Wednesday, June 1, 2016

தமிழ்லயாவது சொல்லித் தொலையுங்களேன்




பொதுவாக  தொலைக்காட்சி பார்ப்பது குறைவு. அதிலும் சீரியல்கள் பார்ப்பதென்பது அரிது.

என் போதாத நேரம் இன்று அலுவலகத்திலிருந்து வந்தவுடன் காபி குடிக்கும் நேரத்தில் ஹாலில் அமர்ந்திருந்தேன். சன்  தொலைக்காட்சியில் ஒரு  தொடர் ஓடிக் கொண்டிருந்தது. அது ஒன்றும் பிரச்சினையில்லை. 

அதன் இரண்டு இடைவேளைகளில் இடைவேளைக்கு இரண்டு என நான்கு  விளம்பரங்கள் ஒளிபரப்பானது. எல்லாம் அண்ணன் மோடி புகழ் பாடும் அரசின் தண்டச் செலவு விளம்பரங்கள். இரண்டு வருடத்தில் ஒரு ஆணி கூட பிடுங்காவிட்டாலும் அந்த அலட்டலுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது.

அந்த வரி, இந்த வரி, சேவை வரி, அதற்கு சர்சார்ஜ் என்று நம்மிடமிருந்து பிடுங்கிற பணத்தைக் கொண்டுதான் இப்படி ஊதாரித்தனமாக விளம்பரம் கொடுக்கிறார் விளம்பர போதையில் மதி மயங்கிப் போன மோடி. 

சரி கொடுப்பதுதான் கொடுக்கிறாரே, அதை அந்தந்த மொழிகளிலாவது கொடுக்கலாமே! இவர்கள் ஹிந்தியில் முழங்குவது யாருக்கு புரியப் போகிறது? 

செய்யும் செலவு தண்டமாகப் போனாலும் அது ஹிந்தியில்தான் இருக்க வேண்டும் என்ற பாஜகவின் மொழி வெறி தவிர வேறெதுவும் இல்லை. இதுவும் ஒரு வகையிலான ஹிந்தித் திணிப்பே. 

2 comments:

  1. /// சன் தொலைக்காட்சியில்.... அண்ணன் மோடி புகழ் பாடும் அரசின் தண்டச் செலவு விளம்பரங்கள். இரண்டு வருடத்தில் ஒரு ஆணி கூட பிடுங்காவிட்டாலும் அந்த அலட்டலுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது.....செய்யும் செலவு தண்டமாகப் போனாலும் அது ஹிந்தியில்தான் இருக்க வேண்டும் என்ற பாஜகவின் மொழி வெறி தவிர வேறெதுவும் இல்லை. இதுவும் ஒரு வகையிலான ஹிந்தித் திணிப்பே.////

    ஹிந்தியை எதிர்பதர்க்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன் என்று பெருமைப்படும் அய்யா கருணாநிதியின் குடும்ப டிவியில் என்னகொடுமை எது சரவணா ???

    M. செய்யது
    துபாய்

    ReplyDelete
  2. நாடோடிகள் படத்துல ப்ளெக்ஸ் போர்டு வெறியன்
    ஒருத்தன் வருவான் பாருங்க,அதுதான் மோடி.
    முஷ்டியை மடக்கி,நரம்புகள் தெறிக்க பேசி
    ஏமாற்ற தெரிந்தால் நாளை அந்த ப்ளெக்ஸ் வெறியனும்
    பிரதமராகலாம்.

    ReplyDelete