Thursday, March 10, 2016

சர்ச்சைகளின் வில்லி



மோடி உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்கள் எல்லோருமே வில்லங்கமான பேர்வழிகள்தான். நச்சு மரமான ஆர்.எஸ்.எஸ் கொடுக்கும் கனிகள் மட்டும் தூய்மையாகவா இருக்கும்? நாகப்பாம்பின் குட்டிகளும் விஷமுடையதுதானே!

ஆனால் இருக்கிற அமைச்சர்களிலேயே சர்ச்சைகளிலேயே வாழ்கின்ற அமைச்சர் என்ற பெருமை மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணிக்கு மட்டுமே உண்டு. அவரது நடவடிக்கைகள் மூலம் அடாவடி அமைச்சர் வி.கே.சிங்கையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போல.

தனது கல்வித்தகுதி குறித்து தவறான தகவல்களை தேர்தல் வேட்பு மனுவில் கொடுத்தது முதல் ஒவ்வொன்றுமே வில்லங்கமாகத்தான் இருக்கிறது.

ஐ.ஐ.டி களில் அசைவ உணவை தடை செய்வது

சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டப் பிரச்சினை,

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலாவை தற்கொலை செய்து கொள்ள வைத்தது. அப்பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது,

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம்.

அது தொடர்பாக மக்களவையில் தோழர் யெச்சூரி மீது அவதூறு சொல்லி உரிமை மீறல் பிரச்சினைக்கு ஆளானது.

அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவிக்கு இடையூறு அளிப்பது

இதையெல்லாம் விட அவரது பயணக்குழுவில் வந்த ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்திட, கண்டு கொள்ளாமல் போனது மட்டுமல்லாமல் தான் ஆம்புலன்ஸை வரவழைத்ததாக கூசாமல் பொய் சொன்னது 

என்று அவரது குற்ற கிராப் உயர்ந்து கொண்டே போகிறது.

சீரியல்களில் வேண்டுமானால் அவர் கதாநாயகியாக நடித்திருக்கலாம். ஆனால் அரசியலில் அவர் ஒரு வில்லியாகத்தான் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உன் மனைவியிடம் நீ சொன்ன வார்த்தையை சொல்லி விட்டு அவருடைய பதில் என்னவென்று சொல். நீ சொல்வாய் ஏனென்றால் காவி டவுசர்களுக்கு பெண்களை மதிக்கத் தெரியாது

      Delete