Sunday, March 6, 2016

அன்று பொறித்த மீன், இன்று உள்ளாடை




உள்ளாடையை சரிவர தோய்க்காமல் அருவெறுப்போடு தூக்கிப் போட்ட ஒழுங்கீனத்திற்கு விளக்கம் கேட்ட நீதிபதியின் கடிதத்தை படித்த போது இது போல முன்னரே படித்திருக்கிறோமே என்று நினைவுக்கு வந்தது. 

ஆம் சில வருடங்களுக்கு முன்பாக மீனை ஒழுங்காக பொறிக்காத குற்றத்திற்காக ஒரு நீதிபதி  தன் அலுவலக ஊழியரை இடை நீக்கம் செய்த விவகாரம் நினைவுக்கு வந்தது. நானும் அது பற்றி எழுதியதன் இணைப்பு இங்கே உள்ளது 



ஊடக வெளிச்சத்திற்கு வந்தது இந்த விவகாரங்கள். வெளியே தெரியாமல் எத்தனை கடைநிலை ஊழியர்கள் இழிவுக்குள்ளாகி புழுங்கிக் கொண்டிருக்கின்றனரோ?

இப்படிப்பட்ட நீதிமான்கள்தான் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்டுகின்றனர் என்பது பெரும் கொடுமை!

நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வீட்டில் சொந்த வேலை செய்ய அரசு ஊழியர்களை அனுப்புகின்ற முறை என்பதுதான் இது போன்ற கேவலங்களுக்குக் காரணம்.  பிரிட்டிஷ் காலத்திய அடிமை முறையின் தொடர்ச்சி இது. 

இவர்கள் வீட்டு சமையலுக்கும் எடுபிடி வேலைகளுக்கு அரசாங்கம் எதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்? இதை முதலில் அகற்ற வேண்டும். 

1 comment:

  1. இந்தியாவில் தான் இருக்கிறோமா?
    சுதந்திரம் வந்துவிட்டதா?
    எனக்கொரு ஆசை... அதிகாரம் ஒருநாள் கிடைத்தாலும் இந்த நீதித்துறையை துவைக்கவே ண்டும் முதலில்...

    ReplyDelete