Thursday, March 3, 2016

இந்தியா - உடைவதும் நீடிப்பதும்

ஃப்ரெண்ட் லைன் இதழின் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கர் எழுதிய அற்புதமான கவிதை. இதை எழுதியதனாலும் பகிர்ந்து கொள்வதனாலும் தேசத்துரோகிகள் என்று சொல்வார்கள் எனில் அது பெருமிதமே.




உடையுமென்றால்…. அது உங்களால்தான் 

கோஷங்களால் மட்டுமே உடையுமென்றால்
இந்தியா என்றோ உடைந்திருக்கும்.
கவிதைகளால் மட்டுமே கரையுமென்றால்
இந்தியா என்றோ கரைந்திருக்கும்.
பாடல்களால் மட்டுமே உருகுமென்றால்
இந்தியா என்றோ உருகியிருக்கும்.
கோஷங்களும், கவிதைகளும், பாடல்களும்
ஏமாற்றப் பட்டவர்களின் பெருமூச்சு,
ஒடுக்கப்பட்டவர்களின் கோபம்
மேலெழ முடியாதவர்களின் உள்ளத்திலிருந்து மேலெழும் தீ
விளிம்புகளிலேயெ வைக்கப்பட்டவர்களின் வேதனை
கொல்லப்பட்டவர்களின் ஆவி
தூக்கிலிடப்பட்டவர்களின் இறுதிப் புன்னகை
உழைப்பவர்களின் வியர்வைத் துளிகள்
தியாகிகளின் ரத்தம்
உடையுமென்றால் அது உங்களால்தான்
நீங்கள்தான் அயோத்தியில் உடைத்தவர்கள்
குஜராத்தில் கொன்றவர்கள்
வெண்மணியில் எரித்தவர்கள்
சடலம் செல்லும் வழியை மறித்தவர்கள்
இருக்குமென்றால் அது எங்களால்தான்.
எங்களின் கோஷங்களால்தான்
கவிதைகளால்தான்
பாடல்களால்தான்.
ஏனென்றால் நாங்கள்தான்
இதைக் கட்டியவர்கள்!


-விஜயசங்கர் ராமச்சந்திரன்

No comments:

Post a Comment