Tuesday, December 3, 2019

இனிப்புக்களும் மரணங்களும் பரிசாக . . .



மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது அப்பட்டமான ஆணவக் கொலைகள்.

தனது வீட்டிற்கு அருகில் உள்ள தலித் மக்களின் வீடுகள் கண்ணில் படக் கூடாது என்ற ஆணவத்தில் இருபது அடிக்கு கருங்கல்லில் எழுப்பப்பட்ட தீண்டாமைச்சுவர் பதினேழு உயிர்களை பலி வாங்கி விட்டது.

தீண்டாமைச் சுவர் கட்டிய சக்கரவர்த்தி துகில் மாளிகை முதலாளியை கைது செய்ய வக்கில்லாத காவல்துறை

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் மீது தடியடி நடத்தி  எலும்புத்துண்டுகளின் ருசிக்கு விசுவாசமாக இருந்து விட்டது.

இந்த முதலாளியின் முக நூல் பக்கத்தில் தீபாவளிக்கு தன் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக வாங்கி வைத்துள்ள இனிப்பு பொட்டலங்களை அடுக்கி வைத்து படம் போட்டுள்ளான்.

தன் அண்டை வீட்டாருக்கு மரணத்தை பரிசாக அளித்துள்ளான் அயோக்கியன் . . .

3 comments:

  1. மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இன்று துவிட்டரில் #தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி எனும் சிட்டை 7156 கீச்சுகளுடன் முன்னணியில் உள்ளது.

    இந்த மழைக்கு அடுத்த சுவர் விழும் முன் மாநிலத்தில் இது போல் எத்தனை தீண்டாமைச் சுவர்கள் உள்ளன என அரசு கணக்கெடுத்து அவற்றைப் பாதுகாப்பான முறையில் இடிக்க வேண்டும்! வாருங்கள்! இணைந்து வலியுறுத்துவோம் இதை இப்பொழுதே!

    ReplyDelete
  2. முற்காப்புத் தேவை
    சம்பந்தப்பட்டோர்
    அக்கறை காட்டுவார்களா?

    ReplyDelete
  3. எல்லாம் மனிதர்கள் இருப்பது கேவலமாக இருக்கின்றது. உயிர்களுக்கு பெறுமதியே இல்லாமல் போய்விட்டது

    ReplyDelete