இன்று காலையில் ஒரு பதிவை படித்து விட்டு அவ்வளவு கோபம் வந்தது. ஜெயலலிதாவிற்கு ஜால்ரா தட்டுவதையே முழுமுதற் கடமையாக வைத்துள்ள பெரிய மனிதர் அவர்.
அந்த ஜால்ரா சத்தம் இந்த ஆட்சியில் என்ன நடந்தாலும் அதற்கு கட்டணம் வாங்காமல் வக்காலத்து வாங்கும் வக்கீல் என்ற அளவிற்கு மாறிப் போய் விட்டது.
தவறு செய்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்களை போலீஸ் போட்டுத் தள்ள வேண்டுமாம். மனித உரிமை மண்ணாங்கட்டி எல்லாம் அவசியம் கிடையாதாம்.
அப்படி எண்கவுண்டர் செய்தால் எல்லோரும் திருந்தி விடுவார்களாம். ஆகவே கையில் துப்பாக்கி தூக்கி கண்டவர்களையும் சுடுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் வேண்டுமாம்.
நீதிமன்றம், வழக்கு, விசாரணைக் கமிஷன் போன்ற இத்யாதிகள் இருக்கும் போதே காவல்துறையின் அராஜகம் தாங்கவில்லை. பரமகுடி துப்பாக்கிச் சூட்டை மறக்க முடியுமா? இல்லை சென்னை திருட்டுக்களுக்கு காரணம் என்று பெயர் தெரியாத வட இந்தியர்களை கொலை செய்து பைலை மூடியதைத்தான் மறக்க முடியுமா?
தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு போட்டு போலி சாட்சி உருவாக்குகிற போலீஸ்காரர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் என்ன ஆகும் என்பதைக் கூட என்னுடைய வயது அளவிற்கு அனுபவம் உள்ள அந்த பெரிய மனிதருக்கு தெரியாமல் போனது வியப்பளிக்கிறது.
கேள்வி கேட்க முடியாத சிறப்புச் சட்டம் காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களில் இருக்கிறதே! அங்கே என்ன வன்முறை குறைந்துள்ளதா? சட்டத்தைப் பயன்படுத்தி நடக்கும் அயோக்கியத்தனம்தானே அதிகரித்து உள்ளது?
இல்லை எவன் செத்தால் என்ன? நம்ம அம்மா ஆட்சியைப் பற்றி யாரும் விமர்சிப்பதற்கு முன்பாக நாம் தாக்குதலில் இறங்கி விடுவோம் என்ற புத்திசாலித்தனமா?
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறை ஒன்றும் நீதிமன்றம் அல்ல, தாங்களே தண்டிக்கும் உரிமையை எடுத்துக் கொள்ள.
பொதுப்புத்தியில் ஒரு தவறான கருத்தை உருவாக்குகிற இது போன்ற அதிமேதாவிகளை போட்டுத்தள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த பெரிய மனிதர் ஏற்றுக் கொள்வாரா?
கொஞ்சம் பொறுப்புணர்வு வந்தால் நன்றாக இருக்கும்.
பின் குறிப்பு : அங்கேயே சென்று இதை பின்னூட்டமாக இட்டிருப்பேன். பாவம், வயதானவர், ரத்தக் கொதிப்பு அதிகமாகி விடும் என்பதாலும் அம்மா கட்சி என்பதால் போலீசிடம் சொல்லி என்னையும் போட்டுத் தள்ள சொன்னால் என்ன செய்வது என்ற அச்சத்தாலும் இங்கே எழுதி விட்டேன் !
ஃபேக் ஐடி பினாமிகளின் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
Allakai kizhavi mainthan thaana. Athoda pathiva elaam padipathae kidayaathu.
ReplyDeleteயோவ்! அடக்கி வாசி! இங்கே அம்மா ஆட்சி!
ReplyDeleteஎங்க அம்மா சொன்ன தகர டப்பா உண்டியல் குலுக்கி உங்களுக்கு இவ்வளவோ திமரா?
வாய்யா பினாமி, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். நாங்க மக்களிடம் நேர்மையா உண்டியல் குலுக்கி கட்சி நடத்தறோம். உங்க அம்மா மாதிரி ஊழல் செஞ்சு ஜெயிலுக்கு போன ஆளுங்க இல்லை. இந்த கமெண்ட் எழுத, அம்மாவுக்கு ஜால்ரா அடிக்க கூலி வாங்கற பொழைப்பு நடத்தற கேவலமான ஆளுங்கதான நீங்க. நீ நிறுத்து
DeleteI Welcome this status and your comment comrade !
ReplyDeleteஅந்தாளு ஜெயலலிதாவோட ஒன்னாம் நம்பர் ஜால்ரா. ஆனா நடுநிலை நக்கி மாதிரி சீன் போடுவாரு. விமர்சனம்னு பேரு வச்சுக்கிட்டு விமர்சனத்தை தாங்க மாட்டாரு.
ReplyDeleteமனிதர்களை ஒரு புழுவாக நடத்தும் போலீஸை கொண்ட நாட்டில்,போட்டுத் தள்ள சொல்லி போலீஸூக்கு ஆலோசனை கொடுக்கிறாராம் ஜெயலலிதாவின் காவிரிமைந்தன்.
ReplyDeleteஅவசியமான கண்டன பதிவு.
இந்த ஆளு மு க வை பத்தி எழுதணும்னா மனுசன் பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவார் முக காலையில் நிறையா ஒண்ணுக்கு போனார் அப்புறம் கைலி உடுத்தினார் அப்புறம் தும்மினார் ஊழல் செய்தார் என்று. ஆத்தா செய்யாத ஊழலா ( ஆத்தா இரண்டுதடவை கலி திண்றுவிட்டு வந்துள்ளார் ) அதை பத்தி மூச்சு விடமாட்டார். அதை விமர்சித்து கமெண்டு இட்டால் உடனே அழித்துவிடுவார் இந்த நடுநிலை வா (வியா)தி. அடுத்து 56 இஞ்சுக்கு ஜால்றாவேற தாங்கமுடியலைடா சாமி !!!
ReplyDeleteயூனியனில் இருந்தால் நீயெல்லாம் பெரிய ஆளா? காவிரிமைந்தன் அவர்களின் அனுபவத்திற்கும் அறிவுக்கும் முன்னால் நீயெல்லாம் ஒரு கொசு. அடிச்சா தாங்க மாட்டே, இதையே அவர் பக்கத்தில் வந்து எழுது. அத்தனை பேரும் உன்னை பிரித்து மேய்ச்சுடுவாங்க
ReplyDeleteஇவர் ஒரு டுபாக்கூர் மைந்தன்! சும்மா சாதி பாசத்திலே எழுதற வெட்டி ஆள்! அதிமுகவிற்கும் இவருக்கும் ஒரு சம்பந்தம் இல்லை! ஆனா! மேல் மட்டத்தில் ஆள் தெரிஞ்சா மாதிரி பீலா விடும் டுபாக்கூர் மைந்தன்
Delete//என்னுடைய வயது அளவிற்கு அனுபவம் உள்ள அந்த பெரிய மனிதருக்கு தெரியாமல் போனது// - நானே ஒப்புக் கொண்டுள்ள விஷயம்தானே இது அனானி. ஆனால் அந்த அறிவும் அனுபவமும் இப்படி மோசமாக பயன்படுகிறதே. நான் வேண்டுமானால் கொசுவாக இருக்கலாம். ஆனால் உங்கள் தலையும் அடிமைக் கூட்டமும் கொசு வியாதியைப் பரப்புவது போல மோசமான கருத்துக்களை பரப்புகிறதே! என் கருத்தை அங்கே ஏன் பதிவு செய்யவில்லை என்பதை நானும் விளக்கியுள்ளேன். விமர்சனம் செய்யும் பின்னூட்டங்களை நீக்கி விடுவார் என்ற யதார்த்தத்தை வேறு சில நண்பர்களும் இங்கே பதிவு செய்துள்ளனர். இவ்வளவு பேசுகிற நீயே அனானியாகத்தான் வீரம் காட்டுகிறாய். நான் மீண்டும் சொல்கிறேன்.நான் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன். கட்சியின் நிலைப்பாட்டில்தான் என் பதிவுகள் இருக்கும். அவரையும் அது போல அறிவிக்கச் சொல்லுங்கள். இந்த நடுநிலை நாடகத்தை போடுவதால்தான் அவர் விமர்சனங்களை சந்திக்கிறார். அவ்வளவுதான்
Deleteமிக அவலமான ஆள். நூல்களின் ஆதிக்கம் வேண்டும் என்று எதை வேண்டுமானாலும் எழுதுவார். இங்கு நடக்கும் அவல ஆட்சியின் வேதனை அவரை தீண்டினால் தான் உண்மையை உணர்வார். அனுபவமும் அறிவும் உள்ள ஆளாக தெரியவில்லை. எழுதுவதெல்லாம் ஜால்ரா அதற்கு துதி பாட நூல் கூட்டம். அங்கு எழுதினால் தான் அடுத்த நொடியில் காணமல் போகிறதே. விமர்சனகளை தாங்க இயலாதவர். இவர் எழுதும் அவலங்களை மற்றவர் ஏற்க வேண்டுமாம்.
ReplyDelete