இந்தியாவின்
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்
இன்று. நேரு பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய பதிவு சுவாரஸ்யமானது. அதனை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.
ஆகா, மறந்தே போனேனே..
இன்று இந்த அற்புதமான மனிதரின் நாள்..
இரண்டு விடயங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.
ஒன்று மார்க்சிய அறிஞர் ரால்ஃப் மிலிபான்டின் மகன் (பிரிட்டிஷ் லேபர் கட்சியின் தலைவர்களில் ஒருவர். பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டவர்) ஒரு நேர்காணலில் தனக்குத் தன் தந்தை சின்ன வயதில் படிக்கக் கொடுத்த வரலாற்று நூல் நேருவின் உலக சரித்திரம் எனச் சொன்னது...
மற்றது ஆயுதப் போராட்டத்தில் பங்குபெற்று நாடுகடத்தப்பட்ட என் தந்தை கண்ணீர் சிந்தி இரண்டே இரண்டு முறைகள்தான் பார்த்துள்ளேன். ஒன்று என் அம்மா மறைந்த போது. மற்றது நேரு மறைந்த போது. அவரது வழக்கமான ஈசிசேரில் மார்பில் கவிழ்ந்து கிடந்த 'தினமணி' நாளிதழுடனும் நீர் வழியும் கண்களுடனும் அப்பா சாய்ந்திருந்த அந்தக் காட்சி.
மூன்றாவது ஏதும் தென்படுகிறதா என யோசித்துப் பார்க்கிறேன். ஒன்று நினைவுக்கு வருகிறது. அது இரண்டாண்டுகளுக்கு முன் Frontline ல் பாஜக /ஆர் எஸ் எஸ்சின் தலைவர்களில் ஒருவரான தாருண் விஜய் தான் நேருவை வெறுப்பதற்காககச் சொன்ன நான்கு காரணங்கள். அவை:
1. பொருளாதாரத்தைச் சந்தைக்குத் திறந்துவிடாமல் அரசுக் கட்டுப்பாட்டில் திட்டமிட்ட பொருளாதாரத்தை முயன்றது ஐந்தாண்டுத் திட்டங்கள், Planning Commission முதலியன
2. அயலுறவில் அணிசேராக் கொள்கையை நாசர், டிடோ போன்றோருடன் இணைந்து உருவாக்கியது
3. இராணுவ வல்லமை மிக்க இந்தியாவைக் கட்டாமல் அன்டை நாடுகளுடன் அமைதி, பஞ்சசீலம் என்றெல்லாம் அறம் பேசிக் கொண்டிருந்தது.
4. அப்புறம் அவரது மதசார்பின்மை அணுகல்முறை... ஆனால் அதற்காகத்தான் நாங்கள் உங்களை நேசிக்கிறோம் வணக்கத்துக்குரிய நேரு அவர்களே...

அதனைத்
தவிரவும் நேருவை நேசிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் மட்டுமல்ல, எல்லா எல்.ஐ.சி
ஊழியர்களும் கூட.
இந்தியாவின்
முதன்மையான நிதி நிறுவனம்.
இந்தியப்
பொருளாதாரத்தின் முதுகெலும்பு
மக்களின்
பணம் மக்களுக்கே செல்வதை உறுதி செய்யும் நிறுவனம்.
காப்பீடு
செய்த குடும்பங்களின் காவல் அரண்
குடும்ப
விளக்கை பாதுகாக்கும் அன்புக்கரங்கள்
நேர்மையின்
அடையாளம்
நம்பிக்கையின்
மறு பெயர்
எல்.ஐ.சி
ஆப் இந்தியா.
தனியார்
காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கியதும் எல்.ஐ.சி யை உருவாக்கியதும் ஜவஹர்லால் நேருவின்
முக்கிய சாதனை என்பதால் நாங்கள் அவரை என்றும் மறைப்பதில்லை.
கம்யூனிஸ்ட்
கட்சியை தடை செய்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடியது, உலகிலேயே தேர்தல் மூலம் முதன் முதலில்
அமைக்கப்பட்ட தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்
அவர்களின் ஆட்சியை கலைத்தது போன்ற கறைகள் உண்டு.
ஆனால்
இன்றைய மோடி அரசோடு ஒப்பிடுகையில் நேரு மோடிக்கு எட்டாத உயரத்தில் நிற்கிறார் என்பதையும் நேரு உருவாக்கிய விழுமியங்கள் அனைத்தையும் சீரழிப்பதையே
மோடி இலக்காகக் கொண்டுள்ளார் என்பதையும் நாம் மறந்திடக் கூடாது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎட்வீனா உறவு பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து இருக்கலாம்
ReplyDeleteஅதற்கெல்லாம் மஞ்சள் பத்திரிக்கை போல வலைப்பக்கம் எழுதும் வேறு ஆட்கள் இருக்கிறார்கள்
Deleteசீனத்தின் வஞ்சனையை புரிந்து கொள்ள முடியாத ஒரு தத்தியாக இருந்தது.
ReplyDeleteசீனாவிலிருந்து ஓடி வந்து அடைக்கலம் பெற்ற தலாய் லாமா வின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்
ReplyDelete