Sunday, March 13, 2016

பாகுபலிக்கு பல்லாண்டுகளுக்கு முன்பே




இதைப்பார் என்று என் மகன்தான்  காண்பித்தான். பார்த்தேன். அசந்தேன். கமலஹாசன் தயாரித்து பாதியில் நிற்கிற மருதநாயகம் படத்தின் பாடல் காட்சி  அது. சமீபத்தில்தான் வெளியாகியுள்ளது. 

போர்க்காட்சிகளும் சரி, பேரருவியின் ஆரவாரமும் சரி, அது கிராபிக்ஸாக இருந்தாலும் கூட அபாரமான ஒன்று. அதே போல் அவை பாகுபலி திரைப்படத்தை நினைவு படுத்தவும் செய்தது. 

பாகுபலி வெளி வருவதற்கு பல்லாண்டுகள் முன்பே மருதநாயகம் தொடங்கப்பட்டது என்பதும் இன்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சி அப்போது இல்லை என்பதும் முக்கியமாக மனதில் வருகிறது. ஒரு வேளை கமலஹாசனுக்கு பணம் கிடைத்திருந்தால் ஒரு பிரம்மாண்டமான படம் முன்பே வந்திருக்கும்.

இன்னொன்றை எழுத மறந்து விட்டேனே!

ராஜாவின் இசையில் அதுவும் தாளங்கள் அற்புதம். அதை விட இன்னும் சிறப்பு பாடலின் வரிகள் " இன்னும் துரத்துது மனுவின் நீதி" . ஒருவேளை அதனால்தான் பணம் கிடைக்கவில்லையோ?

இந்த இணைப்பின் மூலம் நீங்களும்  பார்த்து ரசியுங்கள்

1 comment:

  1. உண்மைதான் நண்பரே
    பார்க்கப் பார்க்க வியப்புதான் மிஞ்சுகிறது

    ReplyDelete