Saturday, November 18, 2017

எட்டு கோயில்கள் ஒரே நேர்கோட்டில் எனும் உடான்ஸ்





இப்போது வாட்ஸப்பில் பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கும் ஒரு காணொளி

எட்டு சிவாலயங்கள் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கிறது என்ற செய்திதான்.

உத்தர்கண்டில் உள்ள கேதார் நாத், ஆந்திராவில் உள்ள காலேஸ்வரம், காளஹஸ்தி நீங்கலாக மீதமுள்ள ஐந்து சிவாலயங்கள் தமிழகத்தில் உள்ளவை.

காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை,
சிதம்பரம்,
திருவானைக்காவல்
ராமேஸ்வரம்.

இதோ கீழே தமிழகத்தின் வரைபடம் உள்ளது. இந்த ஐந்து கோயில்களும் ஒரே நேர்கோட்டில்தான் இருக்கிறதா என்பதை நீங்களே பாருங்கள்.



இப்படியெல்லாம் பொய் சொல்லி மார்க்கெட்டிங் செய்யும் நிலையில்தான் கடவுள்கள் இருக்கிறார்களா?

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல  என்று சொல்லியே இப்போது உள்ளவர்களை முட்டாளாக்க முயல்கிறார்கள்.

15 comments:

  1. இன்னொரு உடான்ஸ் உலா வருகின்றது உலக அளவில்
    சவுதி ஹபா உலகின் மைய பகுதியில் இருக்கின்றது என்று

    ReplyDelete
  2. அப்படியா? அந்த விபரங்களை அனுப்பவும்

    ReplyDelete
    Replies
    1. http://thiruttusavi.blogspot.my/2017/11/2_20.html

      அருமையான கட்டுரை
      படிக்க மறவாதீர்கள்

      ஹபா மையம் தொடர்பாக இரணடு இணைப்புகள் ஏற்கனவே அனுப்பி இருக்கேன்
      இணையத்தில் பல குவிந்து கிடக்கின்றது

      அய்யாவு பாலசுந்தரம்

      Delete
    2. உங்களின் பின்னூட்டத்திற்கும் இணைப்புக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
      கட்டுக்கதைகளை பரவ விடும் போதே அவர்களுக்கு கடவுள் மீது
      நம்பிக்கை இல்லை என்றாகி விடுகிறது.
      எல்லா மதங்களிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் உள்ளார்கள் என்பதும்
      அவர்களை நம்ப ஏராளமான மூடர்கள் உள்ளார்கள் என்பதும்
      தெளிவாகத் தெரிகிறது

      Delete
  3. இதே பாணியில் திருநள்ளாறு பக்கம் வரும் போது செயற்கைகோள் எல்லாம் தடுமாறி அப்படியே கோவில் அந்த செயற்கைகோள் பார்வை இடத்தை விட்டு கடக்கும் வரை செயலற்று இருக்கும் என்று பரப்பட்டது நினைவில் இருக்கலாம். கடைசியில் அவைகள் எல்லாம் இணைய வதந்திகள் என்று செய்திகள் வெளியான பின்பும் மீண்டும் மீண்டும் அந்த செய்திகள் பரப்பபடுகின்றது.

    என்ன எழுதுகிறார் அந்த அனானி, எனது பதிவில் வந்து சம்பந்தமே இல்லாமல் எழுதும் ஒரு அனானியும் இருக்கிறார் என்ன அவர் ஆபாசமாக எழுதுவது இல்லை ஆனால் சம்பந்தமே இல்லாமல் மற்ற தலைவர்களை வம்புக்கு இழுத்து எழுதுவார் கொச்சையாசவும் கொஞ்சம் இச்சையாகவும். அவரின் வாசகங்களை நீக்கிவிடுவதோடு நிறுத்திகொள்வேன். நீங்கள் பாவம் விளக்கம் எல்லாம் எழுதுகிறீர்கள், விட்டுதள்ளுங்கள், அந்த அனானி விட்டில் முதல் வெட்டு விழும் வரை அது அப்படி தான் எழுதிக்கொண்டு இருக்கும், பிறகு யாரும் இணையத்தில் எழுதாதீங்க என்று கோவில் வாசலில் துண்டு சீட்டு கொடுத்து ஆதரவு திரட்டும்..........

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. இதுபோன்றவாறு கூறி மேலும் மேலும் ஏமாற்றவே.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  5. https://www.thenakedscientists.com/forum/index.php?topic=66504.0

    http://news.bbc.co.uk/2/hi/middle_east/7359258.stm

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. இந்த படத்தில் இந்தியா 90 டிகிரியில் அதாவது புகைப்படத்தில் நம் முகம் சரிவாக இல்லாமல் நேராக இருப்பது போல் உள்ளது. பூமி உருண்டையில் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். ஊர்களை இப்படி இணைக்காமல், அட்ச ரேகை, தீர்க்க ரேகையில் இணைத்துப் பாருங்கள். Approximately straight line with minor deviations. முன்னோர்களின் எல்லா விசயங்களையுமே மூடனம்பிக்கை என்று ஒதுக்க வேண்டுமா என்று யொசிக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. OK, Sir. Assuming all temples are in "exactly" in a straight line...
    So..?

    Yours
    Nambalki

    ReplyDelete