Friday, December 13, 2019

கணக்கு கேட்கும் நாள்



*ஜனவரி 8, 2020*-
*நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஏன்?*

உரையாடல் 3

*கணக்கு கேட்போம்!*
**********************************

கணக்குகள் எப்போதுமே சின்னவைதான். ஆனால் அவை தெரியாததால் இழப்பது எவ்வளவு என்ற கணக்குதான் பெரியது! 

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் (BPCL) மத்திய அரசால் பங்கு விற்பனைக்காக மாலை போட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆடுகளில் ஒன்று. 

*இப்போது பி.பி.சி.எல் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ 1.06 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசின் பங்குகளாக உள்ள 53.29 சதவீதம் விற்கப்பட்டால் 30% பிரிமியம் சேர்த்து ரூ 74000 கோடி கிடைக்கும்.* அடேயப்பா எவ்வளவு பெரிய தொகை என்று மலைக்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள்.

*பி.பி.சி.எல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு சந்தை விலையில் இப்போது கிடடத் தட்ட 9 லட்சம் கோடி.* இது மாற்றத் தக்க மதிப்பிடல் முறையில் (Replacement Valuation Method) போடப்பட்டுள்ள கணக்காகும். இந்த சொத்துக்களை கையாளக் கூடிய வாய்ப்பை 74000 கோடிகளுக்கு தனியார் பெறப்போகிறார்கள். 

மஹாரத்னா அதிகாரிகள் கூட்டமைப்பின் அமைப்பாளர் முகுல் குமார் கணக்குப்படி *இந்த பங்கு விற்பனை நடந்தால் அரசின் கஜானவுக்கு 4.46 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.* (இந்து பிசினஸ் லைன் - 10.12.2019 - பக்கம் 4). 

நிர்வாகக் கட்டுப்பாட்டை இப்படி அடி மாட்டு விலைக்கு விற்பது பிற்போக்கானது, பிரயோசனம் அற்றது என அக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

இது மக்களின் வரிப்பணத்தில் உருவான நிறுவனம். மக்களின் வியர்வை வாசம் கலந்து கட்டப்பட்ட நிறுவனம் அது. 

*நாளெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ! பொதுத் துறை நிறுவனங்கள் சாவதோ! தனியார்கள் வாழவதோ!*

*********************************
*கணக்கு கேட்கும், கேள்வி கேட்கும் நாள் ஜனவரி 8*

தோழர் கே.சுவாமிநாதன்,
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment