.

 வாங்கிட்டே சரி, படிப்பியா?

 என்ற உங்கள் மனதில் குரல் எனக்கு கேட்டு விட்டது. கொரோனா பாதிப்புக்குப் பின்பு கார் புறப்பட்ட உடனேயே தூக்கம் வந்து விடுகிறது என்று சென்ற ஆண்டு படித்த நூல்களின் பட்டியலை ஜனவரி முதல் நாள் பதிவு செய்த போது எழுதியிருந்தேன். அந்த நிலைமையில் இப்போது முன்னேற்றம் இருக்கிறது. நேற்று சென்னை போகும் போது பாதியில் இருந்த ஒரு நூலை படித்து முடித்தேன். வரும் போது நேற்று வாங்கிய, எங்கள் மதுரைத் தோழர் ச.சுப்பாராவ் எழுதிய “வாசிப்பு-அறிந்ததும் அடைந்ததும்” படித்து முடித்தேன். அடுத்த நூலை எடுக்கும் முன்பாக வெளிச்சம் மங்கி விட்டது.

 அதனால் பழைய பாக்கி உட்பட அனைத்தையும் படித்து முடித்து விடலாம் என்று நம்பிக்கை உள்ளது.

 


இப்போது பட்டியல் உங்களுக்காக. .



No comments:

Post a Comment