Wednesday, November 29, 2017

இப்படித்தான் சிரிக்க வேண்டியுள்ளது

ஸ்டேட்டும் சரியில்லை.
சென்ட்ரலும்  சரியில்லை.

அரசு சரியில்லை என்றாலும்
நீதி கிடைக்க எங்கே வாய்ப்பு
உள்ளது என்ற நம்பிக்கை
மக்களிடம் உள்ளதோ

அங்கே அதிலும் 
சென்னையிலும் சிக்கல்
டெல்லியில் சிக்கல்

 (இப்படி எழுதினால் அது
அவதூறு கணக்கில் வராதல்லவா!) 

இடுக்கண் வருங்கால் நகுக 
என்று வள்ளுவன் எழுதினாலும்

தேசத்திற்கு துன்பம் வரும் வேளையில்
சிரிப்பு வர மறுக்கிறது.

ஆனாலும் கூட கலைவாணரின்
இந்தப் பாடல்    இப்போது கூட
சிரிப்பை வரவைக்கிறது.



கலைவாணருக்கு நினைவஞ்சலி.

 

12 comments:

  1. கேரளாக்காரனும் இந்த பாட்டுதான் பாடிகிட்டு இருக்கான்

    அன்புடன்
    நம்பிக்கை ராஜ்

    ReplyDelete
    Replies
    1. ஆம். உண்மைதான்.
      ஒரு மக்கள் நல அரசு தங்களுக்கு அமைந்துள்ளது
      என்ற மகிழ்ச்சியில் வரும் சிரிப்பு அது

      Delete
    2. ஒரு பெண் நக்சல் போராளியை கொன்ற மக்கள் நல அரசு
      GST ஆதரிக்கும் மாநில அரசு ... இது மக்கள் நல அரசு
      .
      கேரளா மக்கள் பாடுவது
      ஸ்டேட்டும் சரியில்லை.
      சென்ட்ரலும் சரியில்லை.

      அன்புடன் நம்பிக்கை ராஜ்

      Delete
    3. உங்களுக்கெல்லாம் யோகி ஆட்சிதான் நல்ல ஆட்சி போல

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. அநாகரீக வார்த்தைகளுக்கு இங்கே இடமில்லை

      Delete
  2. தமிழகத்தில் அம்மா ஆட்சியை போல் சிறப்பான ஆட்சி எந்த மாநிலத்திலாவது உண்டா ?
    அம்மா இருக்கும் வரை GST கடுமையாக எதிர்த்தார் ஆனால் கேரளா கம்யூனிஸ்ட் அரசு ஆதரிச்சது ... அது மக்கள் நல அரசாம்

    NEET அம்மா எதிர்த்தார் .. அம்மா இருக்கும் வரை NEET தமிழகத்தில் இல்லை . ஆனால் கேரளா கம்யூனிஸ்ட் அரசு வரவேற்றது .. கொஞ்சம் கூட எதிர்க்கவில்லை
    அது மக்கள் நல அரசாம்

    மக்கள் நலன் என்ன என்பதை கம்யூனிஸ்ட் போராளிகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஐயா அனாமதேயம், காமெடி பண்ணாதீங்க.
      உங்க அம்மா நல்லாட்சியின் லட்சணம் இப்போ
      பரப்பன அக்ரஹார சிறையில கொடி கட்டு பறக்குது.
      இறந்ததால் தப்பித்தவர் அல்லவா அவர்!

      அப்புறம் கேரளாவைப் பற்றி, அதன் கல்வி முறை பற்றியெல்லாம்
      பேச உங்களுக்கு வயசு பத்தாது. யாராவது பெரியங்களை கேட்டு
      தெரிஞ்சுக்கங்க

      Delete
    2. அனாமதேயர் அல்ல
      என் பெயர் நம்பிக்கை ராஜ்

      Delete
    3. "கேரளாவைப் பற்றி, அதன் கல்வி முறை பற்றியெல்லாம்
      பேச உங்களுக்கு வயசு பத்தாது."

      கேரளாவில் எழுத்தறிவு வீதம் ஜாஸ்திதான் ... ஆனால் உள் கடடமைப்பு வசதிகள் பற்றி பேசுவார்களா ? உள்நாட்டு வேலைவாய்ப்புக்கு கேரளா அரசுகள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பது பற்றியாவது பேசுவார்களா ?

      Delete
    4. ஆமாம். ஏதோ நல்லாட்சி கொடுத்ததா ஒரு அம்மா பற்றி சொன்னீங்களே,
      அவங்க இதுக்கெல்லாம் என்ன செஞ்சிருக்காங்க?

      Delete
  3. மொட்டைக்கடிதாசிப் பேர்வழிகள் பெரும்பாலும் உண்மை விளம்பி என்று தங்களை அழைத்துக் கொள்வார்கள்.

    இணைய உலகில் ஃபேக் ஐ.டி கள் தங்கள் பெயரோடு நம்பிக்கையை ஒட்டிக் கொள்கிறார்கள் போல

    ReplyDelete