Thursday, June 30, 2016

அமெரிக்க இந்துக்கள் மட்டும் அவமானப்படுத்தலாமா?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக அமெரிக்கவாழ் இந்துக்கள் என்ற குழு வெளியிட்டுள்ள விளம்பரம் கீழே உள்ளது.

டொனால்ட் ட்ரம்பை தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள மகா விஷ்ணுவாக  சித்தரித்துள்ளார்கள் அவர்கள். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுநாள் வரை இல்லாத அளவிற்கு மத வெறியை கிளப்பி விட்டுள்ள மனிதன் இந்த ட்ரம்ப். அதிலும் அவர் விஷம் கக்குவது இஸ்லாமியர்களுக்கு எதிராகவே.

அந்த ஒரே காரணத்திற்காகவே இந்த குழு டொனால்ட் ட்ரம்பை உயர்த்திப் பிடிக்கிறது. இன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களை பரப்புகிற மனிதனின் கவனம் நாளை அமெரிக்க வாழ் இந்துக்களுக்கும் எதிராக திரும்பாதா என்ன?

மத வெறியையும் ஜாதி வெறியையும் கையிலெடுத்து ஆதாயம் கண்டவர்கள் கடைசி வரை அதையே தனது ஆயுதமாக பயன்படுத்துவதை இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சியையும் தமிழக அளவில் பாட்டாளி மக்கள் கட்சியையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் விதைத்த நஞ்சு அமெரிக்கா வரை புரையோடிப் போயிருக்கிறது என்பதைத்தான் இந்த “டொனால்ட் ட்ரம்பிற்கான இந்துக்கள் குழு” நிரூபிக்கிறது.

சே, சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை விட்டு எங்கோ போய் விட்டேன் (மேலே சொல்லியிருப்பதும் முக்கியம்தான் என்றாலும்)

இந்துக் கடவுள்கள் படத்தின் தலையில் தங்களுக்கு வேண்டிய அரசியல் தலைவரை பொறுத்திக் கொண்டால் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் அணிகள் கூச்சல் போடுமே, இப்போது மகாவிஷ்ணு போல டொனால்ட் ட்ர்ம்பை சித்தரித்துள்ளார்களே, அது பற்றி ஏன் இவர்கள் வாய் திறக்கவில்லை. இதிலே டொனால்ட் ட்ரம்ப் மாட்டு மாமிசம் சாப்பிடுபவர் வேறு. சரி மற்றவர்கள் எதுவும் பேசாவிட்டாலும் பரவாயில்லை, எதற்கெடுத்தாலும் துள்ளிக் குதித்து வரும் ஹெச்.ராஜா, வீரத்துறவியார் இருவரும் என்ன செய்கிறார்கள்?

அமெரிக்க வாழ் இந்துக்கள் எது செய்தாலும் பரவாயில்லையா? இல்லை முஸ்லீம்களுக்கு எதிராக பேசுவதால் டொனால்ட் ட்ரம்ப் இவர்களுக்கும் கடவுளாக மாறி விட்டாரா?

இன்னொரு முறை தமிழ்நாட்டில் இது போல ஏதாவது பிரச்சினை வந்து அப்போது ஏதாவது பேசினால் அப்போது வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை. 


4 comments:

 1. இந்து மதத்தை வைத்து வயிறு வளர்க்க நினைக்கும் உண்ட கட்டி கோஷ்டி!
  என் குழந்தைகளுக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது!
  என் குழந்தைகளின் நண்பர்/நண்பிகளுக்கு அவர்கள் என்ன மதம் என்றே தெரியாது!

  இந்த பஜனை கோஷ்டி---இப்ப நேராக வேலைக்கு இந்தியாவில் இருந்து வந்தவர்களின் மனைவிமார்கள்---ஆரம்பித்த வேலை---பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் --இதில் பணம் கட்டி தண்டம் அழுபவர்கள்---சூத்திரக் குழந்தைகள்...

  அவாள் பிசினஸ்சுக்கு - இவா மாட்டிண்டுட்டா!

  ReplyDelete
  Replies
  1. என் குழந்தைகளுக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது!
   அருமை நம்பள்கி. மக்களிடம் ஏற்றதாழ்வை உருவாக்குவதற்க உருவாக்கபட்ட இந்திய மக்களின் ஜாதி முறை ஒரு விஷம். குழந்தைகளுக்கு ஒரு போதும் செல்ல கூடாது.
   இந்தியாவில் இருந்து வந்த இந்தியர்கள் வெளிநாடுகளின் அரசு தரும் இலவச கல்வியில் தங்கள் குழந்தைகளின் அத்தியாவசிய கல்வியை இலவசமாக கற்பிக்கின்றனர்.
   பின்பு எதற்காக பணத்தை கட்டுகட்டாக அள்ளி வழங்கி இந்தியாவில் இருந்து வந்தவர்களிடம் எங்கள் குழந்தைகளுக்கு பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் சொல்லி கொடுங்கோ என்று அனுப்புகிறார்கள்?
   எந்த வெளிநாட்டு அரசுமே இந்தியர்கள் இந்தியர்களின் குழந்தைகைளை இந்திய பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்வுக்கு பணம் அள்ளி கொடுத்து அவசியம் அனுப்ப வேண்டும் என்று சொல்லவேயில்லையே!

   Delete
 2. இஸ்லாமியர்களை டிரம்ப் எதிர்க்கின்றார் என்பதட்காக இந்துக்கள் அவரை எதிர்க்க வேண்டிய அவசியம் .. முடிந்தவரை அவரை தங்கள் பக்கம் இழூக்க வேண்டியது இந்துக்களின் முக்கிய வேலையாக இருக்க வேண்டும்
  .
  இஸ்லாமியர் என்றும் தங்கள் நலனை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டவர் . அதட்காக எந்த நிலைக்கும் இறங்க தயாரானவர்கள் . ஸ்ரீலங்காவில் தமிழர்களை கொன்று குவித்த போது அங்கே இருந்த முஸ்லிம்கள் கொண்டாடினார்கள் , ராஜபக்சே க்கு ஆதரவு கொடுத்தார்கள்
  .
  ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக ஐநா தீர்மானம் கொண்டுவரப்பபடட போது அதுக்கு எதிரான நிலைப்பட்டில் இருந்தார்கள் . பிரபல இஸ்லாமிய தலைவர் பிஜே பகிரங்கமாக ஐநா தீர்மானத்தை எதிர்த்தார் , ராஜபக்சே க்கு ஆதரவு அளித்தார்

  .
  இஸ்லாமியர் அவர்கள் தரப்பு நன்மைக்காக குத்துகாரணம் கூட அடிக்கும் போது இந்துக்களும் தங்கள் நலனுக்காக செயல்படலாம்
  .
  நான் பார்ப்பானும் அல்ல ... RSS அமைப்பிலும் இல்லை

  .
  தில்லைநாதன் சித்தார்த்தன்

  ReplyDelete