Sunday, March 27, 2016

ஓநாய்களின் ஆபாசக் கூச்சல்




முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும்.

நாற்காலி பறிபோன சூழலில் ரகுவரன் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து "ஒன்று நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டும். நம் இருவரைத் தவிர மூன்றாவதாக இன்னொரு ஆள் வரக்கூடாது" என்பார்.

திமுக, அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த காட்சி மாறுவதற்கான நம்பிக்கை ரேகை மெல்லமாக தென்படுகிறது.  மக்களுக்கான பிரச்சினைகளுக்காக பல போராட்டங்களில் ஒன்றாக களம் கண்ட நான்கு  கட்சிகள் பின்பு மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தது. ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க முடிவெடுக்கிறது.

ஊழல்களில் ஊறிப் போன, குட்டி முதலாளித்துவ கட்சிகளாக மாறி இருக்கிற இரு கழகங்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வராமல் இருக்க வியூகம் அமைக்கிறது. தேமுதிக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்கிறது மக்கள் நலக்கூட்டணி.  

தேமுதிக வை தங்கள் வசம் இணைக்க வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்த திமுகவால் இதனை ஏற்கவே முடியவில்லை. பழம் நழுவி தங்களிடம் வந்து விடும் என்று கண்டிருந்த கனவு கானல் நீராகிப் போய் விட்டது.  தாங்கள் சுவைக்கத் துடித்த பழம் என்பதால் பழத்தை பழிக்க முடியவில்லை. இப்பழம் புளிக்கும் என்று நரியாய் ஓலமிட முடியவில்லை. அதன் ருசி தெரிந்ததால்தானே இத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்!

அதனால் பழம் எங்கே சென்றதோ, அவர்களை சபிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிக்க தொடங்கி விட்டார்கள். கம்யூனிஸ்டுகளை வளரவிடாமல் பார்த்துக் கொண்டேன் என்று சொன்னவரின் கட்சியினர், இன்று கம்யூனிஸ்டுகள் தடம் மாறலாமா என்று கேட்கிறார்கள்.  இப்போது செல்வதுதான் சரியான பாதை என்று சொன்னால் பதில் கிடையாது, வருவது எசப்பாட்டுதான். 

ஆளும் கட்சியின் பி அணி என்று ஒரு கோயபல்ஸ் பொய்யை கூச்சமே இல்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆளுகிற ஜெயலலிதா மீது இவர்கள் வெண்சாமரம் வீசுவது போல மென்மையாய் விமர்சனங்களை முன்வைக்க, கடும் புயலாய் கண்டன இயக்கங்களை நடத்தி வந்தது, வருவது மக்கள் நலக் கூட்டணி என்ற சிறு உண்மை இவர்களின் கருப்புக் கண்ணாடிக்கு தெரியவே இல்லை.

ஊழலில் ஒன்று
அதிகார துஷ்பிரயோகத்தில் ஒன்று
மத்தியரசுக்கு நடைபாவாடை பிரிப்பதில் ஒன்று
பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் ஒன்று
ஏழை மக்கள் பிரச்சினைகளில் காட்டும் அலட்சியத்தில் ஒன்று
ஜாதிய ஆணவத்திற்கு இசைந்து போவதிலும் ஒன்று

என திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்  எந்த வேறுபாடும் கிடையாது. 

வாக்காளர்களுக்கு காசு கொடுத்து வளைக்கப்பார்ப்பத்திலும் இரு கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. 

ஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று அதிகாரப் பசியோடு  நம்பிக் கொண்டிருந்த உடன்பிறப்புக்கள் தங்களின் கற்பனைக் கோட்டை சரிவதைக் கண்டு சமூக வலைத்தளங்களில் ஆபாசக் கூச்சலிடுகின்றனர். அவர்கள் கட்டவிழுத்து விடும் பொய் மூட்டைகளும்  நாகரீகமற்ற வார்த்தைகளும் அவர்களின் தரம் தாழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

தேர்தல் சமயத்தில் கூட ஜெயலலிதாவை எதிர்க்க திராணியற்றவர்கள் என்பதையும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அதுவே அவர்களை மக்களிடத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

மாற்றம் நிகழும். 

மாற்றத்திற்கான விதை மக்கள் நலக்கூட்டணி உருவாக்கியது. 

17 comments:

  1. I am a neutral voter and I was planning to vote for Makkal Nala Koottani (MNK). But I was deeply disappointed (and hurt, in a way) when the four leaders of such a high stature resorted to rally behind the 'good for nothing' actor turned politician. It is very sad to see leaders like GR, Mutharasan, Thiruma and Vaiko begging for alliance and accepting him as their CM candidate. What better did the MNK see in him (good for nothing) and his wife (as someone mentioned, she looks like a combination of JJ and Sasi). Now I have changed my mind not to vote for MNK (please mind that there are many people like me - at least some of my friends). MNK had wasted a great opportunity to present itself as an alternative to DMK and ADMK. So sad...

    Suresh

    ReplyDelete
  2. ”நல்லதோர் வீணை செய்தே......” ம ந கூட்டணி நிச்சயமாக அதை புழுதியில் எறிந்து விட்டது.சுரேஷ் தெரிவித்துள்ள கருத்து தான் சற்றேறக்குறைய ம ந கூட்டணியின் மேல் நல்லெண்ணம் கொண்டிருந்தோரின் கருத்தாக உள்ளது.ஏன் உங்கள் மனமே அதனை உடனே ஏற்க மறுத்ததால் தானே இவ்வளவு தாமதமாக கருத்துரைக்கிறீர்கள்.வைகோவின் வன்மத்திற்காக தமிழக நலன்களை பலி கொடுக்க வேண்டுமா?இன்றைய ஆட்சி தூக்கியெறியப்பட்டு அந்த இடத்தில் ஒரு நல்லகண்ணுவோ,திருமாவோ அல்லது தகுதி அடிப்படையில் யாரோ வருவார்கள் என்றால் பலரின் மனமும் ஏற்றிருக்கும்.ஆனால் திடமான மன நலமோ,சமூக அறிவோ வாய்க்கப்பெறாத விஜயகாந்தை முதல்வராக ஏற்க மனம் ஏற்கவில்லை.இப்படி யோசியுங்களேன்.ம ந கூட்டணியின் உழைப்பால் ஒரு 40 இடங்களில் தே தி மு க வெற்றி பெறுவதாகவும் 80-90 இடங்களில் திமுக வெற்றி பெறுவதாகவும் ஒரு நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஒன்றிரண்டு உறுப்பினர்களுடன் இடதுசாரிகள் திமுக-தேதிமுக கூட்டணி அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மல்லுகட்டுவார்கள்.தேதிமுக கட்சி பிறவிப்பயனை அடையும்.

    ReplyDelete
  3. கம்யூனிஸ்டுகள் சிறந்த தொழிளால்ர் நல போராட்டக்காரர்கள். ஆனால் அவர்கள் சிறந்த அரசியல்வாதிகள் அல்ல-தமிழ்நாட்டைப் பொறுத்தவரை! பெட்டிகிடைக்கும் பக்கமே எப்போதும் சோரம்போய் இருந்தார்கள். இதுதான் இதுவரை நாம் கண்டது! மேலும் அவர்கள் மக்கள் நலம் என்ன என்று பார்க்காமல் கட்சி கொள்கை என்ன என்று பார்த்துதான் செயல்பட்டார்கள். கூடங்குளம் பிரச்னையை உதாரணமாக சொல்லலாம். வைகோ சிறந்த தமிழ் போராளிதான். ஆனால், காலத்தின் கட்டாயம் அவரால் தனித்து செயல்பட முடியாது. அரசியலுக்கு, போராடுவதற்கு பணம் தேவையில்லை! ஆனால் தேர்தலுக்கு பணம் கட்டாயம் தேவைப்படுகிறதே! திருமாவளவனும் பணத்தேவையினால் வளைந்து சோரம்போனவர்தான். ஆகையால் இந்த மக்கள் நலக்கூட்டணி சிறப்பாக மக்களுக்காக செயல்படும் என்று நம்பிக்கை உண்டாகவில்லை. யார் ஜெயித்தாலும் அவர்கள் ஆட்சியை ஒருகை பார்க்க பிஜேபி மத்தியில் தயாராக இருக்கிறது. இவர்களின்மேல் அவதூறுகளை தூற்றி அசிங்கப்படுத்த இப்போதே ஊடகங்கள் தங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டன. தேர்தல் வரை-இன்னிலையில்-இவர்கள் ஒன்றாக இருக்க விடமாட்டார்கள் என்றே தெரிகிறது. மக்களிடம் நல்மதிப்பை இழந்துவிட்டபடியால் இந்த நிலை! நல் மதிப்பை மட்டும் இவர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள் என்றால் இவர்களை யாரும் அசைத்துவிட முடியாது. மத்தியில் ஆளும் பிஜேபியும் இவர்களிடம் பணிந்துதான் போக வேண்டும். (இந்திரா-எம்ஜியார்போல). ஜனங்களிடம் நல்ல பெயர் போய்விட்டது. ஆகையால் மக்கள் நலக்கூட்டணி ஜெயித்தாலும் தோற்றாலும் அது என்றோ தோற்று விட்டது. தமிழகத்துக்காக இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும்விட மாட்டார்கள்.

    ReplyDelete
  4. we need to support MNK atleast as the alternative to DMK and ADMK

    ReplyDelete
  5. Everybody liked MNK, and were preparing to vote for vaiko (believing that he will become the CM) eventhough it is quite difficult, but were shattered when Vijayakanth was brought in to
    the scene. People are now having second thoughts about voting for MNK. People are confused
    now and they will prefer lesser of the two corrupt parties or will vote for a party which will help tamil causes. Premalatha is an arrogant lady and she speaks nonsense.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. உண்டியல் பிச்சைகாரா
    திமுக பற்றி ஏதாவது ஒரு சொல் தரக்குறைவாக சொன்னால் உன் தலை உனக்கு சொந்தம் இல்லை
    இது எச்சரிக்கை

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. அன்சாரி முகம்மதுMarch 28, 2016 at 8:08 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. அன்சாரி முகமது என்ற உடன்பிறப்பு வழக்கம் போல ஆபாச வாந்தி எடுத்து விட்டு போயிருக்கிறார். மேலே உள்ள ஒரு பின்னூட்டம் மட்டுமே நாகரீகமானது என்றால் மற்றவை எப்படி இருக்கும் என்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். பாவம் வாங்கிய காசிற்கு கூவுகிறார் போலும். இப்படி ஆபாசமாக பேசுவதுதானே திமுக பாரம்பரியம்! ஆனால் ஒன்று இது போல வெத்து உதார்களை நிறையவே பார்த்திருக்கிறேன். எதிரிகளும் துரோகிகளும் எனக்கு ஒன்றும் புதிதல்ல.

    ReplyDelete
  12. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நான் இம்முறை ஓட்டளிக்கப் போவது மக்கள் நலக் கூட்டணிக்கே

    ReplyDelete
    Replies
    1. இது போல பலரும் சொல்வதுதான் அவர்களின் பிரச்சினையே

      Delete
  13. ////உண்டியல் பிச்சைகாரா
    திமுக பற்றி ஏதாவது ஒரு சொல் /////
    நீங்களாவது மக்களை கேட்கிறீர்கள்.. ஓகோ பால்வா போன்ற பண முதலைகளைக் கேட்க மறுக்குறீர்கள் என்ற கோவம் அனானிக்கு..

    ReplyDelete
    Replies
    1. ஜாக்கிரதை சார், உங்களையும் அவர் மிரட்டப் போகிறார்

      Delete
  14. கண்டிப்பா ஜெயிப்பீங்களா? அவ்ளோ நம்பிக்கையா?

    ReplyDelete
  15. ஜெயலலிதா,எம்ஜிஆர் முதல்வர்கள் வேட்பாளராக வந்த போது அவர்களுக்கு வாக்களித்து, முதல்வர்களாக இருந்த போது அவர்களை ஆதரித்து, ஆராத்தி எடுத்தவர்களும் இப்போது விஜயகாந்தை முதல்வராக மக்கள்நலகூட்டணி ஏற்று கொண்டதால் அதன் மீது நம்பிக்கை போய்விட்டது, ஆதரிக்க முடியாது என்பது மகா காமெடி.

    ReplyDelete