Tuesday, January 21, 2020

உளறல் நாயகனா ரஜனி?

ரஜனிகாந்த் சமீப காலத்தில் வாய் திறந்து உதிர்த்த முத்துக்கள் எல்லாமே அபத்தம், உளறல்.

துக்ளக் கையிலிருந்தால் அவன் அறிவாளி.
சேலத்து சம்பவத்தை திரித்து தந்தை பெரியார் பற்றி பொய் பரப்பியது,
70 பைசா துக்ளக்கை பத்து ரூபாய் துக்ளக்காகவும் பிளாக்கில் ஐம்பது ரூபாய்க்கு வாங்கிப் படித்ததாகவும் கதை விட்டது.
துக்ளக்கில் படித்ததாக முன்பு சொல்லி விட்டு இப்போது அவுட்லுக் இதழில் படித்ததாக சொன்னது,
அவுட்லுக் இதழ் இந்து குழும இதழ் என்றது.

இவை அனைத்துமே அபத்தம், உளறல்.

ஆனால் இவை வெறும் உளறல் என்று ஒதுக்கி வைக்க முடியாது.

ஏனென்பதை கீழே உள்ள படம் அழகாக சொல்கிறது.



ஆம் சங்கிகள் ஆட்டி வைக்கும் பொம்மை அவர்.

எனக்கு யாரும் காவிச்சாயம் பூச முடியாது என்று கொஞ்ச நாள் முன்பாக அவர் சொன்னது உண்மைதான்.

ஆமாம்,

ஏற்கனவே நாடி, நரம்பு, புத்தி, இதயம் அனைத்திலும் காவியாக இருப்பவருக்கு ஏன் புதிதாக காவிச்சாயம் பூச வேண்டும்?

No comments:

Post a Comment