ஜாதி ஆணவக் கொலைக்கு கணவனை பறி கொடுத்த உடுமலைப்பேட்டை கௌசல்யா, தன்னுடைய உயர் கல்வியை தொடர விரும்புவதாகக் கூறியதை நாளிதழில் படித்திருப்பீர்கள்.
கௌசல்யாவின் மேற்படிப்பிற்காகக் கூடிய செலவினத்தை முழுமையாக ஏற்பது என எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோயம்பத்தூர் கோட்டச் சங்கம் முடிவு செய்துள்ளது. கோவைக் கோட்டச்சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கும் அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய, எங்கள் வேலூர் கோட்டத்தினுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.
இந்த செய்தி அறிந்த போது மனம் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. 1994 ம் வருடம் தஞ்சையில் எங்களது தென் மண்டல மாநாடு நடந்து கொண்டிருந்தது. அம்மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் அப்போதைய மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். சசிகலா என்ற ஏழை தலித் மாணவிக்கு சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்தும் பத்தாயிரம் ரூபாய் இல்லாததால் அவரால் கல்லூரியில் சேர முடியாமல் சிரமப்படுகிறார் என்ற தகவலை பகிர்ந்து கொண்டார்.
அந்த பெண்ணின் கல்விக்கு உதவ உங்களால் முடிந்த நிதியைத் தாரீர் என்று அப்போதைய தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா மாநாட்டில் அறைகூவல் விடுக்க, மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் உவப்போடு நிதியளிக்க அந்த பெண்ணிற்கு தேவைப்படும் நிதி கிடைத்தது.
அன்றிலிருந்து அப்பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எங்களது கோட்டத்தில் கூட சுனாமியில் தந்தையை இழந்த பாக்கியலட்சுமி என்ற மாணவியின் கல்லூரிச் செலவினங்களை பொறுப்பேற்றுக் கொண்டோம்.
கடந்தாண்டு பிரஷாந்த் என்ற மருத்துவக் கல்லூரி மாணவனுக்காக தஞ்சைக் கோட்டம் செய்த பணி குறித்த பதிவு இது
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நாடு முழுதும் ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு உதவுவதை தனது கடமைகளில் ஒன்றாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆம், இவை ஒன்றும் இரக்கத்திலானது அல்ல. ஒரு தொழிற்சங்க இயக்கத்தின் தொழிலாளர் வர்க்கக் கடமை என்ற அடிப்படையில், புரிதலில்.
these girls instead of studying make romances only.... now one life is lost.bharati raja had taught the school girl to romance.... parents rarely pay attention to their childrens behaviour... after schooling.... very bad
ReplyDeleteits only the old conservative thought only
Deleteபடிக்கின்ற காலத்தில் கண்டவர்களுடன் சுத்துவதால் வந்த வினை என்பதை அனைவரும் வசதியாக மறந்து விடுகின்றனர். ஓரு நல்ல மானவிக்கு உதவியிருக்கலாமே!
ReplyDeleteமன்னிக்கவும் உங்கள் பார்வை தவறானது. பல்லாண்டுகளாக ஊறிக் கிடக்கிற ஜாதிய உணர்வுதான் பிரச்சினைக்கு காரணம். சொந்த ஜாதியாகவோ இல்லை பணக்காரப் பையனாகவோ இருந்தால் அரிவாளைத் தூக்காமல் கல்யாணம் செய்து கொடுத்திருப்பார்கள்.
Deleteஜாதி வெறி கொலைக்கு கணவனை பலி கொடுத்த கவுசல்யாவின் மேற்படிப்பு உதவும் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜாதி வெறிக்காக கொலைகள் செய்வதும்,
உயர் கல்வியை தொடர விரும்பும்பும் ஒருவருக்கு பொருளாதார வசதி இல்லாவிட்டால், யாராவது நல்லவர்கள் உதவி செய்தால் தவிர அவரால் படிக்க முடியாது என்ற நிலை 22 ஆண்டுகளாக இருந்து வருவதும், நாட்டின் கொடுமைகள்.