அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க போப்பாண்டவர் ஒப்புதல் அளித்தார்
என்ற செய்தியை நாளிதழில் பார்த்தேன்.
தன்னலமற்ற சேவையால் அவர் வாழும் போதே புனிதராகத்தான் திகழ்ந்தார். எங்கோ
பிறந்து இந்தியாவில் உள்ள தொழு நோயாளிகளின் மீட்பராக அவர் ஆற்றிய பணி என்பது
எல்லோருக்கும் ஓர் முன்னுதாரணம். கருணையின் வடிவமாய் அவர் எப்போதும் நம் நினைவில்
இருப்பார்.
மரணத்திற்குப் பின் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க இரண்டு அற்புதங்கள்
நிகழ்ந்தால்தான் சாத்தியமென்று வழக்கமுள்ளதாம். அதன் படி தீரா நோயுள்ள இருவர்
அவரது அற்புதத்தால் குணமானதால் இப்போது அவருக்கு புனிதர் என்ற நிலை
அளிக்கப்படுவதாய் சொல்லப் படுகிறது.
இது ஒரு மூட நம்பிக்கையின் மீட்சியே. அவரது வாழ்வே ஒரு அற்புதமாக இருந்த
போது இறப்பிற்குப் பின் அவரால் அற்புதம் நிகழ்த்தப் பட வேண்டும் என்றெல்லாம்
விதிகள் வைத்திருப்பதே அறிவியல் பார்வைக்கு முரணானது. தனது பிடிமானத்தை தக்க
வைப்பதற்கு எல்லா மதங்களுக்கும் ஏதோ ஒரு சித்து வேலை தேவைப்படுகிறது.
வாழும் போது அவர் செய்த பணிகளை, சேவைகளைக் காட்டிலுமா அவரது மறைவிற்குப்
பிறகு அவர் செய்ததாக சொல்லப்படுகிற அற்புதங்கள் மகத்தானது?
அன்னை தெரசா நிச்சயமாக ஒரு உன்னதமான புனிதர், வாழும் காலத்தில் செய்த அரிய
சேவைகளால், இறந்த பின் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அற்புதங்களால் அல்ல.
Rightly said
ReplyDeleteதெரேசாவை உங்கள் கம்யூனிச போராளி தோழர்கள் ( குறிப்பாக வினவு குழுமம் ) கேவலமாக விமர்சனம் செய்திருக்கின்றார்களே .. அது பற்றி தங்கள் கருத்து ...
ReplyDeleteLafees Anwar
வினவு - வெறும் காகித, இணையப் போராளிகள். மக்களிடம் செல்லாதவர்கள். அதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை
Delete