Monday, March 14, 2016

இன்னும் எத்தனை உயிர்??????





போகிற போக்கைப் பார்த்தால் ஹரியானா மாநிலத்தை விட அதிகமான ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறும் மாநிலமாக தமிழகம் மாறி விடும் போல இருக்கிறது.

தர்மபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், வரிசையில் நேற்றைய பலி உடுமலை சங்கர்.

கௌரவக் கொலைகளே தமிழகத்தில் கிடையாது என்று சட்டமன்றத்தில் கூசாமல் பதில் சொன்ன ஓ.பன்னீர் செல்வம் எங்கே? தமிழகம் ஒரு அமைதிப்பூங்கா என்று வாட்ஸப்பில் கதை அளக்கும் முதல்வர் ஜெயலலிதா எங்கே இருக்கிறார்? ஜாதியப் பிரச்சினைகள் வரும் போதெல்லாம் இருப்பது  போல இந்த பிரச்சினையிலும் தமிழகத்தின் மூத்த தலைவரான கலைஞர் கருணாநிதி மௌனமாகத்தான் இருக்கப் போகிறாரா?

பிரதானமான சாலையில் கொலையாளிகள் நிதானமாக வெட்டிக் கொன்று விட்டு தப்பித்தும் செல்ல முடிகிறது. அவர்கள் தங்கள் அடையாளத்தைக் கூட மறைத்துக் கொள்ள தயாராக இல்லை. அவ்வளவு தெனாவெட்டு வருமளவிற்குத்தான் தமிழகத்தின் காவல்துறையின் மீது மரியாதை இருக்கிறது. முடிந்தால் எங்களை கைது செய் என்று சொல்லாமல் சவால் விட்டுப் போயிருக்கிறார்கள் கொலையாளிகள்.

தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி பற்ற வைத்த தீ இன்னும் அணைய மறுக்கிறது. அணைய விடாமல் ஜாதியப் பகைமையை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். தர்மபுரியில் பாமக நிகழ்த்திய அராஜகத்தைத் தொடர்ந்து பெரிய மருத்துவர் மாவட்டம் மாவட்டமாக சென்று பல்வேறு ஜாதிக்கட்சிகளை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி கிளப்பி விட்ட நெருப்புதான் அன்று கோகுல்ராஜ் உயிரைக் குடித்தது. இன்று சங்கர் உயிரைக் குடித்துள்ளது. இப்போது கூட அது பற்றி கருத்து சொல்ல முடியாது என டாக்டர் ராமதாஸ் ஆணவமாக சென்றுள்ளார்.

வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தல் மிக முக்கியமானது.

ஜாதி, ஆதிக்க சக்திகளை வாக்குகளுக்காக தங்களின் மௌனம் மூலம் ஊக்குவிக்கும் அதிமுக, திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளையும் மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

நாற்காலிக்காக ஜாதியின் பெயரிலும் மதத்தின் பெயரிலும்  அரசியல் நடத்துகிற பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் குழி தோண்டி  புதைக்கப்பட வேண்டும்.

கொள்கை வழி அரசியலை, குறைந்தபட்ச பொதுத்திட்டத்தை முன்வைக்கிற மக்கள் நலக் கூட்டணி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தமிழக மக்கள் இதில் தவறினால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.


3 comments:

  1. இதெல்லாம் நம்மாளுங்க செய்வாங்களா?

    ReplyDelete
  2. தமிழக மக்களின் அதிகமான நேசிப்பாக ஜாதி வெறுப்பு இருப்பதினால் கலைஞரும் ஜெயலலிதாவும் அதற்கு அமைதியை தான் கடைபிடிப்பார்கள். ஜாதியப் பகையை வளர்த்தே ஆட்சியை பிடிக்கலாம் என்று ஜாதி கட்சி பாமக ஆசைபடுகிறது.

    ReplyDelete
  3. kalaignar had created so many divisions in castes....he still keeps his own caste men around him rajamanickam... shanmuganathan.... etc..dravidian regime was responsible for such sorry state of affairs...kalaignar veeramani suba vee anbalagan... had targetted only brahmins for everything... now they insist all castes to be archakas in all temples
    soon murders wioll take place inside temples.... vanniars killing dalit priests...
    nadars killing udayar priests inside temples and kongu vellar killing devendra kula priests inside the temple....

    ReplyDelete