இந்திய தேசத்தின் முதன்மையான பொதுத்துறை நிறுவனம் எல்.ஐ.சி ஆப் இந்தியா 01 செப்டம்பர், 1956 அன்று உதயமானது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்த நாள் 19, ஜனவரி, 1956.
ஆம் அன்றுதான் ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கும் அவசரச் சட்டத்தை அன்றைய நேரு அரசு பிறப்பித்தது. நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் வாணொலியில் அம்முடிவை அறிவித்தார்.
243 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கொள்ளைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட நாளும் இது.
அதன் பின்பே எல்.ஐ.சி உதயமானது.
ஐந்து கோடி ரூபாய் மூலதனத்தோடு தொடங்கப்பட்ட நிறுவனம் முப்பது லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்போடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
வாஜ்பாய் காலத்தில் தனியார் கம்பெனிகளுக்கு மீண்டும் இன்சூரன்ஸ் துறையின் கதவுகள் திறந்து விடப்பட்ட போதும்
இன்றும் இன்சூரன்ஸ் சந்தையில் பிரிமிய வருமானத்தில் 72 % ம் பாலிசிகள் எண்ணிக்கையில் 76 % ம் கொண்டு தன்னுடைய முதன்மைப் பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
எல்.ஐ.சி யின் வளர்ச்சி தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கண்களை மட்டுமல்ல மோடி அரசின் கண்களையும் உறுத்துகிறது. எல்.ஐ.சி யை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று துடிக்கிறது.
எல்.ஐ.சி தோன்றுவதற்கு காரணமாக இருந்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், என்றென்றும் எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவின் சேவைத்துறைகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்து விட வேண்டும் என்று அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301 சொன்ன காலத்தில் தொடங்கிய போராட்டம் இன்னும் உறுதியாக தொடர்கிறது.
எங்களின் இயக்கமும் தொடரும். எல்.ஐ.சி யும் பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கும்.
No comments:
Post a Comment