Wednesday, June 29, 2016

பிலால் மாலிக்குகள் எச்சரிக்கை
பிலால் மாலிக் என்ற பெயருள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். 

காவிக் கூட்டம் அப்படி ஒரு பெயர் கொண்டவரை கொலைக் குற்றவாளி என தீர்மானித்து பலி கொடுக்க முடிவு செய்து விட்டது. அதனால்தான் கொலை செய்தது யார் என்ற அனுமானத்துக்கு காவல்துறை வரும் முன்னரே கொலையாளியின் பெயர் பிலால் மாலிக் என்று வொய்.ஜி.மகேந்திரனும் எஸ்.வி.சேகரும் அறிவிக்கிறார்கள்.

தங்களின் கற்பனையை உண்மையாக்க நிச்சயம் அம்மாவின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அதான் டீல் எல்லாம் முடிஞ்சாச்சே. போதாக்குறைக்கு இந்த நகைச்சுவை நடிகரின் கல்வித்தாய் அம்மா வேறு தமிழக அம்மாவுக்கு நெருக்கம்.

எனவே தயவு செய்து பிலால் மாலிக் என்ற பெயருடையவர்கள் எல்லாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருங்கள். யாராவது ஒரு பிலால் மாலிக்கை போலி எண்கவுண்டரில் போட்டுத் தள்ளி விட்டு பைலையும் மூடி வைத்து விடுவார்கள். நாங்கள்தான் அப்போதே சொன்னோமே என்று இந்த காமெடியன்கள்  வீர வசனம் பேசுவார்கள். 

எனவே, மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன். உஷார், உஷார்

பின் குறிப்பு : மேலே உள்ள படம் நான் தயார் செய்தது அல்ல. எனக்கு வந்ததை, முக நூலில், வாட்ஸப்பில் வந்ததை ஷேர் செய்துள்ளேன். அதிலே யார் இருக்கிறார்கள், என்ன பெயர் உள்ளது என்பதையெல்லாம் கவனிக்கவில்லை. ஆனால் அதன் உட்கருத்தோடு உடன்படுவதால் ஷேர் செய்தேன். அவ்வளவுதான். (இதுதானே வொய்.ஜி.மகேந்திரனும் சொன்னது?)

10 comments:

 1. அவ்வளவுதான். (இதுதானே வொய்.ஜி.மகேந்திரனும் சொன்னது?) அப்படினா உங்களுக்கும் வொய்.ஜி.மகேந்திரனுக்கும் வித்திசாசம் இல்லை

  ReplyDelete
  Replies
  1. காமெடியன் வில்லனாக மாறியதை சொன்னால் காவிகளுக்கு கோபம்தான் வரும்

   Delete
 2. நான் கம்யூனிஸ்ட்டு அல்லாத கம்யூனிடஸ்டுகளை ஆதரிப்பவன்.... அந்த தைரியத்தில் கூறுகிறேன்...........திரு ராமன் உங்களுடன் முழுவதுமாக முரண் படுகிறேன்.. YGP மகேந்திரனோ அல்லது S V சேகர் அப்படி சொல்லவில்லை என்று கூறிவிட்டார்க்ள் . forward மட்டுமே செய்ததாக மகேந்திரன் கூறுகிறார். இந்த நாட்டில் பார்பபனர் முதல் தலித் வரை அனைவரும் சாதிப் பற்றுடன் சிலர் மதப் பற்றுடன் இருக்கிறார்கள். இதில் உன்னுடையதான் தவறு என்பது போலி முற்போக்கு என்பது என் எண்ணம். முசுலிம் என்றவுடனே உங்கள் சிபிஎம் முதல் திராவிட இயக்கங்கள் வரை அவசர அவசரமாக உடனே குலை நடங்கிப் போய் மைனாரிட்டி பயம் வந்து இதுதாண்டா போலீஸ் மாதிரி இதுதாண்டா முற்போக்கு என்று ஒரு பிராண்ட் குத்திவிடுகிறீர்கள் (நான் உங்களைச் சொல்லவில்லை உங்களைப் போன்ற இயக்கத்தைக் கூறுகிறேன்) அதில் ஏதாவது ஒரு தவறு இருக்குமோ என்கிற சுயவிமர்சனம் ஒரு மறுபரிசீலனை என்பதே கிஞ்சித்தும் கிடையாது தடாலடியாகக் கூறுகிறீர்கள். இது ஒரு மார்க்சீய வேதம் ( என்றும் மாறாததைப் போல) என்று நீங்கள் நினைக்கவில்லையா... நான் சர்வ சத்தியமாக காவி ( உங்கள் பாஷையில்) கிடையாது.. அந்த எண்ணமே எனக்குக் கிடையாது.. ஆனால் இப்படி நான் உங்களை சப்போர்ட் செய்யவில்லை என்றால் என்னையும் காவி என்கிற பட்டியில் நீங்கள் அடைக்கலாம்.. ஆனால் இப்படி கூறுவதன் மூலம் விவாதத்தை அதன் கதவுகளை இழுத்து மூடிவிடுகிறீர்கள் என்பது தெரியவில்லையா...,? ஒரு சமயம் ஒரு பேச்சு வைத்துக் கொள்வோம் பாதிக்கப்பட்டது ஒரு முசுலிம் பெண்ணாக இருந்து தவறிழைத்து ஒரு இந்து ஆண் என்றால் கிடைக்கும் ஆர்ப்பாட்டம் அப்பப்பா சொல்ல முடியாது என்பதை நீங்கள் திறந்த மனத்துடன் ஆம் அல்லது இல்லை என்று கூறுங்கள் பார்ப்போம்.... முடியுமா...? வங்கத்தில் நீங்கள் தொடர்ந்து அடி வாங்குவதும் கேரளத்தில் தடுமாறுவதும் இப்படி எந்த திறந்த மனத்துடன் விவாதாமில்லாமல் கட்டித் தட்டிப் போன கொள்கைதான் என்பது என்னைப் போன்ற நண்பர்கள் பேசிக் கொள்வோம்.. அதனால்தான் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மோடியும் ஜெ யும் வரலாறு காணாத வெற்றியை (உங்கள் வெற்றியையும் அந்த வெற்றிடத்தையும் சேர்த்து )பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.. இல்லை நீங்கள் கூறுங்கள் இந்த மக்களே மடையர்கள் என்று.. சொல்ல முடியுமா...?

  ReplyDelete
  Replies
  1. ****நான் கம்யூனிஸ்ட்டு அல்லாத கம்யூனிடஸ்டுகளை ஆதரிப்பவன்.... அந்த தைரியத்தில் கூறுகிறேன்***

   அடேங்கப்பா!!!

   ***forward மட்டுமே செய்ததாக மகேந்திரன் கூறுகிறார்**

   He should not have forwarded such a message!! He forwarded because he is an idiot! Why does not it "click" in your brain? Beats me!

   Lastly, TN is ruled by a brahmin woman. If she is not doing her job right, you are blaming Muslims and Dravidians who worship her? That's hilarious!

   What do you guys really WANT??!!

   Delete
  2. How come you guys did not find the "Muslim" behind the Sankar Raman murder?? Is that because you all know it was a plotted by a "god-fearing innocent brahmin" and so you cared less there?

   We know how bramins' brain works!!

   Delete
  3. //What do you guys really WANT??!!//

   simple.... we want justice...
   ///you are blaming Muslims and Dravidians////
   i never or try to blame anyone...it is your assumption..

   Delete
  4. You will get it as soon as they catch the "murderer".

   BTW, You have not answered my question. I REPEAT! Who plotted against Shankar Raman and got him killed? Did you get justice there? Why were you keeping your mouth zipped then? Was it plotted by a "paappaan" and so YOU CARED LESS about justice then??!!

   Delete
 3. கையில் இஸ்மாயில் என்றும் சுன்னத்து செய்தும் கோட்ஸே காந்தியை கொன்றது போல பிலால் மாலிக் என்று பொய் பெயரை கூறிக்கொண்டு காவிகள் ஏன் சகோதரி சுவாதியை கொலை செய்யதிருக்க கூடாது. இல்லையென்றால் இவர்களுக்கு எப்படி முன்கூட்டியே பெயர் தெரியும் வொய் ஜி மற்றும் எஸ் வி சேகரையும் பிடித்து முறைப்படி விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும் செய்யுமா தமிழக போலீஷ் . இதை அனைத்து மக்களும் கட்சி தலைவர்களும் அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

  தமிழன்டா

  ReplyDelete
 4. ஒரு வாரமாக தயாரித்து பரப்பப்பட்டு வந்த "பிலால் மாலிக்" வதந்திகள் திராவிட பொறுக்கிகளால் பேய் போல் உருவெடுத்து, தமிழக பிஜேபிக்கு கடுமையான நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

  தமிழகம் என்பதால்தான் இவ்வளவு கஷ்டம். வட இந்தியா என்றால் "போலியே ஜெய் ஹிந்து அல்(லது) மாரேகா" என்ற அமைப்பு ஒன்று பொறுப்பெடுத்துள்ளதாக ஈமெயில் அனுப்பிவிட்டு பிடித்து வைத்திருக்கும் ஆடுகளில் ஒன்றை பலி கொடுத்து கை கழுவியிருப்பர்.

  ReplyDelete