குடியுரிமை
சட்டம் தொடர்பான போராட்டங்கள் நிறுத்தப்பட்டால்தான் அச்சட்டம் குறித்த வழக்கு விசாரணையை
தொடங்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
பொதுவாக
எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்கள் நடைபெறுகையில் போராட்டத்தை
கைவிட்டால்தான் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று முதலாளிகள் சொல்வார்கள். பேச்சுவார்த்தையே
நடைபெறாத காரணத்திலோ அல்லது பேச்சு வார்த்தை தீர்வை அளிக்காத காரணத்தால்தான் போராட்டமே
துவங்கி இருக்கும். ஆனாலும் முதலாளிகள் அப்படித்தான் நிபந்தனை விதிப்பார்கள்.
முதலாளிகள்
குரலில் அதே போல ஜனநாயக விரோதமாக நீதிமன்றமும்
பேசுவது நியாயமல்ல. குடியுரிமைச் சட்டம் அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கதா என்பதை
ஆய்வு செய்வது அதன் கடமை. அதற்கு போராட்டங்கள் கூடாது என்பது முன் நிபந்தனை விதிப்பதெல்லாம்
அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.
மேலும்
வழக்கு தொடுத்துள்ளவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று சொல்ல முடியாது.
அவர்களால் எப்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த இயலும்? இதைக் கூட புரிந்து
கொள்ள முடியாதவரா தலைமை நீதிபதி?
சட்டத்தின்
அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பளித்த போதே
நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது.
No comments:
Post a Comment