மோடி படிக்காத, வாங்காத பட்டம் கூட அந்த தீயில் எரிந்து போய் விட்டது என பலர் நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இந்த தீ விபத்தை அவ்வளவு சுலபமாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
மோடி முழுக்க முழுக்க ஹிட்லர் ஜெர்மனியில் செய்ததைத்தான் பின்பற்றி வருகிறார். என்னை வேண்டுமானால் வெறுத்துக் கொள்ளுங்கள், இந்தியாவை வெறுக்காதீர்கள் என்ற அவரது லேட்டஸ்ட் வசனம் கூட ஹிட்லரின் வசனத்தை அப்படியே காப்பியடித்துதான்.
இந்த தீ விபத்து சிறிய ஒன்று, சிறப்பு காவல்படை அலுவலக வரவேற்பரையில் நிகழ்ந்தது என்று இப்போது சொல்கிறார்கள். ஆனால் தீ விபத்துக்கான காரணத்தை இன்னும் சொல்லவில்லை.
ஹிட்லர் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜெர்மன் நாடாளுமன்றத்தை அவனது குண்டர்களை வைத்து கொளுத்துகிறான். பழியை கம்யூனிஸ்ட் கட்சி மீது போடுகிறான். டிமிட்ரோவ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் (நீதிமன்ற விசாரணையை தோழர் டிமிட்ரோவ் எதிர்கொண்டது தொடர்பான ஒரு நூல் உண்டு. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். நன்றாக இருக்கும்)
நாடாளுமன்றக் கட்டிட எரிப்பை காரணமாக வைத்து அவசர நிலை அடக்குமுறையை கொண்டு வருகிறான். அதன் பின்புதான் அவனது அராஜகம் அதிகமானது.
மோடிக்கு சிக்கல் அதிகமாகும் போது எல்லையில் ஒரு தாக்குதல் நடந்து இந்திய வீரர்கள் இறந்து போய் ராணுவம் ஒரு பதிலடி கொடுக்கும். இது வாடிக்கை.
இப்போது சிக்கல் கை மீறிப் போவதால் ஹிட்லர் பாணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகத்தான் மோடியின் அலுவலகத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிற தீ விபத்தை நான் பார்க்கிறேன்.
தேசம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் இது.
முக்கியம். எல்லாருக்கும் ஷேர் செய்யவும். இந்து முஸ்லிம்களை பிரிக்கும் சக்திகளுக்கு பீதியை குடுக்கும் விதமாக இந்த புத்தாண்டை ஆக்கிடுவோம்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்து சொல்வதாக இருந்தாலோ அல்லது பதில் சொல்வதாக இருந்தாலோ பின்வரும் சொல்லை பயன்படுத்தும்படி புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரோ ராமச்சந்திர குஹா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
'Wish you a Hands-Together New Year' (கவனிக்கவும் Happy New Year அல்ல)
வாழ்த்து கூறுவது இஸ்லாத்தில் இல்லை. ஆனால் போராடுவது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. ஆகவே புத்தாண்டை வாய்ப்பாக கருதி இந்த சுலபமான போராட்டத்தை கையிலெடுங்கள். இந்த வார்த்தைகளை உலக ட்ரெண்ட் ஆக்கவும்.
பிரிக்க நினைக்கும சங்கிகளுக்கு தக்க பதில் கொடுக்க இந்த சிறிய செயலை செய்யலாமே!