Thursday, January 16, 2020

அப்சல் குரு குற்றச்சாட்டைக் கேட்டிருந்தால்



12 லட்ச ரூபாய்க்காக இரண்டு தீவிரவாதிகளை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு கூட்டி வந்து மாட்டிக் கொண்ட போலீஸ் அதிகாரி தேவேந்தர்சிங்  ஒன்றும் புதிய குற்றவாளி அல்ல.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குரு இந்த அதிகாரி மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிக்கு டெல்லியில் வீடு பார்த்து கொடுத்து தங்க வைத்ததுதான் அப்சல் குருவின் கழுத்திற்கு தூக்கு கயிறு வருவதற்கு காரணமாக இருந்தது.

இப்போது கைதான தேவேந்தர்சிங்கின் மிரட்டல் காரணமாகவே தான் அந்த தீவிரவாதிக்கு வீடு பார்த்துக் கொடுத்ததாகச் சொன்ன அப்சல் குருவின் குற்றச்சாட்டை காவல்துறையோ நீதிமன்றமோ கண்டு கொள்ளவே இல்லை.

மாறாக தேவேந்தர் சிங்கிற்கு ஜனாதிபதி விருது உள்ளிட்ட வீரப் பதக்கங்கள் கிடைத்தது. 

அன்று அப்சல் குருவின் குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்திருந்தால் காவல்துறைக்கு இன்றைய அசிங்கம் நிகழ்ந்திருக்காது. அப்சல் குரு கூட உயிர் பிழைத்திருக்கலாம்.

இப்போதாவது தேவேந்தர் சிங்கை ஒழுங்காக விசாரிக்க வேண்டும். அந்த கறுப்பாட்டின் பின்னணியில் உள்ள மற்ற கயவர்களையும் கண்டு பிடிக்க வேண்டும்.

மோடி அரசு செய்யுமா?

எனக்கு நம்பிக்கை இல்லை.


No comments:

Post a Comment