Monday, June 13, 2016

ஒற்றை வரியில் விஷம் - தின மலர்





காவி வெறி பிடித்த தின மலர் நாளிதழை வாங்குவதோ படிப்பதோ எப்போதும் கிடையாது.  சர்வீஸிற்கு கொடுத்த இரு சக்கர வாகனம் என்ன ஆனது என்று பார்க்க மெகானிக்கை பார்க்கப் போனால் அவர் இல்லை. அவர் வரும் வரையில் பெஞ்சில் இருந்த பேப்பரை புரட்டலாம் என்று கையிலெடுத்தால் அது தின மலர். காஷ்மீர் முதல்வரின் படம் முதல் பக்கத்திலேயே இருந்தது.

ஏதோ ஒரு கோயில் விழாவில் அவர் கலந்து கொண்டார் என்று காலையில் ஹிந்து நாளிதழிலும் படித்திருந்தாலும் அதை இவர்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்று பார்த்தால் அதிலே வழக்கம் போல தினமலரின் விஷமும் விஷமும் தெரிந்தது.

காஷ்மீரின் அடையாளம் பண்டிட்களாம்.

எது காஷ்மீரின் அடையாளம்?

காஷ்மீர் என்று சொன்னால் உங்களுக்கு நினைவுக்கு என்ன வரும்?

தீவிரவாதம், பிரிவினை முழக்கம், ராணுவ அராஜகம், சிறப்புப் பிரிவான 370 ஐ நீக்கத் துடிக்கும் சங் பரிவார சதி போன்ற சமீபத்திய நிகழ்வுகளை விட்டு விடுங்கள். அது மனிதர்களால், ஆளும் வர்க்கத்தால், இந்திய, பாகிஸ்தான் அரசியல்வாதிகளால், அங்கே நிலம் வாங்கத் துடிக்கும் இந்திய முதலாளிகளால் உருவாக்கப்பட்டது.  

வெள்ளை பனி பொழியும் இமயம், பார்க்க, பார்க்க திகட்டாத இயற்கையின் எழில் கொஞ்சும் காட்சிகள், படகு வீடுகள் நிரம்பி இருக்கும் தால் ஏரி என்று இயற்கை அழகே காஷ்மீரின் அடையாளம். 

சரி மக்கள்தான் காஷ்மீரின் அடையாளம் என்று எடுத்துக் கொண்டாலும்
காஷ்மீரின் அடையாளம் பண்டிட்டுக்களா? சிறுபான்மையாக இருக்கிற  ஒரு பிரிவு எப்படி காஷ்மீரின் அடையாளமாக இருக்க முடியும்? பண்டிட் என்பவர்கள் காஷ்மீரில் உள்ள ஹிந்துக்களில் ஒரு சிறிய பிரிவான மேட்டுக்குடி மக்கள் அவ்வளவுதான். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மொத்த மக்கட்தொகை, 2011 சென்ஸஸ் படி ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம். அதிலே இஸ்லாமியர்கள் 68.31 %, இந்துக்கள் 28.44 %.  இதிலே பண்டிட்டுகளின் எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. 

ஜம்மு காஷ்மீர் மக்கட்தொகையில் வெறும் 1.12 % மட்டுமே இருக்கிற ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களை அம்மாநிலத்தின் அடையாளம் என்று சொல்வது மிகப் பெரிய அயோக்கியத்தனம். உண்மையை திரிக்கிற கேவலமான விஷயம். இஸ்லாமியர்களின் இருப்பை மறைக்க முயலும் கேடு கெட்ட உத்தி. 

ஒற்றை வரியில் விஷத்தை தூவும் இழி செயலை தினமலரால் மட்டுமே செய்ய முடியும். அதற்காகத்தான்  காவிக்கும்பல் தின மலருக்கு போஷாக்கு கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறது. 

 

 

7 comments:

  1. இவிங்க எப்பவுமே அப்பட்டிதான் ... http://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
  2. நேற்றைய The Hindu நாளிதழில் Kashmir not complete without Pandits: Mehbooba என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், தீவிரவாத அச்சுறுத்தலால் காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்டுகள் மீண்டும் அவர்களின் இருப்பிடத்திற்கு திரும்ப வேண்டும் என்பது சரியானதுதான். அதை உத்தரவாதம் செய்ய வேண்டிய, நம்பிக்கை அளிக்க வேண்டிய கடமையும் முதல்வருக்கு இருக்கிறது. பண்டிட்கள்தான் காஷ்மீரின் அடையாளம் என்று திரிக்கிற விஷமம்தான் கண்டனத்துக்குரியது

      Delete
    2. பண்டிட்டுகள் தாக்கப்பட்டால்இந்தியர்கள் தாக்கப்ட்டார்கள் என்று அரசு சொல்லும்;அதே சமயம் தமிழ்நாட்டில் மீனவர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் தமிழக மீனவர்கள்---இந்தியர்கள் அல்ல!

      பண்டிட்டுகளுக்கு ஆதரவா இந்திய ராணுவம்! தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு புண்ணாக்கும் இல்லை.

      Delete
    3. //தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு புண்ணாக்கும் இல்லை.//
      இந்த ஜாதியை விட்டுவிட்டு... காஷ்மீரில் காலம் காலமாக வாழ்ந்த மக்களின் ஒரு புகுதியினர் தாக்கபட்டு வெளியேற்றபட்டதையும்,வேற்றுநாட்டு கடல் எல்லைக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் தாக்கபட்டதையும் ஒப்பிடுவது சரியானதல்ல.

      Delete
    4. வேற்று நாட்டு எல்லைக்கு போனால் சுட்டு கொல்லாமா? என்னங்க நீங்க இப்படி! அப்ப இந்திய எல்லைக்கு வந்த ஒரு இலங்கையரை கூட இது வரை என் சுடவில்லை!

      நான் சொல்வது...பண்டாரங்கள் செத்தால் இந்துக்கள்..
      தமிழன் செத்தால் இந்து மீனவர் என்று சொல்லேன்..அதான் இங்கே கேள்வி/

      மேலும்...காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமல்ல...நாம் அங்கு அநியாயம் செய்கிறோம்!

      Delete
    5. நம்பள்கி,
      //வேற்று நாட்டு எல்லைக்கு போனால் சுட்டு கொல்லாமா?//
      ஒரு போதும் சுட்டு கொல்ல முடியாது.நீங்க அம்மாவின் காவிரிமைந்தன் போலீசு குற்றவாளியை அடிச்சே கொல்லலாம் என்று ஆசீர்வாதம் தந்த மாதிரி என்று நினைத்து விட்டீர்களாக்கும்! நான் சொல்ல வந்தது ஒரு பகுதியில் வாழும் மக்கள் தாக்கபட்டு வெளியேற்றபடுவதை, ஒரு பகுதி மீனவர்கள் வேற்று நாட்டு எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் போது தாக்கபடுவதோடு ஒப்பிடுவதையே.
      சர்வதேச செய்திகள் தெரிவிப்பது இலங்கை கடற்பரப்பில் அந்துமீறி நுழைந்து மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து காவலில் வைத்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்று எழுதி வேண்டி கேட்டுள்ளார்.
      சுட்டு கொல்லுவது என்பதெல்லாம் தமிழர்களின் ரத்தத்தை சூடாக்கி அரசியல் செய்யும் ஒரு propaganda வாகவே தெரிகிறது.
      கடலில் எல்லையை தாண்டுவதை எச்சரிக்கும் கருவி மேலைநாடுகளில் தாராளமாகவே உண்டு. ஆனா தமிழக தூத்துக்குடி சேர்ந்தவரே இந்த கருவியை கண்டுபிடித்த பின்பும், அதை தமிழக அரசு தமிழ மீனவருக்கு இலவசமாக வழங்கவில்லை!அதை விட வியப்பு தமிழக மீனவர்களும் தங்களுக்கு அது வேண்டும் என்று கேட்கவே இல்லை!
      http://www.dinamalar.com/news_detail.asp?id=1131873

      Delete