இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே உள்ளது.
கடந்த வருடங்களை விட இந்த வருடம் கொஞ்சம் குறைவுதான். இதற்கு மேலும் சுமக்க முடியாது என்ற நிலை வந்த போது வெளியே வந்து விட்டேன்.
பபாசியின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று யோசித்திருந்தேன். ஆனால் நான்கு மணிக்கு ஒரு சிலரே கூடியிருந்தார்கள். ஆறு முப்பது மணிக்கு முன்பாக புறப்பட வேண்டிய அவசியம் இருந்ததால் இயக்கம் தொடங்கும் வரை காத்திருக்க இயலவில்லை.
பட்டியல் போடும் போதுதான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த சில புத்தகங்களை மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. வேறு வாய்ப்பு கிடைக்காதா என்ன?
புத்தக விழாவிற்கு வந்ததன் நினைவாக அரங்கிற்கு முன்பாக அமைக்கப் பட்டிருந்த திருவள்ளுவரின் மணல் சிற்பத்தின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன், அப்பளமோ ஊறுகாயோ வாங்காமல் . . .
புத்தக விழாவின் முக்கியமான அம்சம் பற்றி நாளை.
எண் | பெயர் | ஆசிரியர் | தன்மை | பக்கம் |
1 | சூல் | சோ.தர்மன் | நாவல் - புனைவு | 500 |
2 | மதுரை வீரன் | கண்ணதாசன் | கதை வசனம் | 245 |
3 | பாட்டையாவின் பழங்கதைகள் | பாரதி மணி | அனுபவம் | 122 |
4 | ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் | பசு.கவுதமன் | அரசியல் | 208 |
5 | நெஞ்சக்கனல் | நா.பார்த்தசாரதி | நாவல் - புனைவு | 248 |
6 | ஞாயிறு கடை உண்டு | கீரனூர் ஜாகீர்ராஜா | நாவல் - புனைவு | 200 |
7 | பணத்தோட்டம் | அறிஞர் அண்ணா | கட்டுரைகள் | 70 |
8 | சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் | கண்ணதாசன் | அனுபவம் | 128 |
9 | நாடோடி மன்னன் | கண்ணதாசன் | கதை வசனம் | 200 |
10 | கருணை நதி | மிதயா கானவி | நாவல் - புனைவு | 120 |
11 | இந்து மதத்தின் அடையாளங்கள் | அண்ணல் அம்பேத்கர் | கட்டுரைகள் | 40 |
12 | தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக தீண்டாதவர்கள் | அண்ணல் அம்பேத்கர் | கட்டுரைகள் | 40 |
13 | சாதியின் சாபக்கேடு | அண்ணல் அம்பேத்கர் | கட்டுரைகள் | 26 |
14 | ஸ்டெரிலைட் போராட்டம் அரசு வன்முறை | உ.வாசுகி | அறிக்கை | 48 |
15 | மோடி ஏன் நமக்கானவர் இல்லை? | பழனி ஜஹான் | அரசியல் | 48 |
16 | பின் நவீனத்துவம் - கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமுடி | திருப்பூர் குணா | அரசியல் | 88 |
17 | வேட்டையாடு விளையாடு | பேரா.சோ.மோகனா | இயற்கை | 80 |
18 | பூவரசம் வீடு | பாஸ்கர் சக்தி | நாவல் - புனைவு | 172 |
19 | கீதாஞ்சலி | ரவீந்திரநாத் தாகூர் தமிழில் வைதேகி ஹெர்பர்ட் | கவிதைகள் | 102 |
20 | தாகூர் சிறுகதைகள் | ரவீந்திரநாத் தாகூர் தமிழில் த.நா.குமாரஸ்வாமி | சிறுகதைகள் | 192 |
21 | திப்பு சுல்தான் - அவதூறுகளும் பதில்களும் | செ.திவான் | வரலாறு | 116 |
22 | நடுகல் | தீபச்செல்வன் | நாவல் - புனைவு | 200 |
23 | கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நாகரீகம் | தொல்லியல் துறை | கீழடி அகழ்வாய்வு | 58 |
24 | கடற்காகம் | முஹம்மது யூசுஃப் | நாவல் - புனைவு | 328 |
25 | பாலு மகேந்திரா கலையும் வாழ்வும் | யமுனா ராஜேந்திரன் | திரைப்படம் | 262 |
26 | பெரியார் -அறம், அரசியல், அவதூறுகள் | சுகுணா திவாகர் | அரசியல் | 110 |
27 | இடக்கை | எஸ்.ராமகிருஷ்ணன் | நாவல் - புனைவு | 336 |
28 | ஜே.ஜே. சில குறிப்புகள் | சுந்தர ராமசாமி | நாவல் - புனைவு | 224 |
29 | ஒற்றைச்சிறகு ஓவியா | விஷ்ணுபுரம் சரவணன் | நாவல் - புனைவு | 120 |
30 | யார் கைகளில் இந்து ஆலயங்கள்? | எஸ்.ஜி.ரமேஷ்பாபு | ஆலய அரசியல் | 198 |
31 | இஸ்லாமிய பெண்ணியம் | ஹெசஸ்ஜி.ரசூல் | பெண்ணியம் | 48 |
32 | சுத்த அபத்தம் | டாக்டர் ஜி.ராமானுஜம் | நககைச்சுவை | 80 |
33 | ஓர் இரவின் மொழிபெயர்ப்பு | பாரத தேவி | நாவல் - புனைவு | 168 |
34 | சில இடங்கள் சில புத்தகங்கள் | ச.சுப்பாராவ் | அனுபவம் | 138 |
35 | பழைய பேப்பர் | யுவகிருஷ்ணா | திரைப்படம் | 208 |
36 | அந்தோன் செகாவ் கதைகள் | தமிழழில் ரா.கிருஷ்ணையா | சிறுகதைகள் | 144 |
37 | தர்ப்பண சுந்தரி | எஸ்.வி.வேணுகோபால் | சிறுகதைகள் | 120 |
38 | உருள் பெருந்தேர் | கலாப்ரியா | அனுபவம் | 262 |
39 | இந்திய கல்வியின் இருண்ட காலம்? | பலர் | கட்டுரைகள் | 128 |
40 | கஜாப்புயலும் காவிரி டெல்டாவும் | வஹீதையா கான்ஸ்தந்தீன் | சூழலியல் | 96 |
41 | சங்க இலக்கியக் காட்சிகள் மார்க்சிய வெளிச்சத்தில் | வெ.பெருமாள்சாமி | இலக்கியம் | 160 |
42 | எஞ்சிய சில நல்ல பக்கங்கள் | ச.சுப்பாராவ் | சிறுகதைகள் | 80 |
43 | விரலால் சிந்திப்பவர்கள் | ச.சுப்பாராவ் | கட்டுரைகள் | 96 |
44 | புதிய நீதிக்கதைகள் | சுஜாதா | குட்டிக்கதைகள் | 158 |
45 | அனுமதி | சுஜாதா | சிறுகதைகள் | 184 |
46 | Halla Bol | Sudhanva Deshpande | On Safdhar Hashmi | 258 |
7157 |
ஆகா
ReplyDeleteதங்களின் வாசிப்பு ஆர்வம் போற்றுதலுக்கு உரியது நண்பரே
ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூல்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள்.
இவ்வாண்டுதான் முதன்முதலாகச் சென்னைப் புத்தகக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது
நன்றி
Once again I congratulate you for the interest shown in buying books on different topics and tireless reading.
ReplyDelete