Saturday, June 11, 2016

கொஞ்சம் ஓவராதான் போயிடுச்சு







கடந்த ஞாயிறு சென்னைக்கு புத்தகத் திருவிழாவிற்கென்றே பிரத்யேகமான பயணம். இடையில் போட்டோ பிரியர்களுக்கெனவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள க்ளிக் ஆர்ட் மியூசியத்தில் சின்ன இடைவேளை. அது பற்றி பிறகு எழுதுகிறேன்.

புத்தகத் திருவிழாவின் இடம் மாறியுள்ளது, ஒரு விதத்தில் எனக்கு வசதியாக இருந்தது. நுழைவாயிலில் இருந்து கண்காட்சி அரங்கிற்கு உடனே செல்ல முடிந்தது. நீண்ட தூரம் நடக்கும் சிரமம் இல்லாமல் இருந்தது என்னைப் போல காலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு வரமே.

வழக்கம் போலவே சில அரங்குகள் பரபரப்பாகவும் பல அரங்குகள் மந்தமாகவும் இருந்தது. இந்த முறை அவசியம் வாங்க வேண்டிய நூல்கள் என மனதில் ஒரு பட்டியல் இருந்ததால் பெரும்பாலானவற்றை சரியாக வாங்க முடிந்தது. அப்படியும் நான்கு நூல்கள் தவறி விட்டது.

ஏற்கனவே முடிவு செய்த நூல்கள், நன்றாக இருக்கும் என்று நம்பி வாங்கிய நூல்கள் என்று இந்த முறை வாங்கியது கொஞ்சம் அதிகம்தான். பட்ஜெட்டை விட அதிகமாகவே போய் விட்டது. வாங்கிய மூன்று நூல்களின் ஆசிரியர்கள், தோழர் ச.சுப்பாராவ், தோழர் செ.சண்முகசுந்தரம், தோழர் காஸ்யபன் ஆகியோர் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள் என்பது ஒரு தனிப்பெருமை. இதிலே தோழர் காஸ்யபன் மட்டும் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

எனக்கு கால்வலியும் என்னோடு இந்த வருடம் உடன் வந்து வாங்கிய நூல்களை சுமந்து கொண்டிருந்த மகனுக்கு கைவலியும் ஒரே நேரத்தில் வர, முடித்துக் கொள்வோம் என முடிவெடுத்து வெளியே வந்தோம். “காலச்சுவடு” அரங்கம் அப்போதுதான் கண்ணில் பட்டது. போய்த்தான் பார்ப்போமே என்று ஒரு சபலம் வந்தாலும் எடுத்த முடிவில் உறுதியாக வெளியே வந்து விட்டேன்.

புத்தகங்களை வாங்கும் போது ஏற்படாத மலைப்பு, என்னென்ன நூல்கள் வாங்கினோம் என்பதை பதிவு செய்த போதுதான் வந்தது. கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டோம் போல என்று தோன்றியது. கடந்தாண்டு முழுதும் படித்த நூல்களின் எண்ணிக்கையும் ஞாயிறு ஒரு நாள் அன்று வாங்கிய நூல்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாக உள்ளது.

அத்தனையையும் எப்போது படித்து முடிப்பது என்ற கேள்வி வந்தாலும் முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கடந்த புதன் அன்று மேற்கொண்ட நீண்ட பயணத்தில் ஒரு பெரிய நாவலையும் இன்னும் இரண்டு நூல்களையும் படித்து முடித்தேன். இன்று எதிர்பாராமல் வாணியம்பாடி செல்ல நேரிட்டது. இந்தப் பயணத்திலும் இரு சிறு நூல்களை படிக்க முடிந்தது. இன்று காலையிலிருந்து மின்சாரம் கிடையாது. இன்வெர்ட்டர் பேட்டரியும் தீர்ந்து போய் விட்டதால் ஆறு மணி வரை படிப்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இந்த மாதத்தில் இதுவரை மூன்று பயணங்கள் திட்டமிடப்பட்டது. இன்னும் ஏராளமான பயணங்கள் காத்திருக்கிறது. ஆகவே அனைத்தையும் படித்து முடித்திட முடியும் என்ற நம்பிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது.

புத்தகப் பட்டியல் கீழே இருக்கிறது. மற்ற நூல்கள் படிப்பதற்கென்றால் கடைசி நான்கு நூல்கள், படித்து முயற்சிப்பதற்கு. படித்தவற்றுள் சிறப்பாக உள்ளவை பற்றியும் நிச்சயமாக பகிர்ந்து கொள்வேன். அனேகமாக நாளையே தொடங்கும்.

எண்
பெயர்
ஆசிரியர்
பக்கம்
விலை
1
லைபாக்லை ஆண்ட்டி
ச.சுப்பாராவ்
128
90
2
சிறையில் ஒரு குடும்பம்
ஐ.மாயாண்டி பாரதி
16
10
3

தொழிற்சங்கம் பற்றி
அம்பேத்கர்

வெ.கோவிந்தசாமி


46
30
4
அரசியல் பழகு
சமஸ்
48
20
5

ஒரு சாப்பாட்டு ராமனின்
நினைவலைகள்

ச.தமிழ்ச்செல்வன்


112
80
6

கோவை கலவரத்தில்
எனது சாட்சியம்

ஏ.வி.அப்துல் நாசர்


128
100
7
செய்தியின் அரசியல்
ஆர்.விஜயசங்கர்
16
10
8
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன்
144
100
9
பாரதி நினைவுகள்
யதுகிரி அம்மாள்
112
70
10

எழுத்துக்களை எரித்தல்
கருத்துக்களை ஒடுக்குதல்

எஸ்.வி.ராஜதுரை


394
300
11
மஞ்சள் பூ மர்மம்
 காமிக்ஸ்
130
50
12
தமிழ் ஒளி
செ.து.சஞ்சீவி
128
50
13

வெள்ளாடுகளும் சில
கொடியாடுகளும்

சோலை சுந்தரப் பெருமாள்


128
70
14
நலம், நலமறிய ஆவல்
எஸ்.வி.வேணுகோபால்
32
20
15
மாநிற பட்டாம்பூச்சிகள்
கார்த்திகை பாண்டியன்
144
140
16
செகாவ் வாழ்கிறார்
எஸ்.ராமகிருஷ்ணன்
164
150
17

கூண்டுப் பறவையின்
தனித்த பாடல்

கவிதா முரளிதரன்


104
80
18

ஒற்றை வைக்கோல்
புரட்சி

மசானபு ஃபுகோகா


158
130
19
பாம்புத் தீவு
 காமிக்ஸ்
130
50
20

அயோக்கியர்களும்
முட்டாள்களும்

ஞானி


96
70
21
போராட்டமே வாழ்க்கை
மயிலம்மா
92
80
22
மூன்றாம் பிறை
மம்முட்டி
128
80
23

நட்சத்திரங்கள் ஒளிந்து
கொள்ளும் கருவறை

பவா. செல்லதுரை


112
100
24
போயிட்டு வாங்க சார்
ச.மாடசாமி
63
40
25
ஆரியக் கூத்து
அ.மார்க்ஸ்
115
70
26
அவனது நினைவுகள்
தகழி சிவசங்க்ரப்பிள்ளை
125
100
27
முருகன் விநாயகன்
கௌதம சித்தார்த்தன்
44
40
28
வலம்
விநாயக முருகன்
335
310
29
ஒரு மனிதன், ஒரு உலகம்
ஜெயகாந்தன்
256
170
30
மதினிமார்கள் கதை
கோணங்கி
128
80
31
காலவேக மதயானை
குட்டி ரேவதி
126
100
32
ஊமையன் கோட்டை
கண்ணதாசன்
168
80
33
கடைசிப் பக்கம்
கண்ணதாசன்
124
70
34
சிவகெங்கைச் சீமை
கண்ணதாசன்
152
80
35
ஞாபகம் வருதே
சித்ராலயா கோபு
192
150
36
கந்தர்வன் கவிதைகள்
கந்தர்வன்
232
130
37
நிறங்களின் நிஜம்
செ.சண்முகசுந்தரம்
232
210
38
சிறைப்பட்ட கற்பனை
வரவர ராவ்
192
150
39
உறுபசி
எஸ்.ராமகிருஷ்ணன்
135
115
40
ஊழியின் தினங்கள்
மனுஷ்ய புத்திரன்
104
90
41

இந்தியா ஒரு வல்லரசு
ஒரு வேடிக்கையான கனவு

அருந்த்தி ராய்


64
50
42
வீழ்ச்சி
சுகுமாரன்
288
210
43
நீலக்குறிப்பேடு
இ.கலாகேவிச்
144
90
44
காப்கா எழுதாத கடிதம்
எஸ்.ராமகிருஷ்ணன்
208
200
45

டல்ஹௌசியின்
ஆரஞ்சு இரவு

சம்யுக்தா மாயா

78

75
46
சீமானின் திருமணம்
ஜவான் துர்கதேவ்
95
45
47

களப்பிரர் ஆட்சியில்
தமிழ்கம்

மயிலை சீனி வெங்கடசாமி

162

100
48

முதலாளியம்
ஒரு பேய்க் கதை
அருந்த்தி ராய்

52

30

49
நாமசூத்திர்ர்கள் இயக்கம்
சேகர் பந்தோபத்யாயா
64
50
50
"இந்து" தேசியம்
தொ.பரமசிவன்
144
130
51

கிருஷ்ணா
நதிக்கரையிலிருந்து

காஸ்யபன்

98

45
52
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்
கவின் மலர்
167
150
53
சூரியனுக்கு அருகில் ஒரு வீடு
மனுஷ்ய புத்திரன்
128
100
54
பேசாத பேச்செல்லாம்
ப்ரியா தம்பி
304
175
55
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
பாரதி மணி
560
550
56
கார வகைகள்
ரேவதி சண்முகம்
78
60
57
மாவட்டச் சமையல்
ரேவதி சண்முகம்
88
60
58
டிபன் வகைகள்
ரேவதி சண்முகம்
80
60
59
சைவ சமையல்
ரேவதி சண்முகம்
152
140

12 comments:

  1. அம்மாடியோவ்... அருமை http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  2. ஆகா
    படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா

    ReplyDelete
  3. Great..books shapes you more

    ReplyDelete
  4. தங்களின் இப்பதிவைப் பார்த்ததும் நூற்கண்காட்சிக்குச் செல்லும் ஆசையும், நூல்களை வாங்கிப் படிக்கும் ஆசையும் கண்டிப்பாக வந்துவிடும் போலுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உடனே செல்லுங்கள். நாளையே இப்படம் கடைசி

      Delete
  5. அட! இவ்வளவு வாங்கி குவித்து விட்டீர்களா? பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. :) உங்கபாடு ஒரே கொண்டாட்டம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நிஜமாகவே நண்பரே. கம்ப்யூட்டர் முன் அமரும் நேரமும் கூட குறைந்துள்ளது

      Delete