Tuesday, March 1, 2022

டெய்லி சேலரி 6000 ரூபீஸ் -காளி

 




கீழே  உள்ளது நேற்று வந்த ஒரு குறுஞ்செய்தி.


வீட்டிலிருந்தே வேலை பார்க்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தினசரி  சம்பளம் 6000 ரூபாய். விபரங்களுக்கு 9145580913 என்ற எண்ணிற்கு வாட்ஸப் செய்யவும் என்று சொன்னது அந்த செய்தி. 

இது ஒரு டுபாக்கூர் செய்தி என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அப்படி என்னய்யா வேலை ஒரு நாளைக்கு 6000 ரூபாய் சம்பளத்தோடு தருவது போல என்று அறிந்து கொள்ள ஒரு ஆவலும் இருந்தது.

கப்பல் நின்று போனால் கடலில் இறங்கி தள்ளும் வேலையை செந்தில் கவுண்டமணிக்கு கொடுத்தது போல இருக்குமா என்ற சந்தேகம்தான். அந்த எண்ணை சேமித்து விட்டு பார்த்தால் வாட்ஸப் முகப்பு படமாக இருந்தது கீழே உள்ள படம் இருந்தது.




காளியோடு வம்பு வேண்டாம் என்று முயற்சியை கைவிட்டு விட்டேன். கிட்டத்தட்ட 95 % பேர் புறக்கணித்தாலும் 5 % ஏமாந்தால் கூட அதுவே இது போன்ற மோசடிப் பேர்வழிகளுக்கு லாபம்தான். 

No comments:

Post a Comment