Friday, January 24, 2020

பூட்டினால் மட்டும் அடங்குவார்களா?



புதுடெல்லி சட்டப்பல்கலைக் கழக மாணவர் பேரவையின் அழைப்பில் பெயரில் அங்கே உரையாற்றச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் வளாகத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக வளாக வாயிலை பூட்டி விட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.

மாணவர்கள் அவரது உரையைக் கேட்கக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட அல்பத்தனம் இது.

ஆனாலும் வளாகத்தின் வாயில் பூட்டிய கதவுக்கு அப்பால் நின்று மாணவர்களோடு உரையாடி விட்டே தோழர் பிரகாஷ் காரத் அங்கே இருந்து புறப்பட்டுள்ளார்.

மோடி அரசை விட முட்டாள் அரசு இருக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று.

மாணவ சமுதாயம் பற்றி எதுவும் தெரியாதது மோடி அரசு. படித்திருந்தால்தானே தெரியும்! 

நீங்கள் மாணவர்களை அடக்க, அடக்கத்தான் அவர்கள் இன்னும் அதிக வேகத்தோடு வெகுண்டெழுவார்கள்.

இந்த ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை எழுதப் போவது மாணவர்கள்தான். 

1 comment:

  1. ஹிட்லரின் ஆட்சியிலிருந்த ஹங்கேரியில் யூதராக பிறந்தவர் ஜார்ஜ் சோராஸ்.

    பத்து வயதாகும்போது ஹிட்லர் யூத மக்களை குறிவைத்து நாடு கடத்துகிறான்.

    ஜார்ஜின் தந்தை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தாங்கள் கிருஸ்துவர்கள் என்று ஆவணம் பெற்று தப்பிக்கிறார்கள்.

    பின்னர் இங்கிலாந்து செல்லும் ஜார்ஜ் அமெரிக்காவின் இன்றைய பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவர்.

    நேற்று டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் இந்தியாவை பற்றி வெளுத்து வாங்கியுள்ளார்.

    தன்னுடைய சிறு வயது கொடுமையை நினைவு கூர்ந்த அவர், போலி மற்றும் வெறித்தன தேசியவாதத்தின் அடுத்த மிக பெரிய ஆபத்து இந்தியாவில் உருவாகியுள்ளது என்றார்.

    ஜனநாயகம் மூலம் ஆட்சிக்கு வந்த மோடி அரசு லட்சக்கணக்கான முஸ்லிம்களை குறிவைத்து மிரட்டுகிறது. இது உலகத்திற்கே மிக பெரிய அபாயம் என்றும் எச்சரித்திருக்கிறார்.

    உலகத்தில் இந்தியாவின் மதிப்பை இந்த அரசு உயர்த்தியது என்பது போய், ஹிட்லரின் நாஜி ஜெர்மனி போல இந்தியாவின் பெயரை கெடுக்க தொடங்கி உள்ளார்கள்.

    இதே மாநாட்டில் இந்திய அரசு சார்பில் (!!) கலந்து கொண்ட ஜக்கி வாசுதேவ் இதை பற்றி வாய் திறக்கவில்லை.

    ReplyDelete