Sunday, June 5, 2016

புறப்பட்டு விட்டேன்

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவிற்கு புறப்பட்டு விட்டேன். கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை, அதற்கு முன்பும் பின்பும் வாங்கியவை  என்று படிக்க வேண்டிய நூல்களின் எண்ணிக்கை ஒன்பது   மாதங்களுக்கு முன்பு மிரட்டியது 

தீவிர வாசிப்பின் விளைவாக படித்து முடிக்க வேண்டிய நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்ட தைரியத்தால்தான்  இந்த ஆண்டு சென்னை புத்தகத்திருவிழா செல்கிறேன்.

என்னென்ன நூல்கள் வாங்கலாம்  என்று மனதில் ஏற்கனவே ஒரு பட்டியல் இருக்கிறது. அதைத்தாண்டியும்  கையில் சுமக்கும் தெம்பும் பாக்கெட்டில் கொண்டு செல்லும் பணமும் இருக்கிறவரை வாங்க உத்தேசம்.

இடப் பிரச்சினைதான் வரும். 

எத்தனை பிரச்சினைகளையோ சமாளித்தாகி விட்டது. இதை சமாளிக்க முடியாதா என்ன?

வாங்கிய புத்தகங்களின் பட்டியலோடு நாளை சந்திக்கிறேன். 

கீழே உள்ள படம் சென்ற ஆண்டு வாங்கியது. 

 

2 comments:

  1. உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் இது. அருமையானது, நல்லா என்ஜாய்பண்ணுங்க.

    ReplyDelete