Monday, January 13, 2020

இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன் . . .



சென்னை புத்தக விழாவில் பபாசி செய்த செயலை அனைத்து பதிப்பகங்களும் மௌனமாகவே  கடந்து சென்று விடுவார்களோ என்ற நெருடல் உள்ளுக்குள் ஓடிகொண்டிருந்தது.

அப்படியெல்லாம் இல்லை என்று பாரதி புத்தகாலயம் நிரூபித்துள்ளது. பாரதி புத்தகாலய பொறுப்பாளரும் பபாசி துணைத்தலைவருமான தோழர் நாகராஜன் பபாசிக்கு எழுதிய கடிதம் கீழே உள்ளது.



அது மட்டுமல்லாமல் நாளை ஒரு எதிர்ப்பியக்கத்தையும் நடத்த உள்ளனர்.

அத்தகவல் கீழே நீல நிறத்தில் உள்ளது.

இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன். 


கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பபாசியின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் தோழர்.அன்பழகன் அவர்களின் மீது தரப்பட்ட புகாரை திரும்பப்பெறக்கோரியும் பல்வேறு எழுத்தாளர்களின் கையொப்பம் அடங்கிய கண்டன அறிக்கையை

சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள கீழடி வரலாற்று அரங்கம் முன்பிருந்து, வாயில் கருப்புத்துணியைக் கட்டியபடி சென்று
புத்தகக் கண்காட்சியில் உள்ள பபாசி அலுவலகத்தில் நாளை 14.01.2020 மாலை 4 மணிக்கு எழுத்தாளர்கள் வழங்குவார்கள்.


கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் பொருட்டு இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

ஒருங்கிணைப்புக்குழு.

No comments:

Post a Comment