Saturday, November 4, 2017

அவருக்கு ஒரே ஒரு மாலைதான்






ஆரணியில் எங்கள் கோட்டச்சங்க மாநாடு நடந்தது அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில்

எங்கள் கோட்டத்தில் கடந்த சில வருடங்களாக காந்தி ஜெயந்தியை "மத நல்லிணக்க பாதுகாப்பு நாள்" என்று அனுசரித்து  அனைத்து மையங்களிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து "மத நல்லிணக்கம், மனித நேயம்" ஆகியவற்றை வலியுறுத்தும் பிரசுரங்களை மக்கள் மத்தியில் வினியோகம் செய்வது வழக்கம்

மாநாடு காரணமாக இந்த வருடம் அவ்வாறு செய்ய இயலவில்லை. இருப்பினும் காந்தி ஜெயந்தி அன்று காலை மாநாட்டு நிகழ்வுகள் துவங்கும் முன்பாக ஆரணியில் இருந்த அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்தோம்.

மாநாடு நடந்து கொண்டிருக்கையில் மதிய வேளையில் ஆரணி கிளையின் ஒரு தோழர் சொன்னார்.

"காந்தி சிலையில் நாம் போட்ட மாலை மட்டும்தான் உள்ளது. வேறு யாருமே போட்டதாக தெரியவில்லை"

நேற்று நெய்வேலி செல்கையில் ஆரணியில் காந்தியடிகளின்  அந்த சிலையை கடக்கையில் கவனித்தேன்.

ஒரே ஒரு காய்ந்து போன மாலை மட்டும்தான் அவர் கழுத்தில் இருந்தது.

அரசு மட்டுமல்ல காங்கிரஸ்காரர்கள் கூட . . . . . . . .

அதை எழுத எனக்கு மனமில்லை


"

1 comment:

  1. இது கோட்சேவுக்கு கோவில் கட்டும் காலம்

    ReplyDelete