மகளிர் மீது தனக்கு அக்கறை உள்ளது என்று காண்பித்துக் கொள்ள நாளை சர்வதேச மகளிர் தினத்தன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்கள் மட்டுமே பேசும் விதத்தில் அவை நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று மோடி சொல்லியுள்ளார்.
இது வெறும் ஏமாற்று வேலை மட்டுமே.
உண்மையிலேயே அவருக்கு பெண்களின் உரிமைகள் மீது அக்கறை இருந்தால் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவையில் நிறைவேறி பல காலம் ஆன மசோதா இது. மக்களவையில்தான் நிறைவேற்றப்பட வேண்டும். பாஜக கட்சிக்கு உள்ள உறுப்பினர் எண்ணிக்கைக்கு மகளிர் மசோதா நிறைவேறுவதில் எந்த சிரமமும் கிடையாது.
காங்கிரஸ் கட்சியோ, இடதுசாரிகளோ இல்லை அதிமுகவோ இந்த மசோதாவை எதிர்க்கப் போவதில்லை. மாறாக ஆதரித்துத்தான் ஓட்டு போடுவார்கள். சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் மசோதாவை நிறைவேற்றுவேன் என்று சொன்னால் அதில் அர்த்தமிருக்கும். அதை விடுத்து அன்று மகளிர் மட்டும் பேசுவார்கள் என்று சொல்வது மோடியின் வழக்கமான மோசடி நாடகம் மட்டுமே.
முப்பத்தி மூன்று சதவிகிதம் மகளிர் இருக்க வேண்டிய மக்களவையில் வெறும் பனிரெண்டு சதவிகிதம் மட்டுமே இருப்பதை மாற்ற முயற்சிக்காதவர்கள் மகளிரை மதிப்பதாகச் சொல்வது யாரை ஏமாற்றும் வேலை?
வெற்று ஆரவாரங்களையும் பொய் முழக்கங்களையும் மட்டுமே நம்பி குப்பை கொட்டும் அரசிடம் எந்த விஷயத்திலும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
அப்படி எதிர்பார்ப்பது மூடத்தனமும் கூட.
No comments:
Post a Comment