வழக்கறிஞர்களை ஒழுங்கு படுத்தும்
அமைப்பான பார் கவுன்சில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி அந்த
அலுவலகத்தில் பணியாற்றும் உதவி செயலாளர் பணிக்கு கீழான ஊழியர்களோ,
துப்புறவு பணியாளர்களோ, இல்லை வேறு எந்த வேலைக்காகவோ அங்கே வரும்
சாமானியர்களோ, அங்கே உள்ள லிப்டை பயன்படுத்தக் கூடாதாம். ஊழியர்களாக
இருந்தால் ஊதிய வெட்டு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் இல்லாத வெளியாட்களாக
இருந்தால் ஐம்பது ரூபாய் அபராதம்.
போனா
போகிறது என்று ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு விதி விலக்கு தருகிறார்கள். அது கூட துப்புறவு
பணியாளர்களுக்கு கிடையாது.
இது எவ்வளவு பெரிய அராஜகம்!
இந்தியர்களுக்கும்
நாய்களுக்கும் அனுமதி கிடையாது என்று பிரிட்டிஷ் விடுதிகளில் விடுதலைக்கு
முன்னால் எழுதி வைத்திருப்பார்களாம். அது போன்றதொரு கொடுமை இது. வெட்கக் கேடான விஷயம் இது?
பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடி வரும் வழக்கறிஞர்கள், தங்களின் அமைப்பின் அநீதிக்கு எதிராக எப்போது போராடப் போகிறார்கள்?
கண்டிப்பாக போராடுவார்கள், இந்த இழிவைப் போக்குவார்கள் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment