"வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்" என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மேற்கொண்டு வருகிற நடைப் பயணத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் பெருமை கொள்வதற்கான ஒரு முக்கிய அம்சம் ஒன்று உள்ளது.
துவக்க நாளன்று வடலூரில் எல்.ஐ.சி யில் பணியாற்றும் கிட்டத்தட்ட நூறு மகளிர் தோழர்கள் பங்கேற்றனர். பயணக்குழு செல்லும் வழிகளில் உள்ள மையங்களில் வரவேற்பு அளிக்கின்றனர்.
அதை விட மிக முக்கியமான அம்சம் என்னவென்றால்
மதுரைக் கோட்டத்தில் பணியாற்றுகின்ற
தோழர் சித்ரா,
தோழர் ராஜேஸ்வரி,
தோழர் கார்த்தீஸ்வரி
ஆகிய மூன்று தோழர்கள் நடைப்பயணத்தில் முழுமையாக பங்கேற்கின்றனர்.
மத்தியதர ஊழியர்களுக்கான மனத்தடையை உடைத்து புதிய முன்னுதாரணத்தை அவர்கள் படைத்துள்ளார்கள்.
பாதங்கள் வலிக்க வலிக்க அவர்கள் பயணம் சென்னை நோக்கி தொடர்கின்றது.
நடைப்பயணத்தின் சிரமங்கள் அவர்களை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்பதை புதுவை சென்ற போது அவர்களை சந்தித்த போது உணர்ந்து கொள்ள முடிந்தது.
"ஒரு இரண்டு நாள்தான் கஷ்டமாக இருந்தது. இப்போ அதெல்லாம் ஒன்றுமில்லை தோழர்"
என்று உற்சாகமாக சொன்னார்கள்.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தோழர்களே !
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு நீங்கள் பெருமை சேர்த்துள்ளீர்கள்.
பிகு: அதென்ன தலைப்பில் "லைட்டா பொறாமை'?
எங்கள் வேலூர் கோட்டத்திற்கு இந்த பிரத்யேகமான பெருமை கிடைக்கவில்லை என்பதால் லைட்டா பொறாமை. ஆனால் எங்களாலும் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ள இந்த மூன்று தோழர்களுக்கு நன்றிகளும் கூட.
அருமையான பதிவு.
ReplyDeleteதோழர்களின் முயற்சிக்கு பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்
ReplyDeleteதோழர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteபாராட்டுகள்
ReplyDeleteபொறாமையை வெளிப்படையாய் சொன்ன உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
ReplyDelete