Saturday, November 18, 2017

சபாஷ் சித்தராமையா

 கீழே உள்ள பதிவு, தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் எழுதியது.

அவருக்கு நன்றி சொல்லி, துணிச்சலான முடிவெடுத்த கர்னாடக முதல்வர் திரு சித்தராமையா அவர்களை பாராட்டுவதில் நானும் இணைந்து கொள்கிறேன்







ஏதேனும் வேண்டுதலுக்காக மனிதரை பலி கொடுப்பது...

பிராமணர்கள் சாப்பிட்ட இலைகள் மீது பிற சாதியினர் உருண்டு வரச் செய்வது...

தீக் கங்குகள் மேல் நடக்க வைப்பது...

மாதவிடாய் நாட்களில் அல்லது கர்ப்பக் காலத்தில் பெண்ணைத் தனிமைப்படுத்துவது...

வழிபாட்டின் பெயரால் பெண்களை நிர்வாணமாக நடக்க வைப்பது...

பேய் விரட்டுவதாகச் சவுக்கால் அடிப்பது...

புதையல் எடுப்பதாகக்கூறி பூஜை நடத்தி ஏமாற்றுவது...

விலங்கின் கழுத்தைக் கடித்து அதைக் கொல்ல வைப்பது...

சூனியம் வைப்பதாக, சூனியம் எடுப்பதாகச் சொல்லிச் சடங்குகள் செய்வது...

கன்னத்தில் அல்லது நாக்கில் அலகு குத்துவது...

பாம்பு, தேள், நாய்க் கடிக்கு மருத்துவம் பார்ப்பதைத் தடுத்து வழிபடக் கட்டாயப்படுத்துவது...

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை மாற்றுவதற்கான பூஜை என மோசடி செய்வது...

நோய்களைக் குணப்படுத்துவதன் பெயரால் குழந்தைகளை அடிப்பது, முள்ளில் நிற்க வைப்பது, உயரத்திலிருந்து கீழே போடுவது...

நாணயத்தை சிவக்கச் சிவக்கத் தீயில் சூடாக்கி வயிற்றில் முத்திரை பதிப்பது...

இவை உள்ளிட்ட கொடுநம்பிக்கைச் செயல்களுக்குத் தடைவிதிக்கும் சட்ட முன்வரைவு கர்நாடக சட்டமன்றத்தில் இன்று (நவ.16) நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடையை மீறுவோருக்கு மூன்று மாதங்கள் வ்ரை சிறைத்தண்டனை, ரூ.5,000 வரையில் அபராதம்.

வாஸ்து, ஜாதக சோதிடம் போன்றவை ‘கர்நாடக மனிதமற்ற தீய நடைமுறைகள், சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்ட முன்வரைவு - 2017’ என்ற இந்தச் சட்டமுன்வரைவுக்குள் கொண்டுவரப்படவில்லை. அவற்றில் சித்திரவதைகள் இல்லை என்பதோ, அல்லது அவற்றிற்கு ஆதரவாகப் பெரிய வட்டாரம் இருப்பதோ காரணமாக இருக்கலாம்.

மத வழிபாடுகள், விழாக்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்குத் தடையில்லை.

சீத்தாராமய்யா அரசுக்குப் பாராட்டுகள். கர்நாடகத்தில் செயல்படும் பகுத்தறிவாளர் அமைப்புகளுக்கு வாழ்த்துகள். பேராசிரியர் எம்.எம். கல்பூர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோருக்கு செவ்வணக்கம்.

“இந்த சட்ட முன்வரைவு இந்துக்களின் நம்பிக்கைகளைத் தாக்குவதாக இருக்கிறது” என்று சில அமைப்புகளைச் சேர்ந்தோர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இந்து மக்களின் கவுரவத்தைப் பாதுகாப்பவர்கள்தானா இவர்கள் என்பதை இந்து மக்களே முடிவு செய்யட்டும்.

முறைப்படி இந்தச் சட்டமுன்வரைவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும. மத்திய அரசு அதற்குப் பரிந்துரைக்க வேண்டும். அது நடக்குமா அல்லது தமிழகத்தின் ‘நீட்’ எதிர்ப்புச் சட்ட முன்வரைவுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்குமா?

15 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. நல்ல பதிவு

    எனது தளத்தில் மேயாத மான் திரை விமர்சனம்

    http://veeduthirumbal.blogspot.com/2017/11/blog-post.html

    ReplyDelete
  7. இப்படி நடந்தால் (உச்சிக்குடுமி நீதி மன்றம் தலையிடாமல் இருந்தால் மட்டுமே), இந்தியா [இலகுவாக] முன்னேறும். வாழ்க நவீன பெரியார்!

    அன்புள்ள
    நம்பள்கி!

    பின்குறிப்பு: ஆம்! நானே தான். எனது பாஸ்வேர்டு எல்லாம் மறந்து விட்டது. இதை எழுதியது நானே தான்!

    ReplyDelete
    Replies
    1. சதீஷ் செல்லத்துரைNovember 20, 2017 at 11:35 AM

      "எனது பாஸ்வேர்டு எல்லாம் மறந்து விட்டது. இதை எழுதியது நானே தான்!"


      அன்பரே நலமாக உள்ளீர்களா .... நீண்ட காலமாக உங்களை காண முடியவில்லை
      மீண்டும் கண்டது மகிழ்ச்சி .. உங்களை பற்றி ஒரு துர்ச்செய்தியை பதிவர்/பத்திரிகையாளர் அமுதவன் சொன்னார் ... ஆனால் அது பொய் என்று இன்று அறியும் போது மிக்க மகிழ்ச்சி

      Delete
    2. மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி

      Delete
    3. சதீஷ் செல்லத்துரை,
      அமுதவன் நல்ல மனிதர் மற்றும் எனது நல்ல நண்பர்; அவரை நான் ""சந்தித்து இல்லை"" என்றாலும் அவர் எனது நலம் விரும்பி. எங்கோ தவறு நடந்துள்ளது--அதை அவர் பகிர்ந்து இருக்கலாம்--தவறு அவர் மேல் நூற்றுக்கு நூறு இருக்க, ---இருக்கவே வாய்ப்பில்லை ---அவ்வளவே

      பின்குறிப்பு:
      ஆம்! நானே தான். எனது பாஸ்வேர்டு எல்லாம் மறந்து விட்டது. இதை எழுதியது நானே தான்!
      அன்புள்ள நம்பள்கி!

      பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
      ஆம்! இப்ப நான் நக்கீரன் பரம்பரை; அதான்....பாட்டு (பதிவு) எழுதுவதை விட பின்னூட்டம் இடுவது எளிது (குற்றம் காண்பதை விட என்றும் படிக்கலாம்).

      Delete
  8. மருத்துவம் செய்யாமல் இயேசு ஜீவிக்கிறார் பிராத்தனைக்கு போக தடை இருக்கா சார் ?

    நிலவழகன் சுப்பையா

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை. ஆனால் அதற்கும் தடை தேவை

      Delete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உனக்கு வேற பிழைப்பே கிடையாதா வெறி பிடித்த மிருகமே?

      Delete