போட்டோ பிரியர்களுக்காகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள க்ளிக் ஆர்ட்
மியூசியம் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.
வி.ஜி.பி தங்கக் கடற்கரை வளாகத்தில் உள்ள ஸ்னோ கிங்டம் வளாகத்தின் மாடியில்
உள்ளது இந்த மியூசியம்.
பல ஓவியங்கள் இங்கே சுவரில் தீட்டப்பட்டுள்ளன. எந்த இடத்தில் நீங்கள் காலை
வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி புகைப்படம் எடுத்தால் முப்பரிமாணக் காட்சியில் தத்ரூபமான காட்சி
கிடைக்கிறது. படைப்பாளியின் கற்பனைத் திறனுக்கு இந்த மியூசியம் ஒரு
எடுத்துக்காட்டு.
உதாரணமாக நான் பெஞ்சில் அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை சொல்லலாம்.
பெஞ்ச் எல்லாம் தனியாக கிடையாது. சுவரில் வரையப் பட்ட ஓவியம்தான். ஆனால் நிஜமாகவே
அங்கே பெஞ்ச் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கிறது.
அது போலத்தான் படிக்கட்டுக்களும் சுவரோவியம்தான்.
இங்கேதான் நானும் ஒரு ஆஸ்கார் விருதை பெற்றுக் கொள்கிறேன்.
புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்காக மட்டுமே மக்கள் இங்கே வருகிறார்கள்,
நூற்றி ஐம்பது ரூபாய் நுழைவுக் கட்டணம் என்பது கொஞ்சம் அதிகம் என்றாலும் கூட.
படங்கள் அருமை ... http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteஉண்மை மாதிரியே இருக்கிறது! நூற்றம்பது ரூபாய் கொடுக்கலாம்.
ReplyDeleteஓவியங்கள் அருமை
ReplyDeleteவாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவசியம் பார்ப்பேன் நண்பரே
நன்றி